கீழணை

ஆள்கூறுகள்: 11°8′20″N 79°27′6″E / 11.13889°N 79.45167°E / 11.13889; 79.45167 (Lower Anaicut)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ் அணைக்கட்டில் மீன்பிடிப்பு

கீழணை (கீழ் அணைக்கட்டு, அணைக்கரை), தமிழ்நாட்டின் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஒரு அணைபாலம் ஆகும்.

இந்த அணை 1902-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆங்கிலேய அரசால் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திற்காகக் கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தில் கங்கைகொண்டசோழபுரத்தின் இடிபாடுகளில் இருந்த கற்கள் பயன்படுத்தப்பட்டன. மேலணையிலிருந்து 70 மைல் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 கி. மீ. தொலைவிலும் இந்த அணை அமைந்துள்ளது.[1][2][3] இதன் மதகுகள் கொள்ளிடம் ஆற்று நீரை பல்வேறு நீர்வழிகளில் பிரித்து விடுகின்றன.[4] இவ்வணையிலிருந்து கொள்ளிடம் மண்ணியாறு மற்றும் உப்பணாறாகப் பிரிகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. W. Francis. Gazetteer of South India. பக். 156. http://books.google.com/books?id=vERnljM1uiEC&pg=PA156. 
  2. J. W. Bond, Arnold Wright (1914). Southern India: its history, people, commerce, and industrial resources. பக். 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120613447. http://books.google.com/books?id=8WNEcgMr11kC&pg=PA288. 
  3. R. Nagaswamy. Gangaikondacholapuram. 1970: State Dept. of Archaeology, Govt of Tamil Nadu. பக். 17. http://books.google.com/books?id=FtQBAAAAMAAJ&q=lower+anaicut&dq=lower+anaicut&hl=en&ei=jz_TTuzHEsH4rQeNkcT0DA&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CEwQ6AEwBQ. 
  4. "Renovation at Anaikarai bridge". தி இந்து. 23 June 2011 இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110810033441/http://www.hindu.com/2011/06/23/stories/2011062356360600.htm. பார்த்த நாள்: 28 November 2011. 
  5. "Agriculture". Thanjavur district website. பார்க்கப்பட்ட நாள் 28 November 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழணை&oldid=3761201" இலிருந்து மீள்விக்கப்பட்டது