ஓருறுப்புக் கோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினியியலில், ஓருறுப்புக் கோலம் என்பது கணித ஒருற்றுப்பு கருத்துருவை நிறைவேற்றும் வடிவமைப்புக் கோலம் ஆகும். ஓருறுப்புக் கோலம் ஒரு வகுப்பில் இருந்து ஒரு தருணத்தில் ஒரே ஒரு பொருள் மட்டுமே உருவாக்கமுடியும் என்று வரையறை செய்யும். ஒரு ஒருங்கியத்தில் குறிப்பீட்ட ஒரு வகுப்பின் ஒரே ஒரு பொருள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் போது இந்தக் கோலம் பயன்படுகிறது.

பொதுவாக ஓருறுப்புக் கோலம் அணுகுமுறையில் ஒரு வகுப்பை உருவாக்கும் பொழுது அளவுருவை(Parameter) தவிர்க்க வேண்டும், இல்லையேல் வேறொரு மதிப்பை கொடுத்து இன்னொரு தருணத்தில் அதை பொருளை உருவாக்கும் முயற்சி நடக்கும்.

பயன்பாடுகள்[தொகு]

பொதுவாக ஒரே ஒரு முறை ஒரு வகுப்பிலிருந்து ஒரே ஒரு பொருளை மட்டும் உருவாக்கி பயன்படுத்தப்படும் அனைத்து இடங்களிலிலும் இது பயனுள்ளதாக இருக்கும், எடுத்துக்காட்டாக:

  • நிகழ்வுகளை பதிவு செய்ய (LogManager)
  • கட்டமைப்பு அமைப்புகள் (ConfigurationSettings)

சி# நிரல்மொழியில் எடுத்துக்காட்டு[தொகு]

public sealed class Singleton
{
    private static Singleton instance = null;
    private static readonly object padlock = new object();

    Singleton()
    {
    }

    public static Singleton Instance
    {
        get
        {
            lock (padlock)
            {
                if (instance == null)
                {
                    instance = new Singleton();
                }
                return instance;
            }
        }
    }
}
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓருறுப்புக்_கோலம்&oldid=1547053" இலிருந்து மீள்விக்கப்பட்டது