பிஜு பட்நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஜு பட்நாயக்
2018 இந்திய அஞ்சல் தலையில் பட்நாயக்
3வது ஒடிசா முதலமைச்சர்
பதவியில்
5 மார்ச்சு 1990 – 15 மார்ச்சு 1995
ஆளுநர்யக்யா தத் சர்மா
சையித் நூருல் அசன்
பி. சத்ய நாராயண் ரெட்டி
முன்னையவர்ஏமானந்தா பிசுவால்
பின்னவர்ஜானகி பல்லப் பட்நாயக்
பதவியில்
23 சூன் 1961 – 2 அக்டோபர் 1963
ஆளுநர்ஒய். என். சுக்தாங்கர்
அஜுதியா நாத் கோஸ்லா
முன்னையவர்ஹரேகிருஷ்ணா மகதாப்
பின்னவர்பைரேன் மித்ரா
உருக்கு, சுரங்கம் மற்றும் நிலக்கரி அமைச்சர்
பதவியில்
30 சூலை 1979 – 14 சனவரி 1980
பிரதமர்சரண் சிங்
முன்னையவர்காலியிடம்
பின்னவர்பிரணப் முகர்ஜி
பதவியில்
26 மார்ச்சு 1977 – 15 சூலை 1979
பிரதமர்மொரார்ஜி தேசாய்
முன்னையவர்சந்திரஜித் யாதவ் (இணை அமைச்சராக)
பின்னவர்காலியிடம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977–1985
முன்னையவர்சுரேந்திர மொகந்தி
பின்னவர்சரத் குமார் தேப்
தொகுதிகேந்திராபடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிஜயானந்தா பட்நாயக்

(1916-03-05)5 மார்ச்சு 1916
கட்டக், ஒரிசா, பிரித்தானிய இந்தியா
(தற்போது ஒடிசா, இந்தியா)
இறப்பு17 ஏப்ரல் 1997(1997-04-17) (அகவை 81)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஜனதா தளம் (1989–1997)
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா கட்சி (1977–1989)
உத்கல் காங்கிரசு (1969–1977)
இந்திய தேசிய காங்கிரசு (1946–1969)
துணைவர்கியான் பட்நாயக்
பிள்ளைகள்பிரேம் பட்நாயக்
நவீன் பட்நாய்க்
கீதா மேத்தா
உறவினர்கள்சோனி மேத்தா (மருமகன்)
முன்னாள் கல்லூரிஇராவன்சா கல்லூரி
தொழில்வான்வெளிப் பொறியாளர், வானோடி, அரசியல்வாதி, ஜவகர்லால் நேருவின் பாதுகாப்பு ஆலோசகர், தொழிலதிபர், பண்ணுறவாண்மையாலர்
விருதுகள்
  • பிந்தங் ஜச உடமா (1995)
  • ஆர்டர் ஆஃப் லெனின்

பிஜு பட்நாயக் (5 மார்ச் 191617 ஏப்ரல் 1997) இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பிஜு பாபு எனவும் அறியப்படுகிறார். மார்ச் 5, 1916 அன்று (இந்தியா) ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் பிறந்த பிஜயானந்தா பட்நாயக் லக்‌ஷ்மிநாராயண் மற்றும் ஆஷ்லதா பட்நாயக்கின் மகனாவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கு[தொகு]

