தகவல் தொடர்பு செயற்கைக்கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க ராணுவ மில்ஸ்டார் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்

தகவல்தொடர்பு செயற்கைக்கோள் (சில நேரங்களில் சாட்காம் ) என்று சுருக்கி அழைக்கப்படும்) என்பது செயற்கை விண்கோள், இவை தொலைத்தொடர்பு காரணங்களுக்காக விண்வெளியில் நிலை நிறுத்தப்படும். இணைச்சுற்று வட்டப் பாதைகள், மோல்னியா சுற்றுவட்டப்பாதைகள், மற்ற நீள் சுற்றுவட்டப் பாதைகள் மற்றும் குறைந்த (போலார் மற்றும் போலார் அல்லாத) புவி சுற்றுவட்டப் பாதைகளை நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள் பயன்படுத்துகின்றன. [1]

நிலையான (இடை நில்லா) சேவைகளுக்காக, தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள் நுண்ணலை வானொலி ஒலிபரப்பு தொழில்நுட்பத்தை, கடல்வழி தகவல்தொடர்பு கம்பிகளுக்கு கொடையாக வழங்கியுள்ளது. கப்பல்கள், வாகனங்கள், விமானங்கள் மற்றும் கையடக்க முனையங்கள் போன்ற நகர்தன்மை கொண்ட பயன்பாடுகளிலும், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பிலும், கம்பியிணைப்பு உள்ளிட்ட மற்ற தொழில்நுட்ப பயன்பாடுகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.

வரலாறு[தொகு]

காணவும்: புவி இணைச்சுற்று வட்டப் பாதை மற்றும் புவி இணைநிலைச் சுற்று வட்டப் பாதை செயற்கைக்கோள்கள்.

முந்தைய திட்டங்கள்[தொகு]

முதன் முதலாக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஸ்பூட்னிக் 1, இது அக்டோபர் 4ம் தேதி 1957ம் ஆண்டு செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளில் 20.005 மற்றும் 40.002 MHz ஆகிய இரண்டு அலைவரிசைகளில் இயங்கக் கூடிய வானொலி-அலைபரப்பி உள்ளிணைக்கப்பட்டது. தகவல்தொடர்புக்காக அனுப்பப்பட்ட முதல் அமெரிக்க செயற்கைக்கோள் புராஜெக்ட் ஸ்கோர், இது 1958ம் ஆண்டு செலுத்தப்பட்டது, குரல் வழிச் செய்திகளை சேமிப்பதற்கும், பகிர்வதற்கும் ஒலிநாடா பதிவுக் கருவி பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்வைட் டி. ஐன்சென்ஹோவர் தெரிவித்த கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை உலகம் முழுவதும் அனுப்புவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. நாசா தனது மீளொலி செயற்கைக்கோளை, 1960ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது; தகவல்தொடர்புகளுக்காக, 100-அடி (30 m) அலுமினியத்தால் வெப்பமூட்டப்பட்ட பிஇடி படலத்தால் ஆன பலூன், எதிரிடை பிரதிபலிப்பானாக செயல்பட்டது. கொரியர் ஐபி என்ற செயற்கைக்கோளை ஃபில்கோ வடிவமைத்தது. இதுவும் 1960ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இது தான், மீட்டுரை கருவி அளிக்கும் முதல் செயற்கைக்கோள்.

டெல்ஸ்டார் என்பது உலகின் முதல் உந்தப்பட்ட, நேரடி ஒளிபரப்பு தகவல்தொடர்பு செயற்கைக்கோள். AT&T நிறுவனத்தின் கீழ் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளை வடிவமைப்பதற்காக, AT&T, பெல் டெலிஃபோன் லெபாரடீஸ், நாசா, பிரிட்டனின் பொது அஞ்சல் நிலையம் மற்றும் பிரெஞ்ச் தேசிய PTT (அஞ்சல் அலுவலகம்) ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கேப் கார்னிவல் பகுதியிலிருந்து ஜூலை 10, 1962ம் ஆண்டு, முதல் தனியார் பங்களிப்புடனான செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. டெல்ஸ்டார் செயற்கைக்கோளானது நீள் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது (ஒவ்வொரு 2 மணி 37 நிமிடங்களுக்கு முடிக்கப்பட்டதூ), 45° கோணத்தில் பூமத்திய ரேகை பாதையில் சுழன்றது.

அதற்கு முந்தைய இணைச்சுற்று செயற்கைக்கோள்கள் ஹியூக்ஸ்’ சின்காம் 2, இவை ஜூலை 26, 1963ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. சின்காம் 2 நாளொன்றுக்கு ஒருமுறை சீராக பூமியை சுற்றி வந்தது. ஆனால் அது வடக்கு-தெற்கு but because it still had north-south சுழற்சியைக் கொண்டிருந்ததால், அதை தடமறிவதற்கு சிறப்பு சாதனம் தேவைப்பட்டது.

இணைச் சுற்றுவட்டப் பாதைகள்[தொகு]

புவி இணைச் சுற்றுவட்டப் பாதை

இணைச் சுற்றுவட்டப் பாதையில் உள்ள ஒரு செயற்கைக்கோள், பூமியை அடிப்படையாகக் கொண்ட கண்காணிப்புக்கு, நிலையான இடத்தில் இருந்து கொண்டு செயல்படும். ஒரு இணைச் சுற்றுவட்ட செயற்கைக்கோளானது, பூமத்திய ரேகைக்கு மேலே நாளொன்றுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி சுழல்கிறது.

