பால்வினை நோய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்வினை நோய்கள் (அ) பால்வினைத் தொற்று
ஒத்தசொற்கள்(இணைப்பெயர்) பாலியல் தொற்று நோய்கள் (STD), பாலுறுப்புத் தொற்று (VD)
"Syphilis is a dangerous disease, but it can be cured." மேகநோயின்(சிபிலிசு) தீவிரம் பற்றிய பிரசுரம் (1936 - 1938).
சிறப்புவகை : தொற்று நோய்
தடுப்பு(பாதுகாப்பு முறைகள்) - பாதுகாப்பான உடலுறவு, ஆணுறை, தடுப்பூசிகள்
நிகழும் வீதம்தொற்று - 1.1 பில்லியன் (எச்.ஐ.வி அல்லாத பால்வினை நோய்கள், 2015)[1]
இறப்புகள்இறப்பு - 108,000 (எச்.ஐ.வி அல்லாத பால்வினை நோய்கள், 2015)[2]

பாலியல் நோய்கள் எனப்படுபவை பாலியற் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் நோய்களாகும். யோனிவழி, குதவழி மற்றும் வாய்வழிப் பாலுறவால் இவை பரவுகின்றன. பாலியற் தொடர்புகளாற் பரப்பப்படும் பெரும்பாலான நோய்களைச் சரியான மருத்துவ சிகிச்சை (பண்டுவம்) மூலம் முற்றாகக் குணப்படுத்தலாம். இவ்வாறான நோய்களில் சில பாலுறவு மூலமன்றி குருதி, குருதிப் பொருட்கள் போன்றவற்றாலும் கடத்தப்படலாம்.[3] இந்நோய்கள் ஏற்படும்போது, தெளிவாக அறிகுறிகள் வெளித்தெரியாமல் இருப்பதனால், அவை இலகுவாக ஒருவரிலிருந்து மற்றவருக்குக் கடத்தப்படக்கூடும்.[4][5]. யோனியிலிருந்து திரவம் வெளியேறல், சிறுநீர்க் குழாய்களிலிருந்து திரவம் வெளியேறல், சிறுநீர்க் குழாய்களில் எரிவு, பாலுறுப்புக்களில் புண், வயிற்றுவலி என்பன பொதுவாக ஏற்படக்கூடிய அறிகுறிகளாகும்[3] பெரும்பாலான பால்வினை நோய்கள் எவ்வித அறிகுறியையும் காட்டுவதில்லை. இதுவே நோய்கள் வெகுவாக பரவுவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது.

முப்பதிற்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள், வைரசுகள், மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை பால்வினை நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. பாக்டீரிய பால்வினை நோய்களான சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்ற நோய்கள் எய்ட்ஸினால் ஏற்படும் ஆபத்தினை அதிகரிக்கவல்லன. வைரசினால்

கருவுற்ற பெண்களுக்கு இந்நோய்கள் தொற்றினால் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. முறையற்ற புணர்ச்சி, பால்வினைத் தொழிலாளியுடனான உறவு, பலதுணை மணம், ஓரினச்சேர்க்கை போன்றவைகளால் இந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

நோயியல் வகைப்பாடு[தொகு]