கட்டாக்கில் உள்ள ரவென்ஷா கல்லூரியில் அவர் அறிவியல் கல்வி பெற்றார். அவரது மாணவப் பருவ நாட்களில் விளையாட்டுகளில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டவர், பல்கலைக்கழக கால்பந்து மற்றும் ஹாக்கி அணிகளுக்குத் தலைவராகவும் இருந்தார். ஏரோநாட்டிகல் டிரைய்னிங் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவில் வானூர்தியியல் பாடத்தில் கல்வி பயின்றார். இந்திய தேசிய ஏர்வேஸில் சேர்ந்த அவர், 1940 முதல் 1942 வரையிலான போரிலும் கலந்துகொண்டார். 1940-42 ஆண்டுகளில் நடந்த போரின் போது வான் வழிப் போக்குவரத்து ஆணையின் தலைவராகவும் பணியாற்றினார். அதற்குப்பின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடன் அவரது நடவடிக்கைகள் காரணமாக 1945 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார். மகாத்மா காந்தி, கோபபந்து தாஷ் மற்றும் மதுசூதன் தாஸ் ஆகியோரின் மூலம் ஈர்க்கப்பட்ட பட்நாயக் இந்திய சுதந்திர இயக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நேபாளிய ஜனநாயக இயக்கத்துடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்த பட்நாயக், 1947 ஆம் ஆண்டில் டச்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தோனேசியா நடத்திய தீவிரமான போராட்டத்தில் அவர்களுக்கு உதவும் கருவியாகவும் செயல்பட்டார். இந்தோனேசியா அதன் உயர்ந்த குடிமுறை சார்ந்த விருதான பூமி புத்ராவை (நாட்டின் குடிமகன் விருது) பட்நாயக்கிற்கு வழங்கியது. ஒரு இந்தியர் இறந்ததிற்காக மற்றொரு நாட்டின் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது இவர் ஒருவருக்காக மட்டுமே. "இந்தியாவின் கடற்கொள்ளையர்" என பட்நாயக்கை நேரு பாசமாக அழைப்பார். இந்தியப் நாடாளுமன்றத்தில் அவரது காலத்தின் போது, "தைரியம், இயக்கத்தன்மை மற்றும் பணிக்குரிய சுறுசுறுப்பு ஆகியவற்றை பிஜு பட்நாயக் கொண்டுள்ளார்" என நேரு கூறினார். இந்திய மாநிலமான ஒரிசாவின் முதலமைச்சராக இருமுறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் முதன் முறையும், 1990 முதல் 1995 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையும் முதலமைச்சராக இருந்தார்.

இந்தோனேசிய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு[தொகு]

பிஜு பட்நாயக் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற போது நேருவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நேருவின் நம்பகமான நண்பர்களில் இவரும் ஒருவரானார். பண்டைய காலங்களில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துடன் பாரம்பரியத் தொடர்புகள் வைத்திருந்த இந்தோனேசிய மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு நேரு பரிவு காட்டினார். ஜப்பானியர்கள் மூலமாக இந்தோனேசியா கைப்பற்றப்பட்ட போது, 1816 முதல் 1941 ஆம் ஆண்டு வரை டச் ஆளுமையின் கீழ் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் வீழ்ச்சியடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 17, 1945 அன்று இந்தோனேசிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூலமாக இந்தோனேசியாவின் சுதந்திரம் முடிவு செய்யப்பட்டது. இந்த நாடுகளின் மீது மீண்டும் ஆளுமையைக் கொண்டு வர டச்சு முயற்சித்தது, மேலும் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல்களையும் ஏற்படுத்தத் தொடங்கியது. ஜனாதிபதியாக டாக்டர் சுக்கரனோவின் புதிய அரசாங்கத்தின் கீழ், அரசாங்கத்தின் மேல் ஆதரவைப் பெறுவதற்காக வலிமை மிக்க கொள்கைப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். டாக்டர் சுக்கரனோவின் நம்பிக்கைக்கு பாத்திரமான துணைநிலைப் படை அதிகாரியான டாக்டர் ஜாஹ்ரிர் 14 நவம்பர் 1945 அன்று இந்தோனேசியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், இந்தியா அரசாங்கத்தின் இடைப்பட்ட தலைவராகவும் இருந்த நேருவுடன் அவர் நட்புறவுடன் இருந்தார். ஜூலை 1946 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் மறுசீரமைவுக்காக இந்தியாவின் மூலம் அனுப்படும் ஆடைவகைகள், விவசாயக் கருவிகள், டயர்கள் மற்றும் பிற பொருள்களைக்கு மாற்றாக 40,00,000 டன்கள் அரிசியை வழங்குவதாக இந்தோனேசிய அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