தகவல்தொடர்புகளுக்கான பயன்பாடுகளுக்கு இணைச் சுற்றுவட்டப் பாதை மிகவும் பயனுள்ளது, ஏனெனில் செயற்கைக்கோளை நோக்கி இயக்க வேண்டிய தாழ்வான ஆண்டெனாக்கள் யாவும், செயற்கைக்கோளின் சுழற்சியை தடமறிவதற்கான விலை உயர்ந்த சாதனங்களின் அவசியமின்றி, திறம்பட இயங்கக்கூடியவை. குறிப்பாக, அதிக அளவிலான தாழ்வான ஆண்டெனாக்கள் (நேரடி தொலைக்காட்சி வழங்கல் போன்ற) தேவைப்படும் பயன்பாடுகளுக்கு பெரும் பயனளிக்கும், தாழ்வான சாதனங்களுக்கு ஆகும் செலவுகளைச் சேமிப்பதன் மூலம், உயர் இணைச் சுற்றுவட்டப் பாதைக்குள் செயற்கைக்கோளை செலுத்துவதற்கு ஆகும் செலவுகளையும், சிக்கல்களையும் குறைக்கிறது.

இணைச் சுற்றுவட்டப் பாதை செயற்ககக்கோள் குறித்து முதன்முதலாக உலகுக்கு எடுத்துரைத்தவர் ஆர்தர் சி. கிளார்க், அதைக் கட்டமைக்கும் பணிகளை மேற்கொண்டது கான்ஸ்டன்டின் சியோல்கோவ்ஸ்கி, 1929ம் ஆண்டு பணியைத் தொடர்ந்தது ஹெர்மன் ஃபோடோக்னிக் (ஹெர்மன் நூர்டங் என்ற பெயரில் எழுதினார்) தஸ் ப்ராப்ளம் தெர் பிஃபாரங் தெஸ் வெல்ட்ராம்ஸ் - தெர் ரகேடன்-மோட்டார் . அக்டோபர் 1945ம் ஆண்டு “கூடுதல்-நிலம்சார்ந்த ஒலிபரப்புகள் பரணிடப்பட்டது 2007-12-25 at the வந்தவழி இயந்திரம்” என்ற தலைப்பில் வயர்லெஸ் வேர்ல்டு என்ற பிரிட்டிஷ் பத்திரிகையில் கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில், வானொலி சிக்னல்களை இயக்குவதற்காக இணைச் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை செயல்படுத்துவது குறித்த அடிப்படைகளை விளக்கியிருந்தார். கட்டுரையை எழுதிய ஆர்தர் சி. கிளர்க், பின்னாளில் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களின் கண்டுபிடிப்பாளர் என்றழைக்கப்பட்டார்.

முதன்முதலாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட அசல் இணைச் சுற்று செயற்கைக்கோள், சின்காம் 3. இது ஆகஸ்ட் 19, 1964ம் ஆண்டு செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 180° கிழக்கு தீர்க்கரேகையில், சர்வதேச நேரக் கோட்டில் நிலைநிறுத்தப்பட்டது. அதே ஆண்டு சோதனை முயற்சியாக 1964 கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டோக்கியோ, ஜப்பானில் நடந்தபோது, அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டது. இது பசிபிக் பெருங்கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு.

சின்காம் 3 செயற்கைக்கோளுக்குப் பிறகு, இன்டெல்சாட் I என்றழைக்கப்படும் இயர்லி பேர்டு , ஏப்ரல் 6 1965ம் ஆண்டு செலுத்தப்பட்டது. இது சுற்றுவட்டப் பாதையில் 28° மேற்கு தீர்க்கரேகையில் நிலைநிறுத்தப்பட்டது. இது தான் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக தொலைத்தொடர்புகள் மேற்கொண்ட முதல் இணை சுற்று செயற்கைக்கோள்.

நவம்பர் 9 1972, வட அமெரிக்காவின் முதல் இணை சுற்று செயற்கைக்கோளான அனிக் அல், டெலிசாட் கனடா மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது, இதைத் தொடர்ந்து அமெரிக்கா, வெஸ்டர் 1 செயற்கைக்கோளை மேற்கத்திய கூட்டமைப்பு மூலம் ஏப்ரல் 13, 1974ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

டிசம்பர் 19 1974ம் ஆண்டு, உலகின் முதல் மூன்று-அச்சு நிலைப்படுத்தக்கூடிய இணைச் சுற்று தகவல்தொடர்பு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது: பிரான்கோ-ஜெர்மன் சிம்பனி.