1990 வரையிலும் இப்பால்வினை நோய்கள் வெனிரல் நோய்கள் (அ) மேகநோய்கள் என வழங்கப்பட்டன. வெனிரல் என்ற பெயர் பாலினத்தொடர்பைக் குறிப்பதாகும். மேலும் உரோம பெண் காதல் தெய்வமாகிய "வீனஸ்" என்பதிலிருந்து மருவியதாகும். இப்பால்வினை நோய்கள் "சமூக வியாதிகள்" என்று மங்கல வழக்காக வழங்கப்பட்டு வந்தது. பால்வினை நோய்கள் (Sexual Transmitted Disease) என்பது பரவலாக அறியப்படும் சொல்லாக இருப்பினும், 1999ல் உலக சுகாதார அமைப்பு இவற்றை பால்வினை நோய்கள் என்றழைப்பதைவிட, பால்வினை நோய்த்தொற்று (Sexual Transmitted Infection) என்று அழைப்பதே பொருத்தமானது என்று அறிவித்தது. ஒருவர் பால்வினை நோய்த்தொற்றைக் கொடுக்கக்கூடிய குறிப்பிட்ட நோய்க்காரணியின் தொற்றுக்கு உட்பட்டு இருந்தாலும், எந்த அறிகுறிக்கும் உள்ளாகாமல், நோயை வெளிப்படுத்தாமலே, அவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய்க்காரணியைக் கடத்த முடிவதால், அடுத்தவருக்கு இந்த நோய் வெளிப்படக் கூடும். நோய்த் தொற்றை ஏற்படுத்தி, நோய்ப் பரவலுக்கு வழி செய்யக் கூடிய, நோயை வெளிப்படுத்தாதவர்களும் இருக்கக்கூடும் என்பதாலும், அவர்கள் மூலம் ஏனையோருக்கு நோய் வரக் கூடும் என்பதனாலும், இதனை பால்வினை நோய்த்தொற்று என்று அழைப்பதே பொருத்தமாகும் எனக் கூறப்பட்டது[6]

நோயின் அறிகுறிகள்[தொகு]

பால்வினை நோய் இருக்கிறதா என்பதைக் கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வ.எண். பெண்களுக்கு ஆண்களுக்கு
1 பிறப்புறுப்பில் புண் பிறப்புறுப்பில் புண்
2 சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், வலி சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், வலி
3 அதிகமான துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் சிறுநீர்த்துவாரத்தில் வெள்ளைக்கசிவு
4 அடிவயிற்றில் வலி வலியுடன் விரைப்பை வீக்கம்
5 இடுப்பு அறையில் நெறிகட்டுதல் இடுப்பு அறையில் நெறிகட்டுதல்

பெண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்களில் பெரும்பாலானவை அவர்களின் உள்ளடங்கிய இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிக்கின்றன. அதனால் பால்வினைத் தொற்று ஆண்களுக்கு வெளியே தெரிவது போல பெண்களுக்குத் தெரிவதில்லை. சிகிச்சை அளிக்கப்படாத பால்வினை நோய்கள் மலட்டுத்தன்மை, தீவிர வலி, போன்றவற்றையும் சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்த வல்லவை.

நோய்க்காரணிகள்[தொகு]

நோய்ப்பரவுதலும் மூலமும்[தொகு]

உடலுறுப்புகள், பாலுறவு முறை போன்றவற்றைக் கொண்டு நோய்க்கடத்தப்படுதல் மாறுபடுகிறது. மேலும் அறிய கீழ்க்காணும் அட்டவணையைச் சரிபார்க்கவும்,

பல்வினை நோய்த் தொற்றுள்ளவரிடம் உடலுறவு கொள்ளுவதால் பரவும் ஆபத்துகள்
அறியப்பட்டத் தொற்றுகள் சாத்தியக்கூறுள்ள தொற்றுகள்
ஆணிடம் வாய்வழிப் பாலுறவு
பெண்ணிடம் வாய்வழிப் பாலுறவு
வாய்வழிப் பாலுறவு - ஆண் (பெறுதல்)
வாய்வழிப் பாலுறவு - பெண் (பெறுதல்)
யோனிவழித் தொற்று - ஆண் (பெறுதல்)
  • ஈரலழற்சி சி தீநுண்மம்
யோனிவழித் தொற்று - பெண் (பெறுதல்)
  • ஈரலழற்சி சி தீநுண்மம்
குத வழி தொற்றினை வழங்கல்
  • ஈரலழற்சி சி தீநுண்மம்
குத வழி தொற்றினைப் பெறுதல்
  • ஈரலழற்சி சி தீநுண்மம்
குத வழி வாய்த் தொற்று
  • அமீபியாசிஸ்
  • கிரிப்டொஸ்பொரிடியோசிஸ் (1%)
  • கியார்டியாசிஸ்[7]
  • ஈரலழற்சி ஏ தீநுண்மம் [8](1%)
  • சிஜெல்லோசிஸ்[9] (1%)

பாக்டீரியாக்களின் வழிப்பரவும் நோய்கள்[தொகு]

  • சான்க்ராய்டு - (ஹீமோபிலஸ் டக்ரேயி)
  • கிளமிடியா - (கிளமிடியா ட்ரக்கோமேட்டிஸ்)
  • கொணோறியா - (நெசேரியா கொணறியே)
  • கிரானுலோமா இங்குய்னலே - (கிலெப்சியெல்லா கிரானுலொமடிஸ்)
  • மைக்கோபிளாஸ்மா ஜெனிடாலியம்
  • மைக்கோபிளாஸ்மா ஹோமினிஸ்
  • சிபிலிசு - டிரீபோனிமா பல்லிடம்
  • யூரியபிளாஸ்மா தொற்று

பூஞ்சைகளின் வழிப்பரவும் நோய்கள்[தொகு]

வைரஸ்களின் வழிப்பரவும் நோய்கள்[தொகு]

  • ஈரலழற்சி பி தீநுண்மம் - உமிழ்நீர், பாலுறுப்புகளிலிருந்து வடியும் திரவங்கள் மூலம்
  • ஹெர்பிஸ் சிப்லக்ஸ் 1 & 2 - அக்கி
  • எச்.ஐ.வி
  • எச்.பி.வி - தோல், கோழைப்படலத் தொற்று.
  • மொலஸ்கம் கன்டேஜியோசம்

ஒட்டுண்ணிகள்[தொகு]

  • நண்டுப்பேன் - திரஸ் பூபிஸ்
  • சொறி - சார்கோப்டிஸ் ஸ்கேபி

புரோட்டொசோவாக்களின் வழிப்பரவும் நோய்கள்[தொகு]

  • ட்ரைக்கோமோனியாசிஸ் - ட்ரைக்கோமானாஸ் வஜினாலிஸ் என்ற புரோட்டொசோவா (அ) மூத்தவிலங்குகளின் மூலம் பரவும் பால்வினை நோய் ஆகும்.

சில முக்கிய பாலியல் நோய்கள்[தொகு]

  1. டைசன் சுரப்பி அழற்சி
  2. சிறுநீர்த்தாரை அடைப்பு
  3. சிபிலிசு - மேக நோய்
  4. கொணோறியா
  5. கிளமிடியா
  6. பாலுறுப்பு உண்ணிகள்
  7. பாலுறுப்பு ஹேர்பீஸ்
  8. பிறப்புறுப்பு மரு
  9. அக்கிப்புண்கள்
  10. எச்.ஐ.வி
  11. மனித சடைப்புத்துத் தீ நுண்மத்தின் தொற்றினால் வரக்கூடிய நோய்கள் (எ.கா. கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், வாய்த்தொண்டைப் பகுதியில் வரக்கூடிய வாய்த்தொண்டைப் புற்றுநோய்.

டைசன் சுரப்பி அழற்சி[தொகு]

டைசன் சுரப்பி அழற்சி என்பது பொதுவாக வெட்டை நோய் என்று அறியப்பெறுகிறது. இது சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை ஆகியவற்றில் கிருமி தாக்குதல் நடைபெற்று சிறுநீர்க்கடுப்பு ஏற்படுகிறது. ஆண்குறியின் நுனிப்பகுதியிலுள்ள டைசன் சுரப்பி பாதிக்கப்படுவதால் டைசன் சுரப்பி அழற்சி என்று அழைக்கப்பெறுகிறது. [10]

சிறுநீர்த்தாரை அடைப்பு[தொகு]

வெட்டை நோய் கோனக்கால் கிருமிகளால் ம்யூக்கஸ் என்ற சவ்வுப் பகுதி தாக்கப்படுவதால், சிறுநீர் வரும் வழியில் அடைப்பு ஏற்படுகிறது.

பாலுறுப்பு உண்ணிகள்[தொகு]

இந்நோய் ஆண் மற்றும் பெண்ணின் பாலுறுப்புப் பகுதிகளில் தோன்றும் சதைப் பற்றான வளர்ச்சியாகும். இந்நோயானது தாயிலிருந்து குழந்தைக்கு கடத்தப்பெறும் அபாயமும் உள்ளது.

