இயற்கை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்கை வரலாறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை மற்றும் இயல்புகளைக் கவனிக்கும் அறிவியல் ஆய்வினைக் குறிக்கும். இவை எந்தவொரு சோதனையும் நிகழ்த்தாமல் அவற்றின் இயற்கைப்போக்கில் பொறுமையாக பலகாலம் கவனிப்புப் பணிகளில் ஈடுபட்டு தொகுத்த அறிவியல் கூறாகும். கல்விசார்ந்த இதழ்களை விட அறிவியல் இதழ்களைக் கொண்டே இந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.[1] இயற்கை அறிவியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள இயற்கை வரலாறு ஆய்வு இயற்கை பொருள் மற்றும் உயினங்களின் இயல்பு குறித்த கல்வியாகும்.

இயற்கை வரலாற்றைக் கற்ற ஒருவர் இயற்கையாளர் அல்லது "இயற்கை வரலாற்றாளர்" என்று அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Natural History WordNet Search, princeton.edu.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_வரலாறு&oldid=3891766" இலிருந்து மீள்விக்கப்பட்டது