காஞ்சி சங்கர மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சி சங்கர மடம் (Kanchi Sankara matha) தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஓர் இந்து சமய துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆதி சங்கரர் இங்கு சமாதியடைந்ததாகவும் இந்த மடத்தை நிறுவியதாகவும் கூறப்படுகிறது. இந்த மடத்தின் தலைவர்கள், பீடாதிபதிகள், நான்கு (சிருங்கேரி சாரதா மடம், துவாரகை மடம், கோவர்தன மடம், ஜோஷி மடம்) சங்கர மடத் தலைவர்களைப் போலவே, "சங்கராச்சாரியர்" என்றப் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

காஞ்சி மடம் கும்பகோணத்தில் இருந்த 19ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புகழ்பெறத் துவங்கியது. இதனை சிருங்கேரி சங்கர மடத்தின் கிளையாகக் கருதுகின்றனர்[1][2][3].ஆதி சங்கரர் எழுதிய மடாம்நாய சேது என்ற புத்தகத்தில், தான் உருவாக்கிய நான்கே மடங்களின் பட்டியலில் காஞ்சி மடம் என்று எந்த குறிப்பும் இல்லை[4] என்பதால், காஞ்சிமடம் ஒரு சங்கர மடமே அல்ல என்றும், சிருங்கேரி மடத்தின் கும்பகோணம் கிளை என்றும் வரலாற்று தரவுகளும் நான்கு சங்கர மடங்களும் (சிருங்கேரி சாரதா மடம், துவாரகை மடம், கோவர்தன மடம், ஜோஷி மடம்) தெரிவிக்கின்றன. 1839ல்[5][6][7] தான் அன்றைய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் மற்றும் தஞ்சாவூர் மராட்டிய சரபோசி, தஞ்சாவூர் சிவாஜி ஆதரவிலும் தங்களை போட்டி சங்கரச்சாரியாராக அறிவித்துக் கொள்ள துவங்கினர் என்பது மடத்தின் ஆவணங்கள் மூலம் தெரிகிறது.[1]

[8][9][10] இன்று தென்னிந்தியாவில் உள்ள முதன்மையான இந்து சமய அமைப்புகளில் ஒன்றாக இந்த மடம் விளங்குகிறது.

சர்ச்சைகள்[தொகு]

1987இல் செயந்திர சரசுவதி தனது சாதுர்மாசிய சன்னியாச விரதத்தை உடைத்து காவி, தண்டம், கமண்டலம் ஆகியவற்றை உதறி தலைக்காவிரி தப்பி ஓடியபோது, அவருக்கு மாற்று வாரிசாக விசயேந்திர சரசுவதி, சந்திரசேகர சரசுவதியால் நியமிக்கப்பட்டார். பின்னர் செயந்திரர் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மடத்தில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

நவம்பர் 2004ஆம் ஆண்டு இந்த மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த செயந்திர சரசுவதி மற்றும் விசயேந்திர சரசுவதி சுவாமிகள் இருவரும் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதானதை அடுத்து இம்மடத்திற்கு இழுக்கு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வழக்கிலிருந்து நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.விசயேந்திர சரசுவதியும், அவர் தம்பி ரகுவும் நடிகை சுவர்ணமால்யா கணேஷுடன் தொடர்பிலிருந்தது காவல்துறை விசாரனையில் தெரியவந்தது[11].

காஞ்சி சங்கரமட பீடாதிபதியான செயந்திர சரசுவதி தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்டதாகக் அனுராதா ரமணன் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். சங்கரமடத்தின் சார்பில் ஒரு பக்தி பத்திரிகை துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் ஆபாசமாக பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.[12] இதனால் அதிரச்சியடைந்த தான் உடனே அங்கிருந்து வெளியேறியதாகவும். பின்னர் இதை மையமாக கொண்டு ஒரு வார இதழில் தொடர் ஒன்று எழுதியதாகவும் கூறினார்.[13]

சிருங்கேரி மடத்துக்குக் கட்டுப்பட்ட குருக்கள் பூசை செய்யும் இராமேசுவரம் இராமேசுவரம் இராமநாத சுவாமி கோயில் கருவறைக்குள் எச்.இராசா, சு.குருமூர்த்தி துணையுடன் சிவாகமங்களை மீறி அடாவடியாக நுழைந்து பூசை செய்தார் சன்னியாசியான விசயேந்திரர்[14] கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த ஆதி சங்கரர் கொடுத்திருந்த ஸ்படிக லிங்கம் இவரால் உடைக்கப்பட்டதாகவும், களவாடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன[15].

