எதிர் விலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புறத்திருப்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எதிர் விலகு (Off break) என்பது துடுப்பாட்ட வீச்சு வகைகளில் ஒன்றாகும். இது ஓர் எதிர்ச்சுழல் வீச்சாளரின் தாக்கு வீச்சாகும்.[1] இந்த முறையைப் பின்பற்றுவர்கள் எதிர்ச்சுழலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

எதிர் விலகு வீச்சின் மாதிரி இயங்குபடம்

துடுப்பாட்டப் பந்தின் தையல்களின் மீது அனைத்து விரல்களும் இருக்குமாறு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு எதிர் விலகு வீசப்படுகிறது. பந்தை வீசும்போது ஓர் வலது-கை வீச்சாளரின் விரல்கள் தையல்கோட்டின் வலதுபுறமாக சுழற்றும்போது வலப்புறச் சுழல் கொடுக்கப்படுகிறது. பந்து வீசுகளத்தில் பட்டெழும்பும்போது இந்தச் சுழல் பந்தை நேர்கோட்டிலிருந்து, வீச்சாளரின் பார்வையில், வலது புறமாக விலகச்செய்கிறது. ஓர் மட்டையாளரின் பார்வையில் பந்து ஓர் வலது-கை மட்டையாளரின் எதிர்ப்பக்கத்தில் இருந்து நேர்ப்பக்கமாக விலகிச் செல்கிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்_விலகு&oldid=3850698" இலிருந்து மீள்விக்கப்பட்டது