பொறியியல் வரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீயணைப்பு அமைப்புக்கான சான்றளிப்புப் பட்டியலின் தொழில்நுட்ப வரைபடம்

பொறியியல் வரைபடம் என்பது தொழிற்நுட்ப வரைபடத்தின் ஒருவகையாகும். 'பொறியியற் பொருட்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்பதனை முழுமையாகவும், தெளிவாகவும் வரையறுக்க 'பொறியியல் வரைபடம்' உருவாக்கப்படுகின்றது.

பொறியியல் துறையில் 'வரைபடம்' என்பது ஒரு மொழியாக கருதப்படுகிறது. ஒரு பொறியாளரின் எண்ணங்களையும், அவர் தெரிவிக்க விரும்பும் தகவல்களையும் இன்னொருவருக்கு பரிமாற்றம் செய்வதே இந்த வரைவியல் மொழியின் (graphical representation) நோக்கமாகும். சுருங்கக்கூறின் - பொறியாளர் ஒருவரால் வடிமைக்கப்பட்ட ஒரு பொருளை இன்னொருவர் மெய்யில் உருவாக்கத் தேவையான தகவல்கள், 'பொறியியல் வரைபடத்தால்' தரப்படுகிறது.

மீள் பார்வை[தொகு]

பொறியியல் வரைபடங்கள் பொதுவாக திட்டப்படம், பெயர்முறை, பொருள் விளக்கம், தோற்றம் (அச்சு முகங்கள் மற்றும் வரி வடிவங்கள் போன்றவை), அளவு மற்றும் பலவற்றுக்கான தரப்படுத்தப்பட்ட ஒழுங்கு முறையுடன் கூடிய இணக்கத்துடன் உருவாக்கப்படுகின்றன. அது போன்ற தரப்ப்படுத்தப்பட்ட ஒழுங்கு முறையில் ஒன்று GD&T என அழைக்கப்படுகிறது.

இது போன்ற வரைபடத்தின் நோக்கம் ஒரு பொருள் அல்லது பாகத்தின் அனைத்து வடிவியல் சிறப்புக் கூறுகளையும் துல்லியமாகவும் விளக்கமாகவும் வரைதல் ஆகும். பொறியியல் வரைபடத்தின் இறுதி நோக்கம் ஒரு உற்பத்தியாளர் குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தெரிவிப்பது ஆகும்.

பொறியியல் வரைபடங்கள் பொதுவாக பென்சில்கள், மை, நேர்விளிம்புகள், டி-ஸ்கொயர்கள், ஃபிரஞ்சு கர்வ்கள், முக்கோணங்கள், அளவு கோல்கள், ஒப்பளவுகள் மற்றும் அழிப்பான்கள் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி கையால் வரைந்து உருவாக்கப்பட்டன. தற்போது அவை பொதுவாக கம்ப்யூட்டர்-எய்டட் டிசைன் (CAD) உதவியுடன் மின்னணுவியல் ரீதியாக வரையப்படுகின்றன.

இந்த வரைபடங்கள் தற்போதும் பொதுவாக "ப்ளூபிரிண்ட்கள்" அல்லது "ப்ளூலைன்கள்" என்று அழைக்கப்படுகின்றன. எனினும் சொல் சார்ந்த கண்ணோட்டத்தில் இந்த வார்த்தைகள் காலவரிசையில் தவறான பயன்பாடாக இருக்கின்றன. முன்னர் பொறியியல் வரைபடங்களின் பெரும்பலான நகல்கள் நீல நிறத்தாள் அல்லது மாறாக வெள்ளைத்தாளில் நீல வரிகளில் வரையப்படும் எழுத்து வரைகலை இரசாயன அச்சுச் செயல்பாடாக இருந்தது. இவை நவீன மறு உருவாக்கச் செயல்பாட்டில் வெள்ளைத் தாளில் கருப்பு அல்லது பல நிற வரிகளாக மாற்றம் கண்டது. மிகவும் பொதுவான வார்த்தையான "அச்சு" என்பது பொறியியல் வரைபடத்தின் காகித நகல் பயன்பாட்டிற்கு தற்போது மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

பொறியியல் வரைபடங்களை உருவாக்கும் செயல்பாடு மற்றும் அதனை உருவாக்கும் திறன் பொதுவாக தொழில்நுட்ப வரைபடம் அல்லது டிராஃப்ட்டிங் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தொழில்நுட்ப வரைபடங்கள் வழக்கமாக பொறியியலின் பகுதியாகக் கருதப்படாத பிற துறைகளுக்கும் தேவையானதாக இருக்கின்றன.

பொறியியல் வரைபடங்கள்: பொதுவான சிறப்புக்கூறுகள்[தொகு]

வரைபடங்கள் பின்வரும் சிக்கலான தகவல்களை வெளிப்படுத்துகின்றன:

  • வடிவவியல் – பொருளின் வடிவம்; பார்வைகளாகக் குறிப்பிடப்படுகிறது; அதாவது பொருளானது முன்புறம், உச்சி, பக்கம் மற்றும் பல கோணங்களில் இருந்து எவ்வாறு தோற்றமளிக்கிறது என்று பார்க்க உதவுகிறது.
  • பரிமாணங்கள் – பொருளின் அளவானது ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகளில் வரையப்படுகிறது.
  • பொறுத்தல்கள் – ஒவ்வொரு பரிமாணத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாறுபாடுகள்.
  • பொருள் – எந்த பொருளில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.
  • ஃபினிஷ் – நடைமுறை சார்ந்த அல்லது அழகுபடுத்துதல் சார்ந்து பொருளின் புறப்பரப்பின் தரத்தினைக் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக அதிகளவில் சந்தைப்படுத்தப்படும் பொருட்களுக்கு பொதுவாக மிகவும் அதிகமான புறப்பரப்புத் தரம் தேவையாக இருக்கிறது. பின்னர் அதன் பிறகு அந்த பாகம் தொழில்நிறுவன உட்புற இயந்திரத்தினுள் பயன்படுத்தப்படுகிறது.

வரி வடிவங்களும் வகைகளும்[தொகு]

வழக்கமான பொறியியல் வரைபடத்தின் வரி வகைகள்

வரி வடிவங்களில் பல்வேறு வகைகள் பெளதீக பொருட்களை வரைபட ரீதியாகக் குறிப்பிடுகின்றன. வரிகளின் வகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கி இருக்கின்றன:

  • விசிபிள் – இவை குறிப்பிட்ட கோணத்தில் இருந்து முனைகளை நேரடியாகப் பார்க்கக் கூடிய வகையில் சித்தரிக்கப்படுவதற்குப் பயன்படுத்தப்படும் தொடர் வரிகள் ஆகும்.
  • ஹிட்டன் – இவை நேரடியாக பார்க்க முடியாத முனைகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் குறிகிய கோடிட்ட வரிகள் ஆகும்.
  • சென்டர் – இவை சுழற்சியான தனிக்கூறுகளின் அச்சுக்களைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நீண்டு மற்றும் குறுகி என மாறி மாறி இருக்கும் கோடிட்ட வரிகளாக இருக்கின்றன.
  • கட்டிங் பிளேன் – இவை பகுதிப் பார்வைகளுக்கான பகுதிகளை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படும் மெல்லிய மிதமான கோடிட்ட வரிகள் அல்லது தடித்த மாறி மாறி பெரிய மற்றும் இரட்டைக் குறுகிய கோடிட்ட வரிகளாக இருக்கும்.
  • செக்சன் – இவை உருப்படிமத்தின் மெல்லிய வரிகளாக இருக்கின்றன (உருப்படிமங்கள் பொருளை "வெட்டுவது" அல்லது "பிரிப்பதன்" மூலமாக நிர்ணயிக்கப்படுகின்றன). "வெட்டுதலின்" விளைவுகளைப் பகுதிப் பார்வைகளின் புறப்பரப்பைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பகுதி வரிகள் பொதுவாக "கிராஸ்-ஹேட்சிங்" எனக் குறிப்பிடப்படுகின்றன.

வரிகளானது ஒவ்வொரு வரிக்கும் எழுத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இடங்களில் எழுத்து வகையாக்கம் மூலமாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

  • வகை A வரிகள் பொருளின் தனிக்கூறின் முக்கிய அம்சங்களைக் காட்டுகிறது. இவை வரைபடத்தில் மிகவும் அடர்த்தியான வரிகளாக இருக்கின்றன. இவை HB ஐக் காட்டிலும் மென்மையான பென்சிலினால் வரையப்படுகின்றன.
  • வகை B வரிகள் பரிமாண வரிகளாக இருக்கின்றன. இவை பரிமாணம், வெளிப்படுத்துதல், விரிவாக்கம் அல்லது லீடர்கள் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு 2H போன்ற கடினமான பென்சில் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • வகை C வரிகள் முழுப் பொருளும் காண்பிக்கப்படாமல் இருக்கும் போது இடைவெளிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை சிறிய இடைவெளிகளுக்காக மட்டுமே வரையப்படும் அளவுகோலற்ற வரைபடங்கள் ஆகும். 2H பென்சில்
  • வகை D வரிகள் வகை C ஐப் போன்றதே ஆகும். ஆனால் இவை நெளிவரி உடையவை மற்றும் இவை நீண்ட இடைவெளிகளுக்கு மட்டுமே ஆனவை ஆகும். 2H பென்சில்
  • வகை E வரிகள் பொருளின் உட்புற தனிக்கூறின் மறைக்கப்பட்ட முக்கிய அம்சங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றன. இவை புள்ளிகளுடன் கூடிய வரிகளாக இருக்கின்றன. 2H பென்சில்
  • வகை F வரிகள் வகை F[டைபோ] வரிகளாக இருக்கின்றன. இவை மின் தொழில்நுட்பத்தில் வரையவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. 2H பென்சில்
  • வகை G வரிகள் மைய வரிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை புள்ளியிட்ட வரிகள் ஆகும். ஆனால் இவை 10–20 மிமீ கொண்ட நீண்ட வரி பின்னர் இடைவெளி பின்னர் 2மிமீட்டரில் சிறிய வரி என்ற விதத்தில் இருக்கும். 2H பென்சில்
  • வகை H வரிகள் வகை G ஐப் போன்றதே ஆகும். ஆனால் இவற்றில் ஒவ்வொரு இரண்டாவது நீண்ட வரியும் அடர்த்தியாக இருக்கும். இவை பொருளின் வெட்டுத் தளத்தைக் குறிப்பிடுகின்றன. 2H பென்சில்
  • வகை K வரிகள் ஒரு பொருளின் மாற்று நிலையையும் அந்த பொருளினால் எடுக்கப்பட்ட வரியையும் குறிப்பிடுவன ஆகும். இவை 10–20 மிமீட்டரில் நீண்ட வரி பின்னர் சிறிய இடைவெளி பின்னர் 2மிமீட்டரில் சிறிய வரி பின்னர் இடைவெளி பின்னர் மற்றொரு சