பரட்டின் உணவுக்குழாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரட்டின் உணவுக்குழாய்
அகநோக்கி மூலம் எடுக்கப்பட்ட பரட்டின் உணவுக்குழாயின் படம், இங்கே சிவப்பாகத் தெரிவது உருமாற்றத்துக்குட்பட்ட மேலணி இழையங்கள் உள்ள பகுதி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல், அறுவைச் சிகிச்சை
ஐ.சி.டி.-10K22.7
ஐ.சி.டி.-9530.85
ம.இ.மெ.ம109350
நோய்களின் தரவுத்தளம்1246
மெரிசின்பிளசு001143
ஈமெடிசின்radio/73
பேசியண்ட் ஐ.இபரட்டின் உணவுக்குழாய்
ம.பா.தD001471

பரட்டின் உணவுக்குழாய் (Barrett's Esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை.

இயல்பான நிலையில் உணவுக்குழாயை செதின்மேலணிக் கலங்கள் உருவாக்குகின்றன, இவை பரட்டின் உணவுக்குழாயில் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் பெறுகின்றன. நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு ஏற்படலாம்.

இந்நோய்க்கான முக்கிய காரணியாக பின்னோட்ட உணவுக்குழாய் அழற்சி விளங்குகின்றது.[1] நெஞ்செரிவுக்கு (இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ) மருத்துவ சிகிச்சை பெறமுற்படுவோரில் 5–15% நோயாளிகள் பரட்டின் உணவுக்குழாய் உடையோராக உள்ளனர், எனினும் பெரும்பாலானோர்க்கு நோயின் அறிகுறிகள் தென்படுவதில்லை. பரட்டின் உணவுக்குழாய் ஒரு புற்றுநோய்க்கு முன்னிலை நோயாகும். இந்நோயை அறுதியிட உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் உணவுக்குழாய் அவதானிக்கப்படுகின்றது. இதன்போது நுணித்தாய்வுக்காக மேலணி இழையங்கள் எடுக்கப்படுகின்றன. நுண்ணோக்கி ஆய்வின் மூலம் இழைய உருமாற்றம் உறுதி செய்யப்படுகின்றது.[2][3]

இந்த நிலையை 1950இல் நோர்மன் பரட் (1903–1979) என்பவர் விவரித்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Stein H, Siewert J (1993). "Barrett's esophagus: pathogenesis, epidemiology, functional abnormalities, malignant degeneration, and surgical management". Dysphagia 8 (3): 276–88. doi:10.1007/BF01354551. பப்மெட்:8359051. https://archive.org/details/sim_dysphagia_summer-1993_8_3/page/276. 
  2. Shaheen NJ, Richter JE (March 2009). "Barrett's oesophagus". Lancet 373 (9666): 850–61. doi:10.1016/S0140-6736(09)60487-6. பப்மெட்:19269522. 
  3. Koppert L, Wijnhoven B, van Dekken H, Tilanus H, Dinjens W (2005). "The molecular biology of esophageal adenocarcinoma". J Surg Oncol 92 (3): 169–90. doi:10.1002/jso.20359. பப்மெட்:16299787. 
  4. BARRETT NR (October 1950). "Chronic peptic ulcer of the oesophagus and 'oesophagitis'". Br J Surg 38 (150): 175–82. doi:10.1002/bjs.18003815005. பப்மெட்:14791960. https://archive.org/details/sim_british-journal-of-surgery_1950-10_38_150/page/175. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Barrett's esophagus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரட்டின்_உணவுக்குழாய்&oldid=3521391" இலிருந்து மீள்விக்கப்பட்டது