மாவை வரோதயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாவை வரோதயன்
பிறப்புசிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன்
செப்டெம்பர் 12, 1965
மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்
இறப்புஆகத்து 29, 2009(2009-08-29) (அகவை 43)
யாழ்ப்பாணம்
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்சிவகடாட்சம்பிள்ளை, தேவி
வாழ்க்கைத்
துணை
ஜெயகௌரி
பிள்ளைகள்அருணன், சுகாபரணி

மாவை வரோதயன் (இயற்பெயர் : சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன், செப்டெம்பர் 12, 1965 - ஆகஸ்ட் 29, 2009) ஈழத்து எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் பல எழுதியவர். வில்லுப்பாட்டுகள் எழுதி அதில் நடித்திருக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மாவை வரோதயனின் இயற்பெயர் சத்தியகுமாரன். இவர் யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள மாவிட்டபுரம் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தையார் சிவகடாட்சம்பிள்ளை, தாயார் தேவி. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியில் கல்வி கற்றார். தந்தையின் பணி காரணமாக மட்டக்களப்புக்கு சென்றவர் அங்கு சம்மாந்துறையில் முஸ்லிம் மத்திய கல்லூரியிலும், பின்னர் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இதற்குப் பின்னர் அவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்று கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்திலே பணிபுரிந்தார். பின்னர் அவர் சுகாதாரப் பரிசோதகராகப் (P.H.I) வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் இருந்து பணியாற்றினார்.

இலக்கியப் பணி[தொகு]

அவரது இலக்கியப் பணிகளைப் பார்க்கும் போது அவர் ஒரு கவிதையாளராக, சிறுகதையாளராக, கட்டுரையாளராக என்று பன்முகப்பட்ட முகங்களைக் காட்டியிருக்கிறார், அவர் நாடகங்களை எழுதியிருக்கிறார். வில்லுப்பாட்டு எழுதி அதில் நடித்திருக்கிறார். தேசியக் கலை இலக்கியப் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருந்தார். கொழும்பிலே தேசியக் கலை இலக்கியப் பேரவையின் இலக்கியக் குழுச் செயலாளராக அவர் நீண்டகாலம் பணியாற்றிக் கொண்டிருந்தார். சில்லையூர் செல்வராசன் செய்து கொண்டிருந்த "பா வளம்" "கவிதைக் கலசம்" போன்ற வானொலி நிகழ்ச்சிகளிலே பங்குபற்றியிருக்கிறார்.

தேசியக் கலை இலக்கியப் பேரவையின் மாசிகையான தாயகம் பத்திரிகையிலே "வலிகாமம் மைந்தர்கள்" என்ற தலைப்பிலே ஒரு தொடர் எழுதி வந்தார். வலிகாமம் பகுதியிலே வாழ்ந்த மனதைக் கவர்ந்த நபர்கள், பாத்திரங்கள் பற்றி தொடர்ச்சியாக அதில் எழுதி வந்தார். அதைத் தவிர ஐம்பெருங்காப்பியங்களை வைத்துக் கொண்டு அவர் நாடகங்களை எழுதியிருக்கிறார். அவற்றை வினோதன் கலை இலக்கிய மன்றம் ஒவ்வொரு மாதமும் நடத்திய நிகழ்விலே அந்த நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

வெளிவந்த நூல்கள்[தொகு]

மறைவு[தொகு]

சில காலம் மாவை வரோதயன் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2009,ஆகஸ்ட் 29 இல் யாழ்ப்பாணத்தில் இறந்தார். இவருக்கு ஜெயகௌரி என்ற மனைவியும், அருணன், சுகாபரணி என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்[1].

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவை_வரோதயன்&oldid=1108518" இலிருந்து மீள்விக்கப்பட்டது