சரபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவன் நரசிம்மரை அடக்குகின்ற காட்சி - சிறீலங்காவில் உள்ள முன்னேசுவரம் கோவிலில்உள்ள சிலைவடிவம்

சரபா அல்லது சரபம் என்பது ( கன்னடம்: ಶರಭ) இந்துதொன்மவியலில் பகுதி சிங்கமாகவும் பகுதி பயங்கர பறவையாகவும் உள்ள ஓர் விலங்கு. சில சமசுகிருத இலக்கியங்களில் இது எட்டு கால்களை உடைய, சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் சில இலக்கியங்களில் எட்டு காலுடைய மானாகவும் விவரிக்கப்படுகிறது.[1][2] சரபம் என்பது சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எட்டுக்கால் பறவை (எண்காற்புள்) ஆகும். தமிழ் இலக்கியங்களில் இது சிம்புள் எனவும் போற்றப்பட்டுள்ளது. நான்கு காலும் பறக்கும் இறகுகளும் கொண்டு கோயில் சிற்பங்களில் காணப்படும்.

திருமால் நரசிங்க உருவம் [3] தாங்கி இரணியனைக் கொன்றார். அதன் செருக்கால் உலகை அழிக்கலானார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டுக்கொண்டனர். சிவன் சரபம் என்னும் பறவை வடிவம் கொண்டு நரசிங்கத்தின் கொட்டத்தை அடக்கினார். இது வடநூல் புராணக் கதைகளில் இப்பறவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதை சரப புராணம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வேறு கற்பனைகள்[தொகு]

  • சரபம் என்னும் பறவை 8 கால்கள் கொண்டது. சிங்கத்தைக் கொல்லும் வலிமை பெற்றது.[4]
  • 20 தலைகள் கொண்டது.[5]
  • காளமேகப் புலவர் பாடல்
மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!
கருநாடக அரசு சின்னம் -இருபுறமும் சிவப்புப்பிடரி கொண்ட மஞ்சள்நிற சிங்க யானை சரபா

சரபா கருநாடக அரசின் சின்னமாகவும் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் கருநாடகா அரசு சோப்பு தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது.

பெருங்கதை நூல் தரும் செய்திகள்[தொகு]

சரபம் என்னும் பறவை செந்நிற ஆடையைப் போர்த்திக்கொண்டு மேல்மாடி முற்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் மிருகாபதி என்பவளைப் புலராத தசைப்பிண்டம் எனக் கருதித் தூக்கிச் சென்றது. காட்டில் வைத்து உண்ணத் தொடங்குகையில் மிருகாபதி விழித்துக்கொண்டமையால் பெண் என அறிந்து உண்ணாமல் பறந்து போய்விட்டது. கண்டப்புள், கண்டபேரண்டம், கருடப் பறவை என்பன சரபப் பறவையின் வேறு பெயர்கள்.[6]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

மேற்கோள்கள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Pattanaik, Devdutt (2006). Shiva to Shankara: decoding the phallic symbol. Indus Source. பக். 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8188569046. http://books.google.co.in/books?id=Oka4ekgGDRoC&pg=PT29&dq=Sharabha&ei=3zRFS4m2FIjKlQToibTrDQ&cd=9#v=onepage&q=Sharabha&f=false. 
  2. "शरभ". Monier Williams Sanskrit-English Dictionary. p. 1057. Archived from the original on 26 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 18 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. நரசிங்க அவதாரம்
  4. சரபம் எட்டுக்கால் பறவை
  5. 20 தலைகள் கொண்டது
  6. உ. வே. சாமியாதையர் நூல்நிலையம் ((ஆறாம் பதிப்பு 2000) முதல் பதிப்பு 1934 (வெளியீட்டு எண் 40)). கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை (4 தொகுதி). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு.  உ வே. சா. முன்னுரை, பக்கம் 7

காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரபா&oldid=3929618" இலிருந்து மீள்விக்கப்பட்டது