டெல்ஸ்டர், சின்காம் 3, இயர்லி பேர்டு, அனிக், அல் மற்றும் வெஸ்டர் 1 ஆகிய செயற்கைக்கோள்களை செலுத்தியபின், ஆர்சிஏ அமெரிகாம் (பின்னர் ஜிஇ அமெரிகாம் எனப்பட்டது, இப்போது எஸ்இஎஸ் அமெரிகாம் என்றழைக்கப்படுகிறது) நிறுவனமானது 1975ம் ஆண்டு சாட்காம் 1 செயற்கைக்கோளை செலுத்தியது. முந்தைய கேபிள் டிவி அலைவரிசைகளான WTBS (இப்போது டிபிஎஸ் சூப்பர்ஸ்டேஷன்), எச்பிஓ, சிபிஎன் (இப்போது ஏபிசி குழுமம்) மற்றும் தெ வெதெர் சேனெல் போன்றவை சாட்காம் 1 செயற்கைக்கோள் வழியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தி அனைத்து பகுதிகளிலும் கேபிள் டிவி ஒளிபரப்பு தலைமையகங்கள் வழியாக மேற்கூறிய அலைவரிசைகள் இயங்கியதால் பிரபலமாயின. அத்துடன், ஏபிசி, என்பிசி மற்றும் சிபிஎஸ் போன்ற அமெரிக்காவில் உள்ள ஒளிபரப்பு தொலைக்காட்சி நெட்வொர்க்குகளால் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் அவர்களது அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் நிலையங்களில் நிகழ்ச்சிகள் வினியோகிக்கப்பட்டது. சாட்காம் 1 மிகப் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இதற்குக் காரணம், அமெரிக்காவின் வெஸ்டர் 1 செயல்படுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தகவல்தொடர்பு ஆற்றலைக் கொண்டுள்ளது (வெஸ்டர் 1 இல் அலைவாங்கிகள் எண்ணிக்கை 12 ஆக இருந்த போது, இதில் 24 இருந்தது), இதனால் அலைவாங்கிகளுக்கான பயனாளர் கட்டணங்கள் குறைவாயின. அதன் பின்னர் வந்த ஆண்டுகளில் அதிகளவிலான அலைவாங்கிகளின் எண்ணிக்கையைக் கொண்ட செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டன.

2000ம் ஆண்டில், ஹியூக்ஸ் ஸ்பேஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ் (இப்போது போயிங் சாட்டிலைட் டெவெலப்மென்ட் சென்டர், உலகம் முழுவதும் சேவையில் உள்ள நூற்றுக்கும் அதிகமான செயற்கைக்கோள்களில் 40 சதவீதம் வரை வடிவமைத்தது. ஸ்பேஸ் சிஸ்டம்ஸ்/லோரல், ஆர்பிடல் சைன்சஸ் கார்பரேஷன் ஸ்டார் பஸ் தொடருடன், லாக்ஹீட் மார்டின் (முன்னாள் ஆர்சிஏ ஆஸ்ட்ரோ எலெக்ட்ரனிக்ஸ்/ஜிஇ ஆஸ்ட்ரோ ஸ்பேஸ் பிசினஸ் நிறுவனத்தை சொந்தமாக்கியுள்ளது), நார்த்ராப் கிரம்மேன், அல்கேடல் ஸ்பேஸ், இப்போது தலேஸ் அலேனியா ஸ்பேஸ் இதனுடன் ஸ்பேஸ்பஸ் தொடர் மற்றும் ஈட்ஸ் ஆஸ்ட்ரியம் ஆகியன மற்ற செயற்கைக்கோள் உற்பத்தியாளர்களாவர்.

குறைந்த-புவி-சுற்றுவட்டப் பாதை செயற்கைக்கொள்கள்[தொகு]

சியானில் உள்ள புவி சுற்றுவட்டப் பாதை

குறைந்த புவி சுற்றுவட்டப் பாதை (LEO) என்பது பூமியின் மேற்பரப்பிலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுழற்சி சுற்றுவட்டப் பாதை, அத்துடன், 90 நிமிட காலத்தை(பூமியைச் சுற்றுவதற்கான நேரம்) எடுத்துக்கொளும். அவற்றின் குறைந்த ஏற்றக்கோணத்தின் காரணமாக, துணைச் செயற்கைக்கோள் புள்ளியிலிருந்து தோராயமாக 1000 கிலோமீட்டர்கள் அரைவிட்டத்துக்குள்ளாக மட்டுமே இந்த செயற்கைக்கோள்கள் தோன்றும். அத்துடன், குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் தரைப்பகுதி நிலைக்கேற்ப விரைவாக தனது இருப்பை மாற்றிக்கொள்ளும். எனவே, தடையில்லா இணைப்பு தேவைப்படும் பட்சத்தில் உள்ளூர் பயன்பாடுகளுக்குக் கூட, அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் தேவை.

இணைச் சுற்று செயற்கைக்கோள்களைக் காட்டிலும், குறைந்த புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப் பாதையில் செலுத்துவதற்கான செலவு குறை தான், அத்துடன் தரைப்பகுதியுடனான அருகாமையின் காரணமாக, உயர்சிக்னல் திறன் (குறைந்த தொலைவு என்பதால் சிக்னல் திறன் மறையும் போது திரும்ப அழைத்துக் கொள்ளும், எனவே இதற்கான உழைப்பும் குறையும்) தேவையிருக்காது. இதன் மூலம் செயற்கைக்கோள் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செலவைப் பொறுத்து வர்த்தகம் மாறுபடுகிறது. அத்துடன், செயற்கைக்கோளுடன் உள்ளிணைக்கப்பட்ட மற்றும் தரையிலுள்ள சாதனங்களுக்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாடுகள், இரண்டு வகையான திட்டங்களையும் ஆதரிக்க வேண்டும்.