மார்ச் 23, 1947 அன்று, முதல் ஆசிய நாடுகளுக்கு இடையே ஆன கலந்தாய்விற்கு 22 ஆசிய நாடுகளுக்கு நேரு அழைப்பு விடுத்தார், இதில் முக்கியமாக ஜஹ்ரீருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மார்ச் 25 அன்று, டச்சுடனான ஒப்பந்தம் நிறைவு பெற்ற பிறகு கலந்தாய்வில் அவர் உரையாற்றினார். டச்சு பொய்யான காரணங்களைக் கூறி சிறியதாய் சிக்கல்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தது. இறுதியாக 21 ஜூலை 1947 அன்று இந்தோனேசியாவின் மேல் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுத்தனர். உடனடியாய் ஜனாதிபதி சுக்கரனோ, ஜாஹ்ரீருடன் கலந்தாலோசித்து, டச்சுக்கு எதிராக சர்வதேச பொது கருத்தை உருவாக்கும் படி கூறி அவரை நாட்டை விட்டுச் செல்லும் படி ஆணையிட்டார், மேலும் UNO முன்பாக இந்த விவகாரத்தை ஏற்கும் படி நட்பு நாடுகளை வேண்டினார். இந்தோனேசியக் கடல் மற்றும் வான்வழி மார்க்கங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டச்சிடம் இருந்து அதிகாரத்தைப் பெற அவர் முயற்சித்தார், ஆனால் அதில் அவர் வெற்றிபெற முடியவில்லை. மேலும் அவர் கடுங்கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த இக்கட்டான நிலைமையில் அவருக்கு உதவ நேரு முன்வந்தார். இந்தப் பொறுப்பை அவர் கைதேர்ந்த விமான ஓட்டியும், சாகசங்கள் புரிவதில் அதிக விருப்பம் கொண்டவருமான பிஜு பட்நாயக்கிடம் ஒப்படைத்தார். பிஜு பட்நாயக் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கையில் இறங்கினார். கலிங்க வரலாற்றை வாசிப்பதில் பேரார்வமிக்கவராக இருந்ததன் காரணமாக, முற்காலத்தில் கலிங்காவும் இந்தோனேசியாவும் எவ்வாறு கலச்சார ரீதியாக நீடித்திருந்த நட்புறவைக் கொண்டிருந்தனர் என்பதை பிஜு அறிந்திருந்தார், மேலும் இந்தோனேசிய மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் இழந்திருந்த பகுதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பு அமைந்ததையும் அவர் அறிந்திருந்தார். அனைத்து இடர்களையும் அவர் துணிவுடன் கடந்தார். அவர் ஜாவாவுக்கு பறந்து சென்று, 22 ஜூலை 1947 அன்று ஜாவா தீவுகளில் இருந்து சூல்தான் ஜாஹ்ரீரை அவரது சொந்த டகோட்டாவைக் கொண்டு சிங்கப்பூர் வழியாக 24 ஜூலை அன்று இந்தியாவுக்கு கூட்டி வந்தார். இறுதியில் அவரது இந்தத் திட்டத்தில் ஜாஹ்ரீர் வெற்றியடைந்தார். பிஜு பட்நாயக்கின் உன்னதமான மற்றும் வீரஞ்செறிந்த செயல்கள் இந்தோனேசிய அரசாங்கம் மூலமாக சரியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரது வீரஞ்செறிந்த செயல்பாட்டிற்கு, இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பூமி புத்ரா' விருது அளிக்கப்பட்டது, வெளிநாட்டவர்களுக்கு இவ்விருதை அவர்கள் தருவது மிகவும் அரிதாகும்.