வரலாறு[தொகு]

காஞ்சி சங்கரமடத்தின் தொன்மை, வரலாறு குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இந்த மடத்தின் அலுவல்முறை வரலாற்றின்படி ஆதி சங்கரர் இந்த மடத்தை நிறுவியதாகவும் அவரைத் தொடர்ந்து 69ஆவது மடத்தலைவராக பொறுப்பாற்றுவதாகவும் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து உள்ளதாகவும் நிறுவப்படுகிறது[16]. மடத்தின் வேறுசில பரப்புரைகளிலும் ஆதி சங்கரர் காஞ்சிக்கு வந்திருந்து சர்வக்ஞா பீடம் என்று மடம் நிறுவியதாகவும் இங்கு மரணமடைந்ததாகவும் அறியப்படுகிறது. பிற மூலங்கள் சங்கரரின் இறப்பு இமாலயத்தில் கேதார்நாத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.[17]

வேறு சிலர் இந்த மடம் அண்மையில் 18ஆம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் சிருங்கேரி மடத்தின் கிளையாக நிறுவப்பட்டு தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கியது என்கின்றனர்.[18][19] கும்பகோணத்தில் இருந்த மடத்தலைவர்கள் காஞ்சி காமாட்சி கோவிலின் நிர்வாகத்தை கைக்கொள்ளவே தங்கள் மடத்தை 1842க்கும் 1863க்கும் இடையில் காஞ்சிக்கு இடம் பெயர்த்தனர். இதுவே காஞ்சி மடத்தின் துவக்க காலம் என்றும் கூறுகின்றனர்.[20]

காஞ்சி மடத்தின் கூற்றின்படி 18ஆம் நூற்றாண்டில் இடம் பெயர்ந்ததற்கான காரணம் அய்தர் அலியின் படையெடுப்பு ஆகும். மேலும் அவர்கள் ஆதி சங்கரர் வந்தமைக்கும் மடம் 2500 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டிருப்பதற்கும் காஞ்சியைச் சுற்றியுள்ள கோவில்களில் கல்வெட்டுகள் தொல்லியல் சான்றுகளாக உள்ளதாக கூறுகின்றனர். மடத்தின் கூற்றுப்படி காஞ்சியிலுள்ள சன்னிதி கோவில் தெருக்கட்டிடம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாக நிறுவப்பட்டாலும் இதனை மறுப்போரும் உள்ளனர்.

சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் பீடாதிபதியாக பல்லாண்டுகள் இருந்தார்.[21]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://archive.org/details/KanchiMathTamilRefutation
  2. Guruswamy, Mohan (2021-11-30). "Mohan Guruswamy | The Kumbakonam of the Kanchi Shankaracharya". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  3. https://archive.org/details/KanchiKamakotiMathAMyth
  4. "Mathamnaya". web.archive.org. 2016-09-10. Archived from the original on 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. "ஆதி சங்கரர் நிறுவியதா காஞ்சி சங்கரமடம்? - முரண்படும் தகவல்கள்". BBC News தமிழ். 2018-03-01. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  6. "Dwarikapeeth Shankaracharya asks Kanchi seer to step down". www.outlookindia.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  7. "Badrinath shrine dispute ends". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  8. आदि शंकराचार्य जी का कांची पीठ से क्या कोई संबंध है ?, பார்க்கப்பட்ட நாள் 2021-12-18
  9. https://archive.org/details/SringeriyaKanchiya
  10. K.R.Venkataraman, Krishnaswami Aiyar (2021-12-18). "The Truth About the Kumbhakonam Mutt". archive.org.
  11. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  12. "சர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  13. Akhilan, Mayura (2018-02-28). "சர்ச்சைகளுடன் வாழ்ந்து மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  14. "அத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…!". Aram Online (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
  15. Savukku. "ராமநாத சுவாமி கோவிலில் குருமூர்த்தி உடைத்த பழங்கால ஸ்படிக லிங்கம்" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
  16. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  17. [2] [3]
  18. The Curious Case of the Missing Monk, The Illustrated Weekly of India, issue dated September 13, 198
  19. history of the Kanchi math[தொடர்பிழந்த இணைப்பு]
  20. Mattison Mines, Vijayalakshmi Gourishankar, Leadership and Individuality in South Asia: The Case of the South Indian Big-Man, Journal of Asian Studies, Vol. 49, No. 4 (Nov., 1990), pp. 761-786.
  21. ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வரலாறு http://www.srikanchimahaswami100.org/SriMahaSwamyCharitram__2__1_edit.pdf பரணிடப்பட்டது 2012-02-14 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சி_சங்கர_மடம்&oldid=3576918" இலிருந்து மீள்விக்கப்பட்டது