இணக்கத்தன்மையுடன் இயங்கும் செயற்கைக்கோள்களின் குழு, செயற்கைக்கோள் நட்சத்திரக்கூட்டம் என்றழைக்கப்படும். குக்கிராமங்களில் செயற்கைக்கோள் தொலைபேசி சேவைகளை முதன்மையாக வழங்கும் இரண்டு நட்சத்திரக்கூட்டங்கள், இரிடியம் மற்றும் குளோபல்ஸ்டார் அமைப்புகள் என்றழைக்கப்படும். இரிடியம் அமைப்பில் 66 செயற்கைக்கோள்கள் உள்ளன. மற்றொரு LEO செயற்கைக்கோள் நட்சத்திரக்கூட்டமான டெலிடெசிக், மைக்ரோசாப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த பால் ஆலன் என்பவரைப் பின்புலமாகக் கொண்டது. இதில் 840 செயற்கைக்கோள்கள் உள்ளன. பின்னர் இந்த எண்ணிக்கை 288 என்ற அளவில் குறைந்தது, இறுதியில் ஒரு சோதனை செயற்கைக்கோளை செலுத்துவதோடு நிறைவு பெற்றது.

பூமியின் ஒரு பகுதியைக் கடக்கும் போது கிடைக்கும் டேட்டாவை சேமித்து வைத்துக் கொண்டு, பின்னர் பூமியின் வேறொரு பகுதியைக் கடக்கும் போது, அந்த டேட்டவை கடத்தும் குறைந்த புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக்கோளைப் பயன்படுத்தி, தொடர்ச்சியில்லாத தகவல் திரட்டை மேற்கொள்வது சாத்தியம். இது கனடாவின் கேஸ்ஸியோப் தகவல்தொடர்பு செயற்கைக்கோளின் கேஸ்கேட் அமைப்புடன் இது சாத்தியப்படும். இந்த சேமித்து, பகிரும் முறையைப் பயன்படுத்தும் மற்றொரு அமைப்பு, ஆர்ப்காம்.

மோல்னியா செயற்கைக்கோள்கள்[தொகு]

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, இணை சுற்று செயற்கைக்கோள்களை, பூமத்திய ரேகைக்கு மேலே இயக்குவது கட்டாயமாகிறது. இதன் விளைவாக, உயர் அட்சரேகைகளில் சேவைகள் அளிப்பதற்கு இவை பொருத்தமானவை அல்ல: உயர் அட்சரேகைகளில், இணை சுற்று செயற்கைக்கோள்கள் அடிவானத்தில் தாழ்வாகத் தோன்றுகிறது. இதனால் இணைப்புத்தன்மை பாதிக்கப்படுவதுடன், பல்வழி (சிக்னல்கள் தரை மற்றும் தரை ஆண்டெனாவை பிரதிபலிக்கத் தவறுவதால் ஏற்படும் தலையீடு) ஏற்படக்கூடும். மோல்னியா தொடரின் முதல் செயற்கைக்கோள் ஏப்ரல் 23 1965ம் ஆண்டு செலுத்தப்பட்டது, அத்துடன் சோதனை தொலைக்காட்சி சிக்னல்களின் ஒளிபரப்பை மாஸ்கோ அப்லிங்க் நிலையத்திலிருந்து, டவுன்லிங்க் நிலையங்கள் அமைந்துள்ள சைபீரியா மற்றும் ரஷ்யாவின் தூரக் கிழக்கிலுள்ள, நாரில்ஸ்க், கபாரோவ்ஸ்க், மகாதன் மற்றும் விளாடிவோஸ்டாக் போன்ற பகுதிகளுக்கு பயன்படுத்துகிறது. 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் சோவியத் பொறியாளர்கள் தனிச்சிறப்பான அமைப்பை உருவாக்கினர், இது தேசிய தொலைக்காட்சி நெட்வொக் சார்ந்த செயற்கைக்கோள் தொலைக்காட்சியினுடையது, மோல்னியா செயற்கைக்கோள்களைச் சார்ந்த இந்த அமைப்பானது ஆர்பிட்டா என்றழைக்கப்பட்டது.

மோல்னியா சுற்றுவட்டப் பாதைகள், சிலவற்றுக்கு மாற்றாக உள்ளது. மோல்னியா சுற்றுவட்டப் பாதை வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது, சுற்றுவட்டப் பாதையின் வடக்குப் பகுதியில் தேர்ந்தெடுத்த நிலைகளில் நல்ல ஏற்றத்துக்கு உறுதியளிக்கிறது. (அடிவானத்தின் மேலே செயற்கைக்கோளின் நிலையை விரிவுசெய்யும் நிலைதான் ஏற்றம் எனப்படுகிறது. இதன்காரணமாக, அடிவானத்தைத் தொடும்போது பூஜ்ஜியத்தில் இருக்கும் செயற்கைக்கோளின் ஏற்றம், நேரடியாக மேலெழுந்து 90 டிகிரியாக உயரும்).

மேலும், அதன் தரைப்பகுதி சுவடு மிக மெதுவாக நகரும் போது, செயற்கைக்கோளானது தூர வடக்கு அட்சரேகையில் நீண்ட நேரம் செலவிடும் வகையில் மோல்னியா சுற்றுவட்டப் பாதையின் வடிவம் உள்ளது. இதன் காலம் ஒன்றரை நாட்கள், எனவே இலக்கு பகுதியில் செயற்கைக்கோளானது எட்டு மணி நேரத்துக்கு ஒவ்வொரு வினாடி சுழற்சியுடன் தங்கியிருந்து செயல்படும். இந்த முறையில் மூன்று மோல்னியா செயற்கைக்கோள்களைக் கொண்ட (இவற்றுடன் சுற்றுவட்டப் பாதைக்குள்ளான பாகங்கள்)ஒரு நட்சத்திரக் கூட்டமானது, தடையில்லாத தகவல் சேகரிப்பில் ஈடுபடும்.