காஷ்மீர் நடவடிக்கையில் பங்கு[தொகு]

1947 ஆம் ஆண்டு வரலாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜம்மு காஷ்மீர் நடவடிக்கையில் பிஜு பட்நாயக் முக்கியப் பங்காற்றினார். ஆக்ஸ்ட் 1947 அன்று, இந்தியா ஆட்சிநிலையைப் பெற்றது, இதன் விளைவாக முன்பு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மாநிலங்கள் சுதந்திரமடைந்தன. இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையப்போவதாக அவர்கள் முடிவெடுத்தனர். காஷ்மீரின் ராஜா காஷ்மீரை சுதந்திரமாக ஆட்சி புரிய விரும்பினார். ஆனால் காஷ்மீரை 22 அக்டோபர் அன்று பாகிஸ்தான் பகுதியினர் தாக்கியபோது பிரச்சினை தொடங்கியது. அவர் விரைவாக அமைச்சர் குழுவை அழைத்து காஷ்மீர் இந்தியாவுடன் சேர்வதை ஏற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவெடுத்தார். 26 அக்டோபர் அன்று, ராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அச்சமயம் பாகிஸ்தான் காஷ்மீர் பிரதேசத்தின் பெரும்பகுதியைப் பிடித்திருந்தது, மேலும் ஸ்ரீநகரைப் பிடிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருந்தது.

மிகவும் குறைவான நேரத்தில் எதிரிப் படையினரை தடுத்து நிறுத்துவதற்கு போர் படையைத் திரட்ட வேண்டி இருந்தது. ஒரு மணிநேரத் தாமதம் கூட நமது தேசத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அமையும். நேரமின்மை காரணமாகவும், தகவல் தொடர்பில் கடினம் இருந்ததாலும் படைகளை தரைவழியாக அனுப்புவதில் சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தன. வான்மார்க்கமாக படைகளை அனுப்புவது மட்டுமே சாத்தியக்கூறாக இருந்தது. மீண்டும் அது எளிய பணியாக இல்லை. பள்ளத்தாக்குகள் மிகவும் அதிகமான முகப்புகளைக் கொண்டிருந்தன, மேலும் பறப்பதற்கு மிகவும் கடினமாகவும் இருந்தது. இந்திய விமானங்கள் பனியில் உறைவதில் இருந்து தடுக்கும் கருவியையோ, அதிக உயர்த்தில் பறப்பதற்கு கண்டிப்பாக தேவையான ஆக்ஸிஜன் அமைப்பையோ அவர்களுக்கு வழங்கினர். ஸ்ரீநகரின் விமான தளம் நமக்கு சொந்தமாக உள்ளதா அல்லது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு விட்டதா என்பதும் சரியாகத் தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தப் போர் மிகவும் அச்சம் விளைவிக்ககூடியதாக இருந்தது. கட்டுக்கு அடங்காத எதிரிக்கு சாதகான சூழ்நிலையை ஏற்று நடப்பதற்கு தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட சிறப்பான, துணிச்சலான விமான ஓட்டிகள் தேவைப்பட்டனர்.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், பிஜு பட்நாயக் பங்கேற்று சீற்றமுடன் தேசத்திற்கு பணியாற்றத் தயாரானார். மற்ற எதைக் காட்டிலும் அவரது தாய்நாடு அவருக்கு முக்கிய ஒன்றாக இருந்தது. அவர் இந்தப் பணியை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டார். அவரது முயற்சிகள் வெற்றியடைந்தன. 27 அக்டோபர் 1947 10.00 மணி அளவில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் முதல் காலாட்படையினர் அணியை அவரால் இறக்கி விட முடிந்தது.

சுதந்திர இந்தியாவில் அரசியல்[தொகு]

பட்நாயக்கின் அரசியல் யோசனைகளானது சமதர்மம் மற்றும் கூட்டாட்சிமுறை ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் சமமான வளங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்ற அவரது வலிமையான பரிந்துரைகளானது, ஒரிய ஆக்கக்கூறுகளில் அவரை ஒரு வெற்றியாளராக உருவாக்கியது.

1946 ஆம் ஆண்டு பட்நாயக் வடக்கு கட்டாக் தொகுதியில் இருந்து ஒரிசா சட்டமன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டில், முறையே ஜெகனாத் பிரசாத் மற்றும் சொரொதாவிடம் இருந்து அவர் வெற்றிபெற்றார். 1961 ஆம் ஆண்டில், மாநிலக் காங்கிரஸின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சியினர் 140 தொகுதிகளில் 82 இல் வெற்றியடைந்தனர், மேலும் 23 ஜூன், 1961 அன்று ஒரிசாவின் முதலமைச்சராக (சவுத்வார் தொகுதியில் பிரதிநிதியாக இருந்த) பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் காமராஜர் திட்டத்தின் கீழ் பட்நாயக் பதவியை இராஜினாமா செய்த 2 அக்டோபர் 1963 அன்று வரை அந்தப் பதவியில் அவர் நீடித்தார். அவரது 45வது வயதில் ஒரிசாவின் முதல்வராக இருந்தார்.

