பேர்டினண்ட் டி சோசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்டினண்ட் டி சோசர்
பிறப்பு(1857-11-26)நவம்பர் 26, 1857 ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
இறப்புபெப்ரவரி 22, 1913(1913-02-22) (அகவை 55) in Vufflens-le-Château, VD சுவிட்சர்லாந்து.
காலம்19ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிகட்டமைப்பியம், குறியியல்
முக்கிய ஆர்வங்கள்
மொழியியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கட்டமைப்பியம், குறியியல்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
கையொப்பம்

பேர்டினண்ட் டி சோசர் (Ferdinand de Saussure - 26 நவம்பர் 1857 – 22 பெப்ரவரி 1913) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மொழியியலாளர் ஆவார். இவரது எண்ணக்கருக்கள் (ideas) பல 20 ஆம் நூற்றாண்டில் மொழியியலில் ஏற்பட்ட பல குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைந்தன. இவர் இருபதாம் நூற்றாண்டு மொழியியலின் தந்தை எனப் பரவலாகக் கருதப்படுபவர்களில் இவரும் அடங்குவார். இவரது எண்ணக்கருக்கள் கலைத் துறைகளிலும், சமூக அறிவியல் துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

வரலாறு[தொகு]

பேர்டினண்ட் மொங்கின் டி சோசர் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் 1857 ஆம் ஆண்டு பிறந்தார். இளமையிலேயே குறிப்பிடத்தக்க திறமைகளும் அறிவுத்திறனும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஓராண்டு ஜெனீவாப் பல்கலைக் கழகத்தில் இலத்தீன், கிரேக்கம், சமசுக்கிருதம் ஆகிய மொழிகளையும் பிற பல்வேறு பாட நெறிகளையும் கற்றர். பின்னர் 1876 ஆம் ஆண்டில் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தனது 21 ஆவது வயதில், இந்திய-ஐரோப்பிய மொழிகளில் தொடக்கநிலை உயிரெழுத்து முறைமை பற்றிய ஆய்வுக் கட்டுரை என்னும் தலைப்பிலான நூல் ஒன்றை வெளியிட்டார். பின்னர் ஓராண்டு பேர்லினில் கல்விகற்றார். அப்போது சமசுக்கிருத மொழியியல் சார்ந்த தலைப்பொன்றில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி 1880 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பிறகு விரைவிலேயே அவர் பாரிசுக்குச் சென்றார். அங்கே கோதிக், பழைய உயர் செருமன் ஆகிய மொழிகளிலும் இடையிடையே வேறு பாடங்களிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பாரிசில் 11 ஆண்டுகள் கற்பித்தபின்னர், 1891 ஆம் ஆண்டில் ஜெனீவாவுக்குத் திரும்பினார். இதன் பின்னர் தனது வாழ்க்கைக்காலம் முழுவதும் ஜெனீவாப் பல்கலைக் கழகத்தில் சமசுக்கிருதம், இந்திய-ஆரியம் ஆகியவற்றுக்கு விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1907 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகப் பொது மொழியியல் தொடர்பில் விரிவுரை ஆற்றத் தொடங்கினார். 1911 ஆம் ஆண்டுவரை இதைத் தொடர்ந்த சோசர். 1913 ஆம் ஆண்டு காலமானார்.

பங்களிப்பு[தொகு]

பொது மொழியியற் பாடநெறி[தொகு]

சோசரின் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஆக்கமான பொது மொழியியற் பாடநெறி (Course in General Linguistics) என்னும் நூல், 1961 ஆம் ஆண்டில் இவர் இறந்த பின்னர் வெளியிடப்பட்டது. சோசரின் மாணவர்களான சார்லசு பாலியும் (Charles Bally), ஆல்பர்ட் செச்செகாயேயும் (Albert Sechehaye) சோசரின் விரிவுரைக் குறிப்புக்களை அடிப்படையாகக்கொண்டு இந்நூலைத் தொகுத்தனர். இது 20 ஆம் நூற்றாண்டின் மொழியியலின் அடிப்படையான ஆக்கங்களில் ஒன்றாக ஆனது. உள்ளடக்கத்துக்காக இந்நூல் பெயர் பெற்றதாகச் சொல்லமுடியாது. ஏனெனில், பல 20 ஆம் நூற்றாண்டு மொழியியலாளர்கள் இதிலுள்ள எண்ணக்கருக்கள் பற்றி ஏற்கனவே தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சோசர் மொழியியல் தோற்றப்பாடுகளை விளக்கிய விதம் புதுமையானதாக இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்டினண்ட்_டி_சோசர்&oldid=3861625" இலிருந்து மீள்விக்கப்பட்டது