மோல்னியா செயற்கைக்கோள்கள் ரஷ்யாவ்வில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்காக பயன்படுகின்றன. மற்றொரு பயன்பாடானது, அவற்றை நகர்தன்மை கொண்ட வானொலி அமைப்புகளுக்காக (குறைவான அட்சரேகையில் இருந்தால் கூட) பயன்படுத்துகின்றன, கார்கள் நகர்ப்புறங்களில் பயணிக்கும் போது, நல்ல இணைப்புத்தன்மைக்காக உயர் ஏற்றத்துடனான செயற்கைக்கோள்களை அணுக வேண்டியிருக்கும், எடுத்துக்காட்டு, மிக உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும் போது.

பயன்பாடுகள்[தொகு]

தொலைபேசி[தொகு]

ஒரு இரிடியம் செயற்கைக்கோள்

தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களுக்கான முதல் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாடானது, கண்டங்களுக்கிடையிலான தொலை தூர தொலைபேசியில் செயல்பட்டது. நிலையான பொது இடமாற்றக்கூடிய தொலைபேசி நெட்வொர்க் ஆனது, தொலைபேசி அழைப்புகளை சாதாரண இணைப்பு தொலைபேசிகளிலிருந்து, புவி நிலையத்துக்கு இயக்குகிறது, அங்கிருந்து அவை இணைச் சுற்று செயற்கைக்கோளுக்கு கடத்தப்படுகின்றன. டவுன்லிங்க்கானது, செயலொத்த பாதையைப் பின்பற்றுகிறது. கடல்வழி தகவல்தொடர்பு கம்பிகளில் ஏற்பட்ட மேம்பாடுகள், கம்பி-இழைகள் பயன்பாட்டின் வழியாக மேற்கொள்ளப்பட்டதால், 20ம் நூற்றாண்டின் இறுதியில் நிலையான தொலைபேசிக்கான செயற்கைக்கோள்களின் பயன்பாட்டில் சில நிராகரிப்புகள் இருந்தன, ஆயினும் கடல்வழி கம்பிகள் இல்லாத அசென்ஷன் தீவு, செயின்ட் ஹெலெனா, டீகோ கார்சியா மற்றும் ஈஸ்டர் தீவு போன்ற தீவுகளில் கூட அவை சேவை செய்தன. சில கண்டங்கள் மற்றும் நாடுகளிலும் கூட, சாதாரண இணைப்பு தொலைத்தொடர்புகள் அரிதாக உள்ளன, எடுத்துக்காட்டாக மிகப்பெரிய பகுதிகளான தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, கனடா, சீனா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா. செயற்கைக்கோள் தகவல்தொடர்புகள், அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் கூட இணைப்பைத் தருகின்றன.

செயற்கைக்கோள் தொலைபேசிகள், இணைச் சுற்று அல்லது குறைந்த புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக்கோள்களைக் கொண்ட நட்சத்திரக்கூட்டத்துடன் நேரடியாக இணைக்கப்படும். தொலைபேசி அழைப்புகள் யாவும் செயற்கைக்கோளின் தொலைத்தொடர்பு முனையத்துடன் பகிரப்படும், அதன் பின் பொது பகிரப்பட்ட தொலைபேசி நெட்வொர்க் உடன் அல்லது மற்றொரு செயற்கைக்கோள் தொலைபேசி அமைப்புடன் இணைக்கப்படும்.

செயற்கைக்கோள் தொலைக்காட்சி[தொகு]

தொலைக்காட்சி இப்போது முக்கிய சந்தையாகிவிட்டது, ஒரே நேரத்தில் தொடர்புடைய சில சிக்னல்களின் பெரிய அலைக்கற்றையை பல அலைவாங்கிகளுக்கு வழங்கக் கோருகிறது. இது இணைநிலைச் சுற்று செயற்கைக்கோள்களுக்கான நுட்பமான பொருத்தமாகும். இரண்டு செயற்கைக்கோள் வகைகள் வட அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவை: நேரடி ஒலிபரப்பு செயற்கைக்கோள் (DBS) மற்றும் நிலையான சேவை செயற்கைக்கோள் (FSS)

வட அமெரிக்காவுக்கு வெளியே, குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள FSS மற்றும் DBS செயற்கைக்கோள்களின் பொருள் விளக்கங்கள் சற்று தெளிவற்றவையாக உள்ளன. ஐரோப்பாவில் நேரடி வீட்டு ஒளிபரப்பு தொலைக்காட்சிக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான செயற்கைக்கோள்கள், வட அமெரிக்காவின் DBS-தரத்தினாலான செயற்கைக்கோள்களைப் போலவே உயர் மின் வெளியீட்டைக் கொண்டுள்ளன, FSS-தரத்தினாலான செயற்கைக்கோள்களைப் போலவே குறைந்த முனைவாக்கத்தைக் கொண்டுள்ளன. ஐரோப்பா கண்டத்துக்கு மேலே சுற்றுவட்டப் பாதையிலுள்ள அஸ்ட்ரா, யூட்டல்சாட் மற்றும் ஹாட்பேர்டு விண்ஓடம் ஆகியவை இவற்றுக்கு எடுத்துக்காட்டு. இதன் காரணமாக, FSS மற்றும் DBS ஆகிய சொற்கள் வட அமெரிக்காவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் ஐரோப்பாவில் இந்த நிலை இல்லை.