1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்திரா காந்திக்கு நெருங்கிய நண்பராக பட்நாயக் இருந்தார். எனினும், 1969 ஆம் ஆண்டு தலைவர் தேர்தலின் போது அவர்கள் இருவரும் மோதிக்கொண்டனர். அவர் காங்கிரஸை விட்டு வெளியேறி உட்கல் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சியை ஆரம்பித்தார். 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியினர் போதுமான வெற்றியைப் பெற்றனர். பட்நாயக் அவரது பழைய நண்பரான ஜெயப்பிரகாஷ் நாராயணுடன் மீண்டும் நட்புறவைப் புதுப்பித்துக் கொண்டார், மேலும் ஜெ.நா இயக்கத்தில் இணைந்தார் 1974 ஆம் ஆண்டு இந்த இயக்கம் வேகம் பெற்றது. 1975 ஆம் ஆண்டு அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, கைது செய்யப்பட்ட எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவராக பிஜு பட்நாயக்கும் இருந்தார்.

1977 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்ட அவர் லோக் சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டு, முதன் முறையாக எஃகு மற்றும் தாதுப் பொருள்களுக்கான மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். 1979 ஆம் ஆண்டு வரை மொரார்ஜி தேசாய் மற்றும் சரன் சிங் ஆகியயோரின் இரு அரசாங்கங்களிலும் பதவியில் நீடித்திருந்தார். 1985 ஆம் ஆண்டு இந்திரா காந்தி இறந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் அலையின் காரணமாக ஜனதா தள வேட்பாளராக கெந்த்ரபாராவில் இருந்து 1980 மற்றும் 1985 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.. 1989 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தோல்வியடைந்ததுடன், அரசியல் பலரறி நிலையில் இருந்து பின் தங்கினார். எனினும், இக்கட்டான சூழ்நிலையில் வி.பி. சிங் பிரதமர் பதவி வகிப்பதிற்கு பின்னணியில் முக்கியப் பங்கு வகித்ததில் இருந்து, மீண்டும் ஒரிசாவிற்கு சென்று சட்டமன்ற தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்தார். 1990 ஆம் ஆண்டில் மாநில சட்டமன்ற தேர்தலில் ஜனதாத் தளம் அதிக வாக்குகளைப் பெற்றதுடன் (சட்டமன்ற இருக்கைகளில் மூன்றில் இரண்டு பங்கு), 1995 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக ஒரிசாவில் பிஜு பட்நாயக் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1996 ஆம் ஆண்டு கட்டாக் மற்றும் அஸ்கா வாக்காளர் தொகுதிகளில் இருந்து லோக் சபாவிற்கு பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 17, 1997 அன்று அவருக்கு இதயத்தில் சுவாசம் கோளாறில் இறக்கும் வரை அப்பதவியில் அவர் நீடித்திருந்தார்.

1992 ஆம் ஆண்டில், பிஜயானந்தா பட்நாயக் பின்வரும் மேற்கோளை ஒரிசா மக்களுக்காக விட்டுச் சென்றார்;

"என் கனவில் 21வது நூற்றாண்டில் இந்த மாநிலத்தை முன் நடத்திச் செல்லும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை நான் கொண்டிருப்பேன். அவர்கள் பெருமிதத்தையும், தன்னம்பிக்கையையும் தன்னுள்ளே கொண்டிருப்பர். அவர்களைத் தவிர வேறு யாரிடமும் அவர்கள் இரக்கத்தைப் பெற மாட்டார்கள். அவர்களது மூலைகளின் நுண்ணறிவு மற்றும் திறன்களைக் கொண்டு, கலிங்காவின் வரலாற்றை மீண்டும் கைப்பற்றுவர்" என்றார்.