பாலுறுப்பு ஹேர்பீஸ்[தொகு]

பாலுறுப்பு ஹேர்பீஸ் என்பது வைரசினால் ஏற்படும் அக்கி நோயாகும்.

எச்.ஐ.வி[தொகு]

ரெட்ரோவைரசு எனும் வைரசின் தாக்குதலினால் மனிதனுடைய நோய் எதிர்ப்புத் திறனில் குறைபாடு ஏற்பட்டுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி பெருநோய்கள் தாக்குதல் ஏற்படுவதால் மரணம் ஏற்படுகிறது.

பரிசோதனைகள்[தொகு]

  1. கிராம் ஸ்டெயினிங் பரிசோதனை - வெட்டை நோய்க் கிருமிகளை கண்டறிதல்.
  2. ஆண்டிஜன் டிடெக்ஷன் சோதனை - கிளாமிடியா கிருமிகள் கண்டறிய.
  3. சானக் ஸ்மியர் - அக்கிப் புண்களின் திரவத்தில் ஸ்டெயின் கலந்து செய்கின்ற பரிசோதனை.
  4. ஐஜீஜி. ( IgG) - ஐஜீஎம் பரிசோதனை.
  5. வி.டி.ஆர்.எல் (VDRL) பரிசோதனை - சிபிலிஸ் கிருமிகள் இருப்பது உறுதிப் பட அறிய
  6. டி.பி.எச்.ஏ (TPHA) சோதனை - சிபிலிஸ் கிருமிகள் இருப்பது உறுதிப்பட அறிய
  7. எலிசா சோதனை எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் அறிய.

தடுப்பு முறைகள்[தொகு]

  • பாலுறவின் பொழுது, ஆண்குறியில் ஆணுறை அணிதல், பெண்குறியில் பெண்ணுறையை உபயோகித்தல்
  • முறையான பாலுறவு.
  • பலதாரமண பாலுறவினை தவிர்த்தல்
  • விலைமாதுவினை தவிர்த்தல்
  • ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு
  • ஆசனவாய்ப் புணர்ச்சி, வாய்ப்புணர்ச்சி போன்றவற்றை தவிர்த்தல்
  • பாலியல் தொற்று ஏற்படாமல் இருக்கு உறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புருப்புகளை தூய்மையாக வைத்திருத்தல்
  • பாலியல் நோய்களுக்கான முறையான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளல்

சிகிச்சைகள் & தடுப்பு முறைகள்[தொகு]

பெரும்பாலான பால்வினை நோய்கள் முறையான சிகிச்சைகளால் குணப்படுத்தக்கூடியவை. நோயின் தொடக்கநிலையிலேயே சிகிச்சை பெற துவங்கினால், எளிமையாகவும் முழுமையாகவும் குணம் செய்யலாம். முறையற்ற சிகிச்சைகளும், முழுமையற்ற சிகிச்சைகளும் மலட்டுத்தன்மை உண்டாக்கவும், இதயம் மூளை போன்ற உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

தடுப்பூசிகள்[தொகு]

வைரசினால் ஏற்படும் பால்வின நோய்களைத்தடுக்க வைரசு தடுப்பூசிகள் பயன்படுகின்றன.

தொகுப்பு சிகிச்சை முறை[தொகு]

ஒரே வகையான பால்வினைத் தொகுப்பிற்கு பல நோய்க் கிருமிகளும் காரணமாக இருக்கலாம். பால்வினை நோய்க்கு காரணமாயிருக்கும் அனைத்து நோய்க் கிருமிகளுக்கும் மருந்துகள் ஒருசேர தரப்படுகின்றன. இது “தொகுப்பு சிகிச்சை முறை” (Syndromic Management) என்று அழைக்கப்படுகின்றது.

குழந்தைக்குப் பால்வினை நோய்[தொகு]

கருவிலிருக்கும் போதோ அல்லது குழந்தை பிறக்கும் போதோ தாயின் பிறப்புறுப்புப் பாதையில் உள்ள பால்வினை நோய்த் தொற்று குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்புண்டு.

