திருமுருகன்பூண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமுருகன்பூண்டி நகராட்சி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் திருமுருகன்பூண்டி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

31,528 (2011)

2,174/km2 (5,631/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14.5 சதுர கிலோமீட்டர்கள் (5.6 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thirumuruganpoondi

திருமுருகன்பூண்டி (ஆங்கிலம்:Thirumuruganpoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். திருப்பூர் மாநகராட்சிக்கு மிக அருகாமையில் உள்ள வளர்ந்து வரும் நகராட்சி ஆகும். இந்நகராட்சியில் சிற்பக்கலை கூடங்கள் மூலம் பல்வேறு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் இங்குள்ளது. இது வரலாற்றில் இடைக்கால ஆட்சியில் ஆறைநாடு ஆட்சிப் பரப்புக்கு உட்பட்டிருந்தது. [3]

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்[தொகு]

16 அக்டோபர் 2021 அன்று திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.[4][5]

அமைவிடம்[தொகு]

திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு தெற்கில் திருப்பூர் 12 கிமீ; வடக்கில் அவிநாசி 5 கிமீ; கிழக்கில் பெருந்துறை 45 கிமீ; கோயம்புத்தூர் 52 கிமீ தொலைவில் உள்ளது.

நகராட்சி அமைப்பு[தொகு]

14.5 சகிமீ பரப்பும், 22 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 132 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 8,789 வீடுகளும், 31,528 மக்கள்தொகையும் கொண்டது.[7]

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்[தொகு]

இங்கு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகிய திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக இது விளங்குகிறது. சித்தபிரமை, பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கொங்கு மண்டல சதகம், பாடல் 15, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 14
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  6. திருமுருகன்பூண்டி பேரூராட்சியின் இணையதளம்
  7. Thirumuruganpoondi Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுருகன்பூண்டி&oldid=3861296" இலிருந்து மீள்விக்கப்பட்டது