பி. டி. சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. டி. சாமி (1930- செப்டம்பர் 12, 2004) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். திகில் புனைவு எழுதுவதில் புகழ்பெற்றவர். ”பேய்க் கதை மன்னன்” என்று பெயர் வாங்கியவர். நாஞ்சில் பி. டி. சாமி என்ற பெயரிலும் கதைகளை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சாமி நாகர்கோவில் அருகேயுள்ள மறவன் குடியிருப்பு என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவருக்கு இலட்சுமி என்ற மனைவியும் தங்கம் சித்ரா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

எழுத்துத் துறையில்[தொகு]

18வது வயதில் எழுதத் தொடங்கிய சாமி, தனது வாழ்நாளில் இரண்டாயிரம் புதினங்கள், சுமார் ஐநூறு சிறுகதைகளையும் எழுதினார். இவரது பேய்க் கதைகள் பல வார இதழ்களில் தொடர்களாக வெளியாகியுள்ளன.

புதினங்கள் மட்டுமல்லாமல் ஓட்டல் சொர்க்கம், புனித அந்தோனியார் போன்ற தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். இவர் தயாரித்து இயக்கிய “பாடும் பச்சைக் கிளி” என்ற படம் திரைக்கு வரவாமலேயே முடங்கிவிட்டது.

விருதுகள்[தொகு]

இவரது எழுத்துப்பணியைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டத்தை வழங்கியது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டி._சாமி&oldid=3220802" இலிருந்து மீள்விக்கப்பட்டது