ஏர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர் உழவு
சோழவந்தான் அருகே நெல்வயலில் மாடுபூட்டி ஏர் உழவு செய்யும் காட்சி
Wikipedia:Media help
Wikipedia:Media help

ஏர்
மரபு முறையில் ஏர் உழும் இரு இங்கிலாந்து ஷைர் குதிரைகள்
மரபான ஏர் உழவு: உழவர் குதிரைகளையும் ஏரையும் பயன்படுத்தி மண்ணைப் பண்படுத்துகிறார்
13 ஆம் நூறாண்டில் உழவர் ஏருழுதல் ஓவியம், எசுபானிய அரசு நூலகம்
மாடுபூட்டிய ஏருழவு
தென்னாப்பிரிக்காவில் ஏருழும் இழுபொறி. இதி ஐந்து திரும்பவியலாத வார்பலகைகள் உள்ளன. ஐந்தாவதாக இடதே உள்ள காலியான சால் அடுத்த எதிருழவின் முதல் சாலின்போது நிரப்பப்படும்.

ஏர் அல்லது கலப்பை (ஒலிப்பு) (plough) அல்லது plow இரண்டுமே /ˈpl/) என ஒலிக்கும். ஏர் என்பது ஒரு கருவி அல்லது உழவுக்கருவியாகும். இது உழவுத்தொழிலில் தொடக்கநிலையில் வயலின் மண்ணை உழுது அல்லது பதப்படுத்தி (பண்படுத்தி) விதைப்பின் முன்பும் நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் பயன்படுகிறது. மரபாக ஏர் மாடுகளை அல்லது குதிரைகளைப் பூட்டி உழப்பட்டன. ஆனால் அண்மையில் இழுபொறிகளால் இயக்கப்படுகின்றன. ஏர் மரத்தாலோ இரும்பாலோ அல்லது எஃகுச் சட்டத்தாலோ செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி மண்ணை கிண்ட பயன்படுத்தப்படுகிறது. இது பல எழுத்தறிந்த வரலாறுகளில் அடைப்படைக் கருவியாக இருந்தும், ஆங்கிலத்தில் இது கி.பி1100 க்குப் பின்னரே வழங்கிவருகிறது. அதற்குப் பிறகு இது அடிக்கடி வழக்கில் புழங்கியுள்ளது. ஏர் மாந்தரின் வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாண்கருவி ஆகும்.

ஏர்கள் வேளாண்மைக்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எண்ணெய்வளங்கள் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.

ஏர்கொண்டு உழுதலின் நோக்கமே மேல்மண்ணை புரட்டி வளமான சத்துமிக்க அடிமண்ணை மேற்பரப்புக்குக் கொண்டுவருவதேயாகும். அதேநேரத்தில் உழுதல் களையையும் முன்பயிரிட்ட எச்சங்களை அடியில் புதைத்து அவற்றைச் சிதையச் செய்கிறது. ஏரால் உழும்போது ஏற்படும் உழவு சால்களில் வளமண் பொதிந்தமையும். உழுத வயல் உலரவிடப்படும். பின்னர் நடவுக்கு முன் பரம்படிக்கப்படும். உழுது பண்படுத்தல் மண்ணை ஒருசீராக்கி மேலே அமைந்த 12 முதல் 25 செ.மீ ஆழ உழுத அடுக்கு மண்ணை நடவுக்கு முன் உருவாக்கும். பலவகை மண்களில் பயிரின் வேர்கள் உழுத அடுக்கு மேல்மண்னிலேயே அமையும்.

முதலில் மாந்தரே ஏரை இழுத்து உழுதாலும் பின்னர் விலகுகளைப் பூட்டி உழவு செய்யப்பட்டதும் ஏருழவு திறம்பட நடந்த்து. முதலில் எருதுகளைப் பூட்டி எரால் உழவு செய்துள்ளனர். பின்னர் குதிரைகள், கோவேறு கழுதைகளைப் பூட்டியும் உழவு நடந்துள்ளது. பிறகு இதற்கு பலவகை விலங்குகளை இடத்திற்கு ஏற்ப பூட்டி உழவு செய்யப்பட்டுள்ளது. தொழில்மயமாகிய நாடுகளில், முதல் எந்திரவகை ஏர் நீராவிப் பொறிகளைப் பூட்டிய இழுபொறிகளால் உழப்பட்டுள்ளது. ஆனால் இவை மெல்ல மெல்ல உள்ளெரி பொறிகள் பூட்டிய இழுபொறிகளால் பதிலீடு செய்யப்பட்டன.

