விழிப்புநிலை தடுமாறுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விழிப்புநிலை தடுமாறுதல் (sedation) என்பது தன்னுணர்வு நிலையிலிருந்து வேறுபடும், விழித்தெழ முடியாத அரைத் தூக்கநிலை அல்லது விழிப்புநிலை தடுமாறுதல், கை கால் அசைவுகள் மந்தமாகிப் போதல், வாய்குழறுதல், எழுந்திருக்க முடியாமல் கிடத்தல், மூளையில் கார்ட்டெக்ஸின் செயல்பாடுகள் முடங்குதல் போன்ற நிலைகளைக் குறிக்கும்.

இந்நிலையில் தூக்கம், நினைவு இழப்பு (Unconsciousness), உடல் கட்டுநிலை (Immobility) மற்றும் வலி உணர்வு/வலி இழப்பு (analgia) ஆகிய விளைவுள் ஏற்படும். இந்நிலையை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்ததுதான் மயக்க மருந்து (anaesthesia) எனப்படுகின்றது. அறுவைச் சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருப்பதும், நடந்தது எதுவும் பிற்பாடு நினைவுக்கு வராமல் போவதும்கூட அந்த மருந்துகளின் செயலால்தான். ஒவ்வொரு மருந்தும் குறிப்பிட்ட நரம்புத் தொகுப்பு (குடும்பங்கள்) களை இடைமறிக்கின்றன. தெளிவாகவும், துல்லியமாகவும் அவற்றின் செய்முறை தெரிந்துவிட்டால் அவை ஏன், எப்படி பக்கவிளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது புரியும். பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் மருந்துகளை வடிவமைக்க முடியலாம்.

மயக்க மருந்து கொடுக்கும்போது மருத்துவரோ, மருத்துவ உதவியாளரோ அருகில் இருப்பது அவசியம். எதிர்பாராத பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக நோயாளரைக் கவனிக்க அவர்களில் யாராவது ஒருவர் உடனிருத்தல் அவசியமாகும். முனைப்புக் கவனிப்புப் பிரிவில் (intensive care unit) தூக்க/மயக்க மருந்தின் பயன்பாடு அதிகம்.