விபரப்பட்டியல் கடித உறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதுவான விபரப்பட்டியல் கடித உறையின் அமைப்பு

விபரப்பட்டியல் கடித உறை (Catalog Envelope) என்பது, கடித உறை வகைகளுள் ஒன்று. இது அகலப்பக்கம் திறந்துள்ள உறையாகும். பணப்பை மூடி எனப்படும் வகையைச் சேர்ந்த மூடியையும், நடுப் பொருத்தும் கொண்டது இவ்வுறை. பல பக்கங்களைக் கொண்ட தடித்த, எடை கூடிய ஆவணம் ஆவணங்களை அனுப்புவதற்கு இதனைப் பயன்படுத்துவர். சஞ்சிகைகள், அறிக்கைகள், விபரப்பட்டியல்கள் போன்றவை இத்தகைய ஆவணங்களுள் அடங்கும்.

பாலிசி உறை[தொகு]

இவ்வகை உறைகளுள் "பாலிசி உறை" எனப்படும். ஒரு வகை உறை காப்புறுதிப் பத்திரங்கள், உயில்கள், ஈட்டுப் பத்திரம் மற்றும் அது போன்ற சட்டம் சார்ந்த ஆவணங்களை அனுப்புவதற்கான உறைகள், அவற்றின் முன்பக்கத்தில் முழு அளவுச் சாளரங்களைக் கொண்டிருப்பதும் உண்டு.

இவ்வகை உள்ள உறைகள் அவற்றின் அளவைப் பொறுத்து எண்கள் மூலம் குறிக்கப்படுகின்றன. இவற்றுள், 1, 1-3/4, 2, 3, 6, 7, 8, 9, 9-1/2, 9-3/4, 10, 10-1/2, 11, 12, 12-1/2, 13-1/2, 14, 14-1/4, 14-1/2, 15, 15-1/2 என்பன அடங்கும்.

தரப்படுத்தப்பட்ட அளவுகள்[தொகு]

பெயர் உறை அளவு
(அங்குலம்)
மிகப்பெரிய
உள்ளடக்க அளவு
#1 6 x 9 5.75 x 8.75
#1 ¾ 6.5 x 9.5 6.25 x 9.25
#2 6.5 x 10 6.25 x 9.75
#3 7 x 10 6.75 x 9.75
#6 7.5 x 10.5 7.25 x 10.25
#7 8 x 11 7.75 x 10.75
#8 8.25 x 11.25 8 x 11
#9 பாலிசி 4 x 9 3.75 x 8.75
#9 ½ 8.5 x 10.5 8.25 x 10.25
#9 ¾ 8.75 x 11.25 8.5 x 11
#10 பாலிசி 4.125 x 9.5 3.875 x 9.25
#10 ½ 9 x 12 8.75 x 11.75
#11 பாலிசி 4.5 x 10.375 4.25 x 10.125
#12 பாலிசி 4.75 x 10.875 4.5 x 10.625
#12 ½ 9.5 x 12.5 9.25 x 12.25
#13 ½ 10 x 13 9.75 x 12.75
#14 பாலிசி 5 x 11.5 4.75 x 11.25
#14 ¼ 11.25 x 14.25 11 x 14
#14 ½ 11.5 x 14.5 11.25 x 14.25
#15 10 x 15 9.75 x 14.5
#15 ½ 12 x 15.5 11.75 x 15.25
"https://ta.wikipedia.org/w/index.php?title=விபரப்பட்டியல்_கடித_உறை&oldid=3206434" இலிருந்து மீள்விக்கப்பட்டது