வேர்ட்பிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேர்ட்ப்ரஸ்
உருவாக்குனர்வேர்ட்ப்ரஸ் பவுண்டேசன்
தொடக்க வெளியீடுமே 27, 2003 (2003-05-27)[1]
அண்மை வெளியீடு5.3.2  (திசம்பர் 18, 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-12-18))[2]
இயக்கு முறைமைஇயக்குதள சார்பு இல்லை.
தளம்பி.எச்.பி
மென்பொருள் வகைமைவலைப்பதிவு மென்பொருள்
உரிமம்GNU GPLv2+[3]
இணையத்தளம்wordpress.org

வேர்ட்ப்ரஸ் (WordPress), ஒரு வலைப்பதிவு மென்பொருளாகும். இது பி.எச்.பியில் எழுதப்பட்டு மையெசுக்யூயெல் தரவுத்தளத்தால் தாங்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வலைப்பதிவுகள் இதைப் பயன்படுத்தி வெளியிடப்படுகின்றன. ஏப்ரல் 2019 கணக்கெடுப்பின் படி உலகின் தலைசிறந்த 10 மில்லியன் வலைதளங்களில் 33.6% தளங்கள் வேர்ட்பிரசு மூலம் இயங்கின.[4]

வேர்ட்பிரஸ் ஆனது Michel Valdrighi என்பவரினால் தயாரிக்கப்பட்ட b2/cafelog என்னும் மென்பொருளின் உத்தியோக பூர்வமான தொடர்ச்சியாக இருக்கின்றது.

இதன் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

சிறப்புப் பண்புகள்[தொகு]

வேர்ட்பிரஸ் வார்ப்புருக்களை மையமாக்கொண்டு செயற்படுகின்றது, இதனால் HTML, PHP போன்றவற்றைத் தொகுக்காமலேயே பக்கங்களின் தோற்றங்களை மாற்றியமைக்கலாம். வார்ப்புருகளையும் இலகுவாக மாற்றிக்கொள்ளலாம். மேலதிக வடிவமைப்பு வேலைகளுக்கு HTML, PHP போன்றவற்றைத் தொகுத்து அமைத்துக்கொள்ளலாம்.

வெளியீட்டு வரலாறு[தொகு]

1.0 பதிப்பிற்குப் பிறகு வெளிவந்த அனைத்து முக்கிய பதிப்புகளுக்கும் பிரபலமான ஜாஸ் இசை கலைஞர்களின் பெயர் சூட்டப்படுகிறது[5]

மேலும் அறிய[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Mullenweg, Matt. "WordPress Now Available". WordPress. பார்க்கப்பட்ட நாள் 2010-07-22.
  2. "Version 5.3.2". 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
  3. "WordPress: About: GPL". WordPress.org. Archived from the original on 12 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Usage Statistics and Market Share of Content Management Systems for Websites". W3Techs. August 2013. பார்க்கப்பட்ட நாள் August 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Roadmap". Blog. WordPress.org. பார்க்கப்பட்ட நாள் 2010-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேர்ட்பிரசு&oldid=3848727" இலிருந்து மீள்விக்கப்பட்டது