டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The bathyscaphe Trieste
கப்பல் (இத்தாலி)
பெயர்: டிரியெஸ்ட்
கட்டியோர்: Acciaierie தேர்னி/கன்டியேரி ரியூனிட்டி டெல்' அட்ரியாட்டிக்கோ
வெளியீடு: 26 ஆகஸ்ட் 1953
விதி: 1958 இல் ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக்கு விற்கப்பட்டது.
கப்பல் (அக்கிய அமெரிக்கா) United States Navy ensign
பெயர்: டிரியெஸ்ட்
வாங்கியது: 1958
பணி நிறுத்தம்: 1966
மீள்வகைப்பாடு: DSV-0, 1 சூன் 1971
விதி: ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகத்தில் ஒரு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
வகை:ஆழ-நீர்மூழ்கிக் கலம்
பெயர்வு:50 LT
நீளம்:59 அடி
வளை:11 அடி
பயண ஆழம்:18 அடி
பணிக்குழு:2

டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு (Bathyscaphe Trieste) என்பது சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்ட ஆழ நீர்மூழ்கும் ஆய்வுப்படகு ஆகும். இது இருவரை ஏற்றிச் செல்லக்கூடியது. 1960 ஆம் ஆண்டில் 10,900 மீட்டர்கள் ஆழம் கொண்ட உலகின் மிகவும் ஆழமான கடல் பகுதியான சலஞ்சர் ஆழம் என்னும் பகுதிக்குச் சென்று இது சாதனை படைத்தது.

வடிவமைப்பு[தொகு]

டிரியெஸ்ட், சுவிஸ் அறிவியலாளரான அகஸ்ட்டே பிக்கார்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டு இத்தாலியில் கட்டப்பட்டது. இதன் அமுக்கக்கலம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இதன் மேற்பகுதி இத்தாலி, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகில் அமைந்த, சுதந்திர நகரான டிரியெஸ்டில் செய்யப்பட்டதால் இதற்கு டிரியெஸ்ட் என்னும் பெயர் இடப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடுநிலக் கடல் பகுதியில் அமைந்த காப்ரித் தீவுக்கு அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. பல ஆண்டுகள் நடுநிலக் கடல் பகுதியில் இயங்கியபின்னர் 1958 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையினால் $250,000 விலை கொடுத்து வாங்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரியெஸ்ட்_ஆழ்கடல்_படகு&oldid=3710838" இலிருந்து மீள்விக்கப்பட்டது