குல்சாரிலால் நந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்சாரிலால் நந்தா
நடிப்பு இந்தியப் பிரதமர்
பதவியில்
மே 27, 1964 – ஜூன் 9, 1964
முன்னையவர்ஜவஹர்லால் நேரு
பின்னவர்லால் பகதூர் சாஸ்திரி
பதவியில்
ஜனவரி 11, 1966 – ஜனவரி 24, 1966
முன்னையவர்லால் பகதூர் சாஸ்திரி
பின்னவர்இந்திரா காந்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஜூலை 4, 1898
சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)
இறப்புஜனவரி 15, 1998
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்

குல்சாரிலால் நந்தா (Gulzarilal Nanda; 4 சூலை 1898 – 15 சனவரி 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 இல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.

இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997இல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.

நந்தா சூலை 4, 1898 இல் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் இந்து கட்ரி குடும்பத்தில் பிறந்தார். சியால்கோட் தற்போது பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ளது. நந்தா லாகூர், ஆக்ரா மற்றும் அலகாபாத் நகரங்களில் படித்தார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்சாரிலால்_நந்தா&oldid=3519673" இலிருந்து மீள்விக்கப்பட்டது