கர்ப்பமுற்றவர்களுக்கான சிகிச்சை[தொகு]

கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் மருத்துவம் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மூலம் பால்வினை நோய்த் தொற்று உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். பால்வினை நோய்க்கான அறிகுறிகள் சிறிது காலத்தில் தானாகவோ அல்லது சிகிச்சை காலம் முடியும் முன்போ மறைவதற்கு வாய்ப்புண்டு. இது போன்ற நேரங்களில் குணமடைந்து விட்டோம் என்று நினைக்கக் கூடாது. முழுமையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

தமிழ்நாட்டில் சிகிச்சை[தொகு]

தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொகுப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பான்மையான பால்வினை நோய்கள் குணமாகி விடும். இரத்தம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுடன் சிகிச்சை பெற, அரசு வட்ட மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவற்றை அணுகலாம்.

யார் சிகிச்சை பெறுவது?[தொகு]

பால்வினை நோய்த் தொற்றுள்ளவர் மட்டும் சிகிச்சை பெற்றால் போதாது. அவருடைய உறவுத் துணையோடு சேர்ந்து ஒரே சமயத்தில் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு சிகிச்சை பெறாவிடில் சிகிச்சை பெறாத துணையின் மூலம் பால்வினை நோய் திரும்பவும் வரும் வாய்ப்பு உள்ளது.

பால்வினை நோய் - எய்ட்ஸ் தொடர்பு[தொகு]

எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் என்பதும் ஒரு வகையான பால்வினை நோய்தான். பால்வினை நோய் உள்ளவர்களை எச்.ஐ.வி. எனும் எய்ட்ஸ் தாக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட ஒன்பது மடங்கு அதிகம். மேலும் பால்வினை நோய் எச்.ஐ.வி தொற்று வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

இனப்பெருக்க உறுப்பு நோய்களுடன் தொடர்பு[தொகு]

பால்வினை நோய்களும் ஒரு வகையான இனப்பெருக்க உறுப்பு நோய் ஆகும். இனப்பெருக்க உறுப்பு நோய்த் தொற்று உடலுறவு மூலம் மட்டுமில்லாமல் பிற வழிகளிலும் பரவலாம். திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழித்தல், அசுத்தமான கழிவறையைப் பயன்படுத்தல் போன்றவற்றாலும் வரக்கூடும். மாதவிடாய் காலங்களில் தன் சுத்தத்தைக் கடைப்பிடிக்காத பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்பு வழி நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதற்காகப் பயன்படுத்தும் துணிகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆண், பெண் இருவருமே சிறுநீர், மலம் கழித்த பின்பும், உடலுறவுக்குப் பின்பும் இனப்பெருக்க உறுப்புகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக சுத்தமான கழிப்பறை, சுத்தமான தண்ணீர், சுத்தமான சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்கள் போன்றவை மிகமிக அவசியம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
  2. GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
  3. 3.0 3.1 "Sexually transmitted infections (STIs)". Fact Sheet. WHO. Aug. 2016. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. Medical microbiology (7th ). St. Louis, Mo.: Mosby. 2013. பக். 418. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323086929. https://books.google.com/books?id=RBEVsFmR2yQC&pg=PA418. 
  5. Goering, Richard V. (2012). Mims' medical microbiology. (5th ). Edinburgh: Saunders. பக். 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780723436010. https://books.google.ca/books?id=pzQayLEQ5mQC&pg=PA245. 
  6. "Sexually transmitted diseases (STDs)?". PLWHA/National AIDS Resource Center. பார்க்கப்பட்ட நாள் 25 March 2013.
  7. "Giardia, Epidemiology & Risk Factors". Center For Disease Control. July 13, 2012. பார்க்கப்பட்ட நாள் 2015-07-03.
  8. "Hepatitis A, Division of Viral Hepatitis". Center For Disease Control. May 31, 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-07-03.
  9. "Shigella Infections among Gay & Bisexual Men". Center For Disease Control. April 23, 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-07-03.
  10. http://www.keetru.com/medical/sex/8.php

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  • “தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்” வெளியிட்ட கைப்பிரதி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்வினை_நோய்கள்&oldid=3513322" இலிருந்து மீள்விக்கப்பட்டது