நிலையான சேவை செயற்கைக்கோள்கள்[தொகு]

நிலையான சேவை செயற்கைக்கோள்கள் , C கற்றையும், Ku கற்றைகளின் தாழ்வான நிலைகளையும் பயன்படுத்துகின்றன. அவை பொதுவாக, தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் மற்றும் உள்ளூர் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களுக்கு மற்றும் நிலையங்களிலிருந்து (அதாவது நெட்வொர்க் மற்றும் ஒத்திசைக்கப்பட்ட நிரலாக்கத்துக்காக, லைவ் ஷாட்கள் மற்றும் பேக்ஹால்கள் ஆகியவற்றுக்காக நிரல் உள்ளீடுகளாக) ஒளிபரப்பு உள்ளீடுகளைப் பெற பயன்படுத்தப்படுகின்றன, அத்துடன் பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களால் நடத்தப்படும் தொலைதூரக் கல்வி, வர்த்தக தொலைக்காட்சி (BTV), வீடியோ கருத்தரங்கு மற்றும் பொதுவான வர்த்தக தொலைத்தொடர்புகள். FSS செயற்கைக்கோள்கள், தேசிய கேபிள் அலைவரிசைகளை கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகங்களுக்கு வினியோகிக்கும் சேவையும் செய்கின்றன.

ஃப்ரீ-டு-ஏர் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களும், Ku அலைவரிசையில் உள்ள பிசஸ் செயற்கைக்கோள்களில் வினியோகிக்கப்படும். இன்டெல் சாட் அமெரிக்காஸ் 5, கேலக்ஸி 10ஆர் மற்றும் ஏஎம்சி 3 ஆகிய வட அமெரிக்காவின் மீதுள்ள செயற்கைக்கோள்கள், தங்களது Ku அலைவரிசையினாலான அலைவாங்கிகளில் அதிகளவிலான பட சேனல்களை வழங்குகின்றன.

தி அமெரிக்கன் டிஷ் நெட்வொர்க் டிபிஎஸ் சர்வீஸ், சூப்பர்டிஷ் ஆண்டெனா தேவைப்படும் தங்களது நிகழ்ச்சி தொகுப்புகளுக்காக சமீபத்தில் பிசஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. இதற்கு காரணம்,FCCயின் "கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய" விதிமுறைகளின் படி உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்களைக் கையாள்வதற்கும், HDTV சேனல்களைக் கையாள்வதற்கு அதிக அலைக்கற்றை தேவைப்படுவதும் தான் இதற்கு காரணம்.

நேரடி ஒளிபரப்பு செயற்கோள்[தொகு]

நேரடி ஒளிபரப்பு செயற்கைக்கோள் என்பது, DBS செயற்கைக்கோள் தட்டுக்களுக்கு (பொதுவாக 18 முதல் 24 அங்குலங்கள் அல்லது 45 முதல் 60 செமீ சுற்றளவு வரை இருக்கும்)தகவல்களைக் கடத்தக் கூடிய சிறிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளாகும். நேரடி ஒளிபரப்பு செயற்கைக்கோள்கள் பொதுவாக நுண்ணலை Ku கற்றையின் மேல் பாகத்தில் இயங்கும். DBS தொழில்நுட்பமானது,டிடிஎச் சார்ந்த (டைரெக்ட்-டு-ஹோம்) செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவைகளுக்கு பயன்படுகிறது, அவற்றுள் சில, டைரக்டிவி மற்றும் டிஷ்நெட்வொர்க் போன்ற அமெரிக்காவில் உள்ள சேவைகள், பெல் டிவி மற்றும் ஷா டைரக்ட் போன்ற கனடா நாட்டு சேவைகள், ப்ரீசாட் என்ற பிரிட்டன் நாட்டு சேவை மற்றும் ஸ்கை டிஜிட்டல் என்ற என்ற பிரிட்டன், அயர்லாந்து குடியரசு மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் சேவை.

DBS சேவையை விட குறைந்த அலைவரிசை மற்றும் குறைந்த மின்திறனில் இயங்குவதால், FSS செயற்கைக்கோள்களுக்கு மிகப் பெரிய வட்டு தேவைப்படுகிறது ( Ku அலைக்கற்றைக்கு 3 முதல் 8 அடி வரை (1 முதல் 2.5m) சுற்றளவு, C அலைக்கற்றைக்கு 12 அடி (3.6m) அல்லது அதற்கும் அதிகமாக). ஒவ்வொரு அலைவாக்கிகளின் RF உள்ளீடு மற்று, வெளியீடுகளுக்கு குறைந்த முனைவாக்கத்தை அவை பயன்படுத்துகின்றன (சுழற்சி முனைவாக்கத்தை பயன்படுத்தும் DBS செயற்கைக்கோள்களுக்கு எதிராக). ஆனால் இது மிகச்சிறிய வேறுபாடு என்பதால் பயனாளர்கள் கவனிப்பதில்லை. FSS செயற்கைகோள் தொழில்நுட்பமும், 1970ம் ஆண்டுகளின் இறுதியிலிருந்து, 1990ம் ஆண்டுகளின் துவக்கம் வரை, அமெரிக்காவில் TVRO (தொலைக்காட்சி பெறுதல் மட்டும்) அலைவாங்கிகள் மற்றும் வட்டுகளின் வடிவில், டிடிஎச் செயற்கைக்கோள் தொலைக்காட்சிக்கு பயன்பட்டது. அது தனது Ku அலைக்கற்றை வடிவத்தை தற்போது பயன்பாட்டில் இல்லாத பிரைம்ஸ்டார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவைக்காக பயன்படுத்தியது.

