ஹம்சநாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹம்சநாதம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 59வது மேளகர்த்தா இராகமும், "திசி" என்று அழைக்கப்படும் 10வது சக்கரத்தின் 5வது இராகமுமாகிய தர்மவதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஹம்சநாதம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் தற்போது பாடப்படும் வகையில், ஷட்ஜம் (ஸ), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ஸ ரி22 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம2 ரி2
  • இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது ஔடவ-ஔடவ இராகம் எனப்படுகின்றது.

உருப்படிகள்[தொகு]

கிருதி தாளம் கலைஞர்
பன்டுரீதி கோலு ஆதி தியாகராஜர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சநாதம்&oldid=1017428" இலிருந்து மீள்விக்கப்பட்டது