ஆட்மிரால்ட்டி தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பப்புவா நியூ கினியின் வரைபடம். ஆட்மிரால்ட்டி தீவுகள் கடும் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.
ஆட்மிரால்ட்டி தீவுகளின் மிகப் பெரும் தீவு மானுஸ் தீவு

ஆட்மிரால்ட்டி தீவுகள் (Admiralty Islands) என்பன பப்புவா நியூ கினியில் மானுஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிஸ்மார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள 18 தீவுகளைக் குறிக்கும். இது மானுஸ் தீவுகள் (Manus Islands) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் மொத்த பரப்பளவு 2100 சதுர கிலோமீட்டர்கள் (810 சதுர மைல் ஆகும்).

இக்கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகள் மானுசுத் தீவு (Manus Island), லாஸ் நேகிரோஸ் தீவு (Los Negros Island), டொங் தீவு ஆகியனவாகும்.

வரலாறு[தொகு]

இத்தீவுகளில் முதன் முதலாக கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்காசியாவில் இருந்து மனிதர் குடியேறியதாக நம்பப்படுகிறது[1].

1616 இல் டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஷவுட்டன் என்பவர் இத்தீவைக் கண்டறிந்தார். 1884 முதல் 1914 வரை ஜெர்மனியர்களின் கட்டுப்ப்பாட்டில் இருந்தது. நவம்பர் 1914 இல் ஆஸ்திரேலியக் கடற்படையினர் இங்கு வந்திறங்கினர். ஜெர்மனியர்களுடன் இடம்பெற்ற சிறு போரின் பின்னர் இது ஆஸ்திரேலியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது[2].

ஏப்ரல் 7, 1942 இல் ஜப்பானியர்கள் வந்திறங்கித் தீவுகளைக் கைப்பற்றினர். 1944 இல் இரண்டாம் உலகப் போரின் கூட்டுப் படைகளினால் தாக்கப்பட்டது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Spriggs, Matthew (1997), "Recent History (The Holocene)", in Denoon, Donald (ed.), The Cambridge History of the Pacific Islanders, Cambridge: Cambridge University Press, pp. 52–69
  2. Mackenzie, S.S. (1927). "Volume X – The Australians at Rabaul: The Capture and Administration of the German Possessions in the Southern Pacific". Australia in the War of 1914-1918 (in English). கான்பரா: Australian War Memorial. pp. pp. 2, 178, 345–366. ISBN 0-7022-1856-1. Archived from the original on 2012-03-02. பார்க்கப்பட்ட நாள் 2008-02-28. {{cite web}}: |pages= has extra text (help)CS1 maint: unrecognized language (link)
  3. Frierson, Major William C. (1946). "The Admiralties: Operations of the 1st Cavalry Division, 29 February - 18 May 1944". American Forces in Action. வாசிங்டன், டி. சி.: U.S. Government Printing Office.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்மிரால்ட்டி_தீவுகள்&oldid=3542471" இலிருந்து மீள்விக்கப்பட்டது