தகவல்தொடர்புகளுக்கான செயற்கைக்கோள்கள் தற்போது[எப்போது?] Ka அலைக்கற்றையில் அலைவாங்கிகள் இருக்கும் விதமாக செலுத்தப்படுகிறது, இதற்கு உதாரணம், டைரக்டிவியின் ஸ்பேஸ்வே-1 செயற்கைக்கோள் மற்றும் அணிக் F2 ஆகியவை. நாசாவும், Ka அலைக்கற்றையைப் பயன்படுத்தி சோதனை செயற்கைக்கோள்களை செலுத்தியிருக்கிறது.

மொபைல் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள்[தொகு]

துவக்கத்தில் தொலைக்காட்சி அலைவாங்கிகளுக்கு ஒளிபரப்புவதற்காகத் தான் முதலில் பயன்பட்டது, 2004ம் ஆண்டு பிரபலமான மொபைல் நேரடி ஒளிபரப்பு பயன்பாடுகள், அமெரிக்காவிலுள்ள பின்வரும் இரண்டு செயற்கைக்கோள் வானொலி அமைப்புகளின் வரவுடன் காட்சியளித்தன: சிரியஸ் மற்றும் எக்ஸ்எம் செயற்கைக்கோள் வானொலி பிடிப்பான்கள். சில உற்பத்தியாளர்கள், DBS தொலைக்காட்சியின் மொபைல் பெறுதலுக்கான சிறப்பு ஆண்டெனாக்களை அறிமுகம் செய்தனர். ஒரு பரிந்துரையாக GPS தொழில்நுட்பத்தை எடுத்துக் கொள்வதால், இந்த ஆண்டெனாக்கள் தானாகவே செயற்கைக்கோளை மீண்டும் குறிவைக்கும், வாகனம் (ஆண்டெனா பொருத்தப்பட்ட வாகனம்) எந்த இடத்தில் இருந்தாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. இதுபோன்ற மொபைல் செயற்கைக்கோள் ஆண்டெனாக்கள் கேளிக்கை வாகன உரிமையாளர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த மொபைல் DBS ஆண்டெனாக்கள், ஜெட்புளூ ஏர்வேஸ் மூலம் டைரக்டிவிக்காக (வழங்கியது, ஜெட்புளுவின் துணை நிறுவனமான லைவ்டிவி) படன்படுத்தப்பட்டன, இதன் மூலம் பயணிகள் விமானத்தில் இருந்தபடியே இருக்கைகளில் பொருத்தப்பட்ட எல்சிடி திரைகள் வழியாகக் காண முடியும்.

செயற்கைக்கோள் வானொலி[தொகு]

செயற்கைக்கோள் வானொலியானது, அமெரிக்கா உள்பட சில நாடுகளில் ஆடியோ சேவைகளை மேற்கொள்கிறது. மொபைல் சேவைகள் மூலம் நேயர்கள் ஒரு கண்டத்தை சுற்றி வர முடியும், அத்துடன் அதே ஆடியோ நிகழ்ச்சியை எங்கிருந்தும் கேட்க முடியும்.

செயற்கைக்கோள் வானொலி அல்லது உறுப்பினர் கட்டண வானொலி (SR) என்பது டிஜிட்டல் வானொலி சிக்னல், இது தகவல்தொடர்பு செயற்கைக்கோள் மூலம் ஒலிபரப்பப்படுகிறது, இதன் மூலம் நிலம் சார்ந்த வானொலி சிக்னல்களைக் காட்டிலும், அகன்ற புவியியல் எல்லைகளில் சேவை செய்கிறது.

அமெரிக்கா உள்பட பல நாடுகளில் தரைவழி சார்ந்த வானொலி சேவைகளுக்கு சிறந்த மாற்றாக, செயற்கைக்கோள் வானொலி செயல்படுகிறது. சிரியஸ், எக்ஸ்எம் மற்றும் வேர்ல்ட்ஸ்பேஸ் போன்ற மொபைல் சேவைகள், ஒட்டுமொத்த கண்டத்தையும் நேயர்கள் சுற்றிவர அனுமதிப்பதோடு, அவர்கள் எங்கு சென்றாலும் அதே ஆடியோ நிகழ்ச்சிகளைக் கேட்க உதவுகிறது. மியூசிக் சாய்ஸ் அல்லது முசாக்கின் செயற்கைக்கோள் வழங்கிய உள்ளடக்கம் போன்ற பிற சேவைகளுக்கு, நிலையான இருப்பிட அலைவாங்கி மற்றும் ஒரு டிஷ் ஆண்டெனா தேவை. அனைத்து நிலைகளிலும், ஆண்டெனாக்கள் கண்டிப்பாக செயற்கைக்கோள்களுடன் தெளிவான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். உயரமான கட்டிடங்கள், பாலங்கள் அல்லது வாகனங்கள் நிறுத்துமிடங்களில் சிக்னல்கள் தடைபடும் போது, நேயர்களுக்கு சிக்னல் கிடைப்பதற்கு மீட்டுரை கருவிகள் பொருத்திடலாம்.