பொதுமக்களின் பிரதிநிதியாக சாதனைகள்[தொகு]

பட்நாயக் தனது பணியைத் திறம்படச் செய்துமுடிப்பவர் ஆவார். சுதந்திர இயக்கத்தில் அல்லது அரசியலில் அல்லது ஏழ்மை அகற்றுபவராகவும் பணிகளை மேற்கொண்டார். அவர் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். பிஜு பாபுவின் இதயத்திற்கு மிகவும் பிடித்த பெயராக கலிங்கா இருந்ததால், கலிங்கா டியூப்ஸ், கலிங்கா ஏர்வேஸ், கலிங்கா இரும்புப் பணிகள், கலிங்கா ரீபேக்டரிகள் மற்றும் ஒரியாவின் தினசரி செய்தித்தாளான கலிங்கா போன்றவற்றை உருவாக்கினார். 1951 ஆம் ஆண்டில் UNESCOக்கு பொறுப்பில் நம்பிக்கைக்குரியதாகவும் மக்கள் பலரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முனைவாக்கத்திற்காகவும் சர்வதேச கலிங்கா பரிசு என்பதனை பட்நாயக் உருவாக்கினார். ஹிராகுட் அணை, பரதீப் கோட்டை, ஒரிசா வான்வழி மையம், புவனேஷ்வர் விமானநிலையம், கட்டாக்-ஜகத்பூர் மஹாநதி நெடுஞ்சாலை பாலம், ரூர்கேலா ரீஜினர் எஞ்ஜினியரிங் காலேஜ், ரூர்கேலா இரும்புத் தொழிற்சாலை மற்றும் சவுத்வார் மற்றும் பார்பில் தொழிலகப் பட்டைகள் உள்ளிட்டவைகளை இந்த செயல்திட்டம் கொண்டிருந்தது. கால்பந்தில் கலிங்கா கோப்பையையும் அவர் உருவாக்கினார்.

பிரபல நிகழ்வுகள் மற்றும் மேற்கோள்கள்[தொகு]

பிரதீப் துறைமுகம் , பட்நாயக் பிரதீப்பில் ஒரு துறைமுகம் கட்டுவதில் முனைப்புடன் இருந்தார். பிரதீப் துறைமுகம் கட்டுவதற்கு நீதி ஒதுக்குவதற்கு மத்திய அரசாங்கம் மறுத்த போது, அவர் கூறியதாவது: இந்திய அரசாங்கம் நரகத்திற்குச் செல்லும். மாநில அரசாங்கம் மற்றும் என்னுடைய சொந்த பணத்துடன் நான் துறைமுகத்தைக் கட்டுவேன் என்றார். மேலும் அதற்காக அவர் ரூபாய் 1.60 பில்லியனை செலவழித்தார். பின்னர், நேரு அந்த செயல்திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்தார். இன்று அது ஒரிசாவின் மிகவும் புகழ்வாய்ந்த துறைமுகமாக இருக்கிறது.

நேரு மற்றும் பட்நாயக் , பட்நாயக்கை "இந்தியாவின் கடல்கொள்ளையர்" என நேரு பாசமுடன் அழைத்தார். ஒரிசாவிற்கு அதிகமான உதவியை வழங்குவது பற்றிய தனது முடிவிற்கு நேரு பாராளுமன்றத்தில் நேரு விமர்சிக்கப்பட்ட போது, அதற்கு தனது பதிலில் நேரு, '"துணிச்சலும், இயக்கத்தன்மையும், பணியை செய்வதற்கு உற்சாகமும் நிறைந்தவர் பிஜு பட்நாயக். அதனால் ஒரிசாவிற்கு அதிக உதவியை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை" என்றார். 1962 ஆம் ஆண்டில் சீனர்களின் படையெடுப்பின் போதும் அதைத் தொடர்ந்து வந்த நெருக்கடி நிலையின் போதும், நேரு அடிக்கடி ஒரியத் தலைவரின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டார். சிலசமயங்களில் நேருவின் அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்பு ஆலோசகராகவும் பட்நாயக் செயல்பட்டார். 'இராணுவ விவகாரங்களில் பட்நாயக்கின் பரிச்சயம் மூலமாக பிரதமர் ஈர்க்கப்பட்டிருந்தார்,' என்று அந்நேரத்தில் ஒரு அரசியல் விமர்சகர் எழுதினார். 'விடியல் இயக்கத்திற்கான ஒரு வெற்றியாளருக்கான நேருவின் தேடல் பார்வையானது பிஜுவின் மேல் நிலைத்தது' என்பது பின்னர் சிறிய ஆச்சரியமாகும்.

