தொடர்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல் பரிமாற்ற சாதனங்களையும், அவற்றுக்குரிய கருத்துப்பொருள் அடிப்படைகளையும் ஆயும் இயல் தொடர்பியல் (Communications) ஆகும். இயற்பியல், கணிதம், இலத்திரனியல், கணினியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய இயல்களுடன் நெருங்கிய தொடர்புடையது.

மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று தகவல் பரிமாற்றம். பேச்சு, மொழி, எழுத்து, அச்சு, தூது (மனிதன், புறா), புகை சைகை, முரசு, தொலைவரி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என பல நுட்ப முறைகளை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுகின்றன.

1948 ஆண்டு பெல் ஆய்வு கூட விஞ்ஞானியான கிளாட் ஈ. ஷானான் அவர்களின் தொடர்பியலின் கணிதவியல் கோட்பாடுகள் என்ற ஆய்வுக்கட்டுரை இவ் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது.

துணை நூல்கள்[தொகு]

  • க. அபிராமி. (2002). தகவல் தொழில் நுட்பம். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்பியல்&oldid=713947" இலிருந்து மீள்விக்கப்பட்டது