பீல் மாவட்டப் பாடசாலைச் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீல் மாவட்டப் பாடசாலைச் சபை
சபை அலுவலகம் அமைந்துள்ள இடம் மிசிசுக, ஒன்டாரியோ, கனடா
பள்ளிகளின் எண்ணிக்கை 198 ஆரம்பப் பாடசாலைகள்
36 உயர் தரப் பாடசாலைகள்
2011-12 budget (CAD $ millions) $1.56 பில்லியன்
மாணவர்கள் எண்ணிக்கை 108,503 ஆரம்ப நிலைப் பாடசாலை மாணவர்கள்
44,252 உயர் தரப் பாடசாலை மாணவர்கள்
சபையின் தலைவர் சேனட்டு மேக்டௌகல்டு
கல்வி இயக்குநர் தோனி பொன்ட்சு
தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பிராம்ப்டன் (தேவிடு கிரீன், ஆரிந்தர் மல்கி, சுசான் நர்சு, இசுட்டீவு கவனாகு, பெரில் வோர்டு), கலேடன் (இசுட்டான் கேமரூன்), மிசிசுக (சேனட்டு மேக்டௌகல்டு, சூ இலாட்டன், இரிக்கு வில்லியம்சு,மெரிடித்து சான்சன், பிராடு மெக்டொனால்டு, ஜெவ் ஒயிட்டு)
மாணவ பொறுப்பாளர்கள் மே சோ, சிவானி சா
www.peelschools.org

பீல் மாவட்டப் பாடசாலைச் சபை (Peel District School Board) என்பது பீல் மாவட்டத்தில் 230 பாடசாலைகளின் மூலம் ஏறத்தாழ 155000 மாணவர்களுக்குக் கற்பித்தலை மேற்கொள்ளும் சபையாகும்.[1] இந்தச் சபையில் 15000இற்கு மேற்பட்ட முழுநேர வேலையாட்கள் உள்ளனர். அத்துடன், பீல் பிரதேசத்தில் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சபைகளில் இதுவுமொன்றாகும்.[2]

வரலாறு[தொகு]

1969இல் பத்து உள்ளூர்ச் சபைகள் இணைந்து பீல் மாவட்டக் கல்விச் சபையை ஆரம்பித்தன. பின்னர், 1973இல் பீல் கல்விச் சபை என இதனுடைய பெயர் மாற்றப்பட்டது. 1998இலிருந்து தற்போதைய பெயரான பீல் மாவட்டக் கல்விச் சபையானது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "உங்களுடைய கேள்விகள்". Archived from the original on 2012-06-02. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
  2. ["ஏன் நீங்கள் எங்களுடன் ஒரு வேலை பற்றிக் கவனங்கொள்ள வேண்டும் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-07. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22. ஏன் நீங்கள் எங்களுடன் ஒரு வேலை பற்றிக் கவனங்கொள்ள வேண்டும் (ஆங்கில மொழியில்)]

வெளி இணைப்புகள்[தொகு]