பட்டுக்கோட்டை

ஆள்கூறுகள்: 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டுக்கோட்டை
—  நகரம்  —
பட்டுக்கோட்டை
இருப்பிடம்: பட்டுக்கோட்டை

, தமிழ்நாடு

அமைவிடம் 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பட்டுக்கோட்டை
தலைமையகம் தஞ்சாவூர்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி தஞ்சாவூர்
[[தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள்|மக்களவை உறுப்பினர்]]

எஸ். எஸ். பழனிமாணிக்கம்

சட்டமன்றத் தொகுதி பட்டுக்கோட்டை
சட்டமன்ற உறுப்பினர்

கா. அண்ணாதுரை (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


5 மீட்டர்கள் (16 அடி)

பட்டுக்கோட்டை (Pattukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை நகராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 5 மீட்டர் (16 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18,437 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 73,135 ஆகும். அதில் 36,386 ஆண்களும், 36,749 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7019 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,286 மற்றும் 587 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.82%, இசுலாமியர்கள் 7.57%, கிறித்தவர்கள் 5.34% மற்றும் பிறர் 0.18%ஆகவுள்ளனர். இந்த தொகுதியில் முக்குலத்தோர், வெள்ளாளர்,முத்தரையர், ஆதிதிராவிடர், இஸ்லாமியர்கள், மற்றும் மீனவர்கள் சமூகத்தினரும் பரவலாக உள்ளனர்.[2]

சுற்றுலாத்தலம்[தொகு]

பட்டுக்கோட்டை பகுதி பட்டு மழவராயர் என்பவர்களால் ஆட்சி செய்யப்பட்டது.[3] பட்டுக்கோட்டை அருகேயுள்ள மனோரா எனும் சுற்றுலாத்தலம் உள்ளது மேலும் இங்குள்ள அருள்மிகு நாடியம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.மேலும் இங்கு புகழ்பெற்ற 'கல்யாணசுந்தரம் மணிமண்டபம்' அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

பதினேழாம்‌ நூற்றாண்டுக்கு முன்பே பட்டுக்கோட்டை எனும்‌ பெயர்‌ வழக்கத்தில்‌ இருந்துள்ளது. ’பட்டு மழவராயர்’ எனும்‌ கள்ளர் குழுத்தலைவன்‌ வாழ்ந்ததாகவும்‌ அவரால்‌ கோட்டைக்‌ கட்டப்பட்டதாகவும்‌ தஞ்சை அரசுப்‌ பதிவேட்டில்‌ கூறப்பட்டுள்ளது.[4][நம்பகமற்றது ] இதுவே பட்டுக்கோட்டை எனப்‌ பெயர்‌ வரக்‌ காரணமாகும்.

கோயில்[தொகு]

சிதிலமடைந்து புனர்நிர்மாணிக்கப்படும் பட்டுக்கோட்டை ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோயில் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ளது. இப்போது இக்கோவில் புதிய ஆலயமாக மாற்றப்பட்டு தற்போது புதுப்பொலிவு பெற்று வழிபாடு நடைபெற்று வருகிறது.

இங்கு நாடியம்மன் திருக்கோவில் உள்ளது.

புகழ்பெற்றவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pattukkottai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  2. 176 - பட்டுக்கோட்டை தி இந்து தமிழ் இதழ்
  3. "நாடி வருவோரை காக்கும் நாடியம்மன்". தினகரன் (இந்தியா). https://m-dinakaran-com.cdn.ampproject.org/v/s/m.dinakaran.com/article/News_Detail/22279/amp?amp_js_v=a6&_gsa=1&usqp=mq331AQHKAFQCrABIA%3D%3D#aoh=16056968659940&_ct=1605697194885&referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s. 
  4. சோழ நாட்டின் ஊர்-பெயர். 2020. பக். [58]. https://archive.org/details/chola_naattin_oor_peyar/chola_naattin_oor_peyar_6_inch/page/58/mode/2up?q=%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுக்கோட்டை&oldid=3884808" இலிருந்து மீள்விக்கப்பட்டது