ஊழலுக்கு எதிரான நிலை , ஊழலுக்கு எதிராக அவர் போராடுகையில் 'பிழை செய்யும் அனைத்து அதிகாரிகளையும் அடிக்க வேண்டும்' என்று ஒரு முறை கூறினார். எனினும் அவரது அரசாங்கம் அவலமான வகையில் ஊழலைக் கட்டுப்படுத்தவும், வீழ்த்தவும் தவறியது.

இறப்பில் , பட்நாயக்கின் 79வது பிறந்தநாளில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு நீங்கள் இறக்க விரும்புகிறீர்கள் என வினவியதற்கு, அவர் திறமையாகப் பதில் கூறியபோது, 'ஒரு விமான விபத்திலோ அல்லது நீண்டகால பிணியின் மூலமாகவோ இறக்க விரும்பவில்லை. நான் திடீரென இறக்க விரும்புகிறேன், கீழே விழுந்தவுடன் இறக்க விரும்புகிறேன்' என்றார்.

ஒரிசாவிற்காகவும், ஒரிய மக்களுக்காகவும் , 'ஏழ்மையாகப் பிறப்பதில் தவறில்லை, ஆனால் காலம் முழுவதும் அவ்வாறே நீடித்திருப்பது பெருங்குற்றமாகும்'. 'எனக்கு நம்பத்தகுந்தவராக இருக்கத் தேவையில்லை, ஆனால் மாநிலத்தின் ஊழ்வினைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்'. 'ஒரிசா ஏழ்மையான மக்கள் வாழும் செல்வமிகுந்த மாநிலமாகும்'. 'அதனால் உங்கள் மாநிலத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும், வருத்தப்படக்கூடாது' என்றார்.

பிஜு பட்நாயக்கின் நினைவுகளில்[தொகு]

ஒரிய அரசாங்கம் பல்வேறு கல்வி நிலையங்களின் பெயருக்குப் பின்னால் பிஜு பட்நாயக்கின் பெயரை இட்டுள்ளது. புவனேஸ்வரில் பிஜு பட்நாயக் விமானநிலையம், பிஜு பட்நாயக் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி (BPUT) மற்றும் பல அவற்றில் அடங்கும்.

குடும்பம்[தொகு]

கியான் பட்நாயக் என்பவரை பிஜு பட்நாயக் திருமணம் செய்து கொண்டார். பிஜு பட்நாயக்கின் மகனான நவீன் பட்நாயக் தற்போது ஒரிசாவின் முதலமைச்சராக உள்ளார். அவரது மகளான ஜிட்டா மேத்தா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.அவரது மூத்த மகனான பிரேம் பட்நாயக் டெல்லியைச் சார்ந்த தொழிலதிபர் ஆவார்.

புற இணைப்புகள்[தொகு]


அரசியல் பதவிகள்
முன்னர்
யாருமில்லை
குடியரசுத் தலைவர் ஆட்சி
இதற்கு முன் ஹரேகிருஷ்ணா மகதாப்
ஒடிசா முதலமைச்சர்
28 சூன் 1961 – 2 அக்டோபர் 1963
பின்னர்
பைரேன் மித்ரா
முன்னர்
ஏமானந்தா பிசுவால்
ஒடிசா முதலமைச்சர்
5 மார்ச் 1990 – 15 மார்ச் 1995
பின்னர்
ஜானகி பல்லப் பட்நாயக்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜு_பட்நாயக்&oldid=3696266" இலிருந்து மீள்விக்கப்பட்டது