தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல் (Viral hemorrhagic fever) என்பது பொதுவாக தீநுண்மங்களால் ஏற்படும், குருதிப் போக்கை உண்டாக்கக்கூடிய நோயாகும். இது ஆர்.என்.ஏ கொண்டுள்ள நால்வகை தீநுண்மக் குடும்பங்களால் ஏற்படுகின்றது: சிறுமணித் தீநுண்மம் (Arenaviridae), இழைத் தீநுண்மம் (Filoviridae), புனியாத் தீநுண்மம் (Bunyaviridae), மஞ்சட் தீநுண்மம் (Flaviviridae). அனைத்து தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சலிலும் கடும் காய்ச்சல், குருதிப்போக்கு, அதிர்ச்சி போன்ற விளைவுகளும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறப்பும் ஏற்படும். சில தீநுண்மங்களால் சிறியளவு பாதிப்பு ஏற்பட்டாலும் வேறு சில தீநுண்மங்களால் உயிராபத்து ஏற்படக்கூடிய விளைவுகள் உண்டாகும்.