இசுடாக்ஃகோம் மரபொழுங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடாப்பிடியான கரிம மாசுபடுத்திகள் குறித்த இசுடாக்கோம் மரபொழுங்கு
ஒப்பந்த வகைஐ.நா. உடன்பாடு
கையெழுத்திட்டது23 மே 2001
இடம்இசுடாக்ஃகோம், சுவீடன்
நடைமுறைக்கு வந்தது17 மே 2004
நிலை50 நாடுகளாவது ஏற்றுக்கொண்டபின்னர் 90 நாட்களிலிருந்து செயலாக்கம்
கையெழுத்திட்டோர்151
தரப்புகள்173
வைப்பகம்ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்
மொழிகள்அராபிக், சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியன், இசுப்பானியம்
உறுப்பினர் நாடுகள்

விடாப்பிடியான கரிம மாசுபடுத்திகள் குறித்த இசுடாக்ஃகோம் மரபொழுங்கு (Stockholm Convention on Persistent Organic Pollutants) சில மாசு விளைவிக்கும் கரிமவேதிகளை தடை செய்ய பன்னாட்டு உடன்பாடாகும். இசுடாக்ஃகோம் நகரில் மே 22, 2001 அன்று இந்த உடன்பாடு கையெழுத்தானது. மே 17, 2004 முதல் செயலாக்கத்திற்கு வந்தது. இதில் 124 உறுப்பினர்களும் 151 நாடுகளும் கையெழுத்திட்டுள்ளனர்.இதன் தலைமை செயலகம் துவக்கத்தில் இசுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. மே 6, 2005இல் உருகுவே நாட்டில் நடந்த உறுப்பினர் மாநாட்டில் அங்கேயே நிலையான செயலகம் நிறுவ முடிவானது. இது கொள்கை வடிவமைத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் மீளாய்வு செய்தல் ஆகியவற்றிற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுவதையும் தரவுகளை சேகரிப்பதிலும் உறுப்பினர் நாடுகளிடையே ஒருங்கிணைக்கவும் வகை செய்கிறது. இதன் ஆண்டு செலவுத்தொகை 5 மில்லியன் சுவிசு பிராங்குகள் ஆகும்.

வெளியிணைப்புகள்[தொகு]