வானொலி சேவைகள் பொதுவாக வர்த்தக நிறுவனங்களால் வழங்கப்படும், அவை உறுப்பினர் கட்டணம் சார்ந்தவையாகும். பல்வேறு சேவைகள் தனியாருக்குச் சொந்தமான சிக்னல்களாகும். குறிநீக்கம் செய்து இசைப்பதற்காக இவற்றுக்கு சிறப்பு வாய்ந்த வன்பொருள் தேவைப்படும். வழங்குநர்கள் பொதுவாக செய்திகள், வானிலை, விளையாட்டு மற்றும் இசை சேனல்களைக் கொண்டிருப்பார்கள். இவற்றுள் பொதுவாக இசை சேனல்கள் வர்த்தக நோக்கில்லாமல் இருக்கும்.

அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் மிக எளிதாக, குறைந்த செலவில் நிலம்சார்ந்த ஒலிபரப்புகள் மூலம் மக்களைச் சென்றடையலாம். பிரிட்டன் மற்றும் சில நாடுகளில் நவீன வானொலி சேவைகளுக்கான புரட்சியானது, செயற்கைக்கோள் வானொலியைக் காட்டிலும் டிஜிட்டல் ஆடியோ ஒலிபரப்பின் (DAB) மீது அதிக கவனம் செலுத்துகிறது. உள்ளடக்கம் [மறை]

தன்னார்வ வானொலி[தொகு]

தன்னார்வ வானொலி சேவையளிப்பவர்கள், ஆஸ்கார் செயற்கைக்கோள்களை அணுகுகின்றனர், இவை தன்னார்வ வானொலி போக்குவரத்தைக் கொண்டுசெல்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ்போர்ன் மீட்டுரை கருவிகளாக இயங்குகின்றன, அத்துடன் தன்னார்வலர்களால் UHF அல்லது VHF வானொலி சாதனங்கள் மற்றும் உயரிய திசைஇயக்கத்தைக் கொண்ட ஆண்டெனாக்களான யாகிக்கள் அல்லது டிஷ் ஆண்டெனாக்களால் இயக்கப்படுகின்றன. தரை சார்ந்த தன்னார்வச் சாதனத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக, பெரும்பாலான தன்னார்வ செயற்கைக்கோள்கள் யாவும் குறைந்த புவி சுற்றுவட்டப் பாதைகளில் செலுத்தப்படுகின்றன, அத்துடன் கொடுக்கப்பட்ட எந்த நேரத்திலும் குறைந்த அளவிலான தொடர்புகளை மட்டுமே அணுகும் படி வடிவமைக்கப்படுள்ளன. சில செயற்கைக்கோள்கள் AX.25 அல்லது அதை ஒத்த நெறிமுறைகளைப் பயன்படுத்தி சில செயற்கைக்கோள்கள் தரவு பகிரும் சேவைகளையும் வழங்குகின்றன.

செயற்கைக்கோள் இணையம்[தொகு]

1990ம் ஆண்டுக்குப் பிறகு, செயற்கைக்கோள் தகவல்தொடர்பு தொழில்நுட்பமானது, அகலக்கற்றை தரவு இணைப்புகள் வழியாக இணையத்துடன் இணைவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அகலக்கற்றை இணைப்பு கொடுக்க முடியாத அளவுக்கு நெடுந்தொலைவில்லுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயனடைந்தனர்.

ராணுவ பயன்பாடுகள்[தொகு]

தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள், ராணுவ தகவல்தொடர்பு பயன்பாடுகளான உலகளாவிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்காக பயன்படுகின்றன. தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தும் சில ராணுவ அமைப்புகள்,, மில்ஸ்டார், டிஎஸ்சிஎஸ், மற்றும் எஃப்எல்டி சாட்காம், இவை அமெரிக்காவைச் சேர்ந்தவை, நேட்டோ செயற்கைக்கோள்கள், பிரிட்டன் செயற்கைக்கோள்கள் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் செயற்கைக்கோள்கள். பல ராணுவ செயற்கைக்கோள்கள் X-கற்றையில் இயங்குகின்றன, இவற்றுள் சில UHF வானொலி தொடுப்புகளைப் பயன்படுத்துகின்றன. மில்ஸ்டர்Ka கற்றையை கூட பயன்படுத்திக் கொள்கிறது.

வழிசெலுத்தல்[தொகு]

செயற்கைக்கோள்களின் மிகச் சிறந்த பயன்பாடுகளுள் ஒன்று GPS (உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு). வழிசெலுத்தல் இதன் முதன்மை பயன்பாடாகும். இந்த நோக்கத்துக்காகத் தான் ௨௪24 செயற்கைக்கோள்களின் நெட்வொர்க், LEO செயற்கைக்கோள்கள் சரிசமமாக உலகைச் சுற்றி நிலைநிறுத்தப்படுள்ளன. அவை 1.57542 GHz மற்றும் 1.2276 GHz போன்ற குறைந்த நுண்ணலை அலைவரிசைகளை ஒளிபரப்புக்காக பயன்படுத்துகின்றன. பூமியில் உள்ள அலைவாங்கிகள், ஒரே நேரத்தில் நான்கு செயற்கைக்கோள்களில் இருந்து ஒளிபரப்புகளை எடுத்துக் கொள்கின்றன. அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை என்ற அடிப்படையில் கணிப்பதற்கும் துல்லியமான நிலையில் காண்பிப்பதற்கும், அலைவாங்கியானது நுண்செயலிகளைப் பயன்படுத்துகிறது.

இதையும் காணுங்கள்.[தொகு]

பரிந்துரைகள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]