அயர்லாந்தில் உழவுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் தரப்படுகின்றன. மண்சரிவும் அரிப்பும் ஏற்படும் பகுதிகளிலும் மேல்மண் உழவு நுட்பங்கள் பயன்படும் பகுதிகளிலும் வர வர ஏர் உழவு குறைந்துகொண்டே வருகிறது.

மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. இரண்டு எருதுகளால் (மாடுகளால்) இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது கலப்பை. பல நூற்றாண்டுகளாக உழவர்களால் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. கலப்பையால் ஓர் அடி ஆழம் வரை உழ முடியும்.


கலப்பைகள் மூன்று வகைப்படும்: மரத்தினாலான கலப்பை (நாட்டுக் கலப்பை), இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை (வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, ஒரு வழிக் கலப்பை) மற்றும் சிறப்பு கலப்பைகள் (ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி)[1]. தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

சொற்பிறப்பியல்[தொகு]

ஏரால் உழுதல்.

பழைய ஆங்கிலத்திலும், பிற ஜெர்மானிய மொழிகளிலும் மரபாக ஏருக்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. எடுத்துகாட்டாக, பழைய ஆங்கிலத்தில் சுல்கு ( sulh) எனவும் பழைய உயர்ஜெமானியத்தில் மெடெலா ( medela) கீசா ( geiza) குவோகிலின் ( huohilī(n)) ஆகிய பெயர்களாலும் பழைய நோர்சு மொழியில் ஆர்திர் ( arðr) எனவும் சுவீடிய மொழியில் ஆர்தெர் ( årder) எனவும் கோதிக மொழியில் கோகா ( hōha0 எனவும் ஏர் (ard )(plough) வழங்கப்படுகிறது. இன்று வழக்கில் உள்ள plough அல்லது plow எனும் சொற்கள் 1700 வரை ஏர் எனும் சொல்லுக்கு வழங்கவில்லை.

ஏருக்கான plough எனும் ஆங்கிலச் சொல் தமிழில் " பள்ளு" என்ற தமிழ் சொல்லில் இருந்தே பிறந்தது.பள்ளு என்றால் "உழவு". உழவன் இப்பூமியில் ஏறி உழுவதால்,பள்ளம் தோண்டுவதால் அது "ஏர்" எனப்பட்டது.

ஆனால் ஐரோப்பியர் பழைய நோர்சு சொல்லாகிய plógr என்பதில் இருந்து வந்ததாகவும் இது ஒரு ஜெர்மானியச் சொல்லாகும் கருதுவர். இது அவர்களுக்கு மிகவும் பின்னால் வழக்குக்கு வந்த சொல்லாகும்.

கோதிக மொழியில் இது இல்லாமையால் இது வட இத்தாலிய மொழிகளில் இருந்து பெற்ற கடன்சொல்லாகக் கருதப்படுகிறது. இதன் வேர்ச்சொல் plaumorati , "wheeled heavy plough" என்ற பொருளைக் குறித்துள்ளது (பிளினிPliny இயற்கை வரலாறு 18, 172). இது இலத்தீன மொழியில் plaustrum "farm cart", plōstrum, plōstellum "cart", and plōxenum, plōximum "cart box" என்ற பொருளில் வழங்கியுள்ளது.[2][3]இச்சொல் முதலில் வடமேற்கு ஐரோப்பாவில் உரோமானியரிடம் ஐந்தாம் நூற்றாண்டில் பெருவழக்கில் இருந்த wheeled heavy plough ஐக் குறித்திருக்கவேண்டும் .[4] ஓரெல் (2003) என்பார்[5] plough எனும் சொல் முந்து இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லாகிய *blōkó- என்பதோடு தொடர்புபடுத்துகிறார். இது ஆர்மேனிய மொழியில் peɫem "தோண்டு" எனவும் வேல்சு மொழியில் bwlch "உடை" எனவும் மாறியுள்ளது என்கிறார். உண்மையில் இந்தோ-ஐரோப்பிய சொல்.

ஏரின் உறுப்புகள்[தொகு]

நிகழ்கால ஏரின் விளக்கப்படம்

விளக்கப்படம் (வலது) ஏரின் அடிப்படை உறுப்புகளைக் காட்டுகிறது:

  1. நுகம் அல்லது கிடை விட்டம்
  2. ஏர்க்கால்
  3. குத்துநிலைக் கட்டுபடுத்தி அல்லது சீராக்கி
  4. துளறு (கத்தித் துளறு காட்டப்பட்டுள்ளது, ஆனால் வட்டுத் துளறே பெரு வழக்கில் உள்ளது)
  5. உளி (முன்கொழு)
  6. கலப்பை அல்லது கொழு (முதன்மைக்கொழு)
  7. பரம்பு அல்லது வார்பலகை

குறிப்பிடப்படாத ஏரின் உறுப்புகளாக சட்டம் பின்வாரி, மண்வாரி, shin, களைப்பலகை, கைப்பிடிகள் ஆகியனவும் உள்ளடங்கும்.

அண்மை ஏர்களிலும் சில பழைய ஏர்களிலும் கொழுவும் பின்வாரியும் வார்பலகையில் இருந்து பிரித்து வைக்கப்படுகின்றன. எனவே முன்னவற்ரை வார்பலகையை மாற்றாமலே பதிலீடு செய்து மாற்றலாம். சிராய்ப்பு நாட்பட நாட்பட மண்ணோடு தொடர்புள்ள அனைத்து ஏரின் உறுப்புகளும் சிதைகின்றன.

வரலாறு[தொகு]

சீனாவின் குபேயில் எருமை பூட்டி ஏருழுதல்

கொழுவால் கிளறல்[தொகு]

வேளாண்மை முதலில் உருவாகும்போது தோண்டுகழிகளும் கொழுக்களும் (கொளுறுகளும்) பயன்படுத்தி உயர் வள மேல்மண்ணைத் தோண்டிக் கிளறினர். நைல்நதி ஒவ்வோராண்டும் வெள்ளம் வடியும்போதும் மண்னை வளமாக்கியது. இது சால் உழவு வேளாண்மையை வளர்த்தது. இவை ஓரிட்த்தில் மட்டும் தோன்றவில்லை. வேளாண்மை நடந்த அனைத்துப் பகுதிகளிலும் இவை ஒருங்கே உருவாக்கப்பட்டு வழக்கில் இருந்துள்ளன. கொழுவால் உழுத வேளாண்மை வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் மரபாக நடைபெற்றுள்ளது. இங்கு கற்பரல் மண்ணிலும் (மணலிலும்) செஞ்சரிவு சாரல்களிலும் கிழங்குப் பயிர்களும் பருமணி கூலங்களும் சற்ரு இடைவெளி விட்டு நட்டுப் பயிரிடப்பட்டன. இப்பகுதிகளுக்கே (குறிஞ்சிப் பகுதிக்கே) மிகப்பொருத்தமானது என்றாலும் இது அனைத்துப் பகுதிகளும் கூட பரவலாகப் பின்பற்றப்பட்டது. கொழுவுக்கௌ மாற்ரக பன்றிகளை விட்டு மேல்மண்ணைக் கிளறிப்போட்டும் சில பண்பாடுகளில் தொடக்கநிலை வேளாண்மை நடந்தேறியது. தமிழகத்தில் இந்த இருவகை வேளாண்மைக்கான செவ்வியல் காலப் பாடல் சான்றுகள் உள்ளன.

கீறல்வகை ஏர்[தொகு]

பண்டைய எகுபதியக் கீறல்வகை ஏர், c. கி.மு 1200 . சென்னெதுயெம்மின் கல்லறை

மிகப்பழைய வில்வகைக் கீறியில் ஓர் இழுகழி (அல்லது விட்டம்/நுகம்) pierced by a thinner vertical pointed stick called the தலை (அல்லது உடல்) எனும் மெல்லிய குத்துநிலைக் கழி குத்திட்டு அமைய இதன் ஒருமுனையில் பிடி (கைப்பிடி)யும் மறுமுனையில் ஒரு கொழு (அல்லது வெட்டலகு)ம் அமைந்திருக்கும். இந்த வெட்டலகு தினைகளுக்கு ஏற்ற மேல்சாலோட்ட மேல்மண்னில் இழுத்துச் செல்லப்படும். கீறிவகை ஏர் புதுமண்னை நன்கு உழ ஏற்றதல்ல. எனவே கொழு அல்லது துளறு புற்பூண்டுகளை அகற்றும்ப்டி, கொழுவுக்கு முன் ஆழ்சாலோட்ட கையால் கொத்தும் துளறு பயன்படுத்தப்படும்.கீறி சால்களுக்கிடையே கிளறாத மண்னை விட்டுச் செல்வதால், இவ்வகை வயல்கள் நெடுக்குவாட்டிலும் குறுக்கவாட்டிலும் குறுக்கு மறுக்காக உழப்படும். இது கெல்டிக் வகை அல்லது சதுரவகை உழவு எனப்படும்.[6] கீறல்வகை உழவு வெள்ளத்தால் ஒவ்வோராண்டும் வெள்லத்தால் வளமாக்கப்படும் மணற்பாங்கான அல்லது களிமட்பாங்கான வயல்களுக்கு ஏற்றதாகும். இவ்வகை உழவு நைல்நதிப் படுகையிலும் செம்பிறை வளமண்ணிலும் ஓரளவு தினைகள் பயிரிட ஏற்ற மெல்லிய மேல்மண் பகுதிகளிலும் கீரல்வகை ஏர் உழவு நடைமுறையில் உள்ளது. பிந்தைய இரும்புக் காலத்தில் கீறல் ஏரோடு துளறுகள் பொருத்தப்பட்டன.

வார்பலகை ஏர்[தொகு]

ஏரின் உறுப்புகள்: 1) நுகம்; 2) மும்முனை ஏர்க்கால்; 3) குத்துநிலைச் சீராக்கி; 4) துளறு; 5) உளி; 6) கொழு; 7) வார்பலகை.
இலாவோசின் சை பன் டன் பகுதியில் நீரெருமை பூட்டி ஏரால் உழுதல்

ஏர் (நிலப் பரப்பளவை)[தொகு]

நில அளவையில்ஏர் என்ற சொல் பயன்படுகிறது. பதின்ம முறையில் நிலப் பரப்பளவின் அலகு ஏர் (are) ஆகும்.

  • 1 ஏர் - 2.47 செண்ட்
  • 1 ஏர் - 100 சதுர மீட்டர் (sq.m.)

தற்போது ஏர் என்ற அலகு அதிகப் பயன்பாட்டில் இல்லாமல், எக்டேர் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.

காட்சி மேடை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நில பண்படுத்துதல்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
  2. C.T. Onions, ed., Oxford Dictionary of English Etymology, s.v. "plough" (Oxford: Clarendon Press, 1996).
  3. Webster's Encyclopedic Unabridged Dictionary of the English Language, s.v. "plow" (NY: Gramercy Books, 1996).
  4. Dr. Judith A. Weller, "Agricultural Use", in Roman Traction Systems: accessed 20 April 2012, available at [1]
  5. Orel, Vladimir (2003). A Handbook of Germanic Etymology. Leiden, Netherlands: Brill. s.v. "*plōȝuz".
  6. Lynn White, Jr., Medieval Technology and Social Change (Oxford: University Press, 1962), p. 42.

மேலும் படிக்க[தொகு]

  • Brunt, Liam. "Mechanical Innovation in the Industrial Revolution: The Case of Plough Design". Economic History Review (2003) 56#3, pp. 444–477. வார்ப்புரு:JSTOR.
  • Hill, P. and Kucharski, K. "Early Medieval Ploughing at Whithorn and the Chronology of Plough Pebbles", Transactions of the Dumfriesshire and Galloway Natural History and Antiquarian Society, Vol. LXV, 1990, pp 73–83.
  • Nair, V. Sankaran. Nanchinadu: Harbinger of Rice and Plough Culture in the Ancient World.
  • Wainwright, Raymond P.; Wesley F. Buchele; Stephen J. Marley; William I. Baldwin (1983). "A Variable Approach-Angle Moldboard Plow". Transactions of the ASAE 26 (2): 392–396. doi:10.13031/2013.33944. http://lib.dr.iastate.edu/abe_eng_pubs/134/. 
  • Steven Stoll, Larding the Lean Earth: Soil and Society in Nineteenth-Century America (New York: Hill and Wang, 2002)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ploughs
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்&oldid=3432911" இலிருந்து மீள்விக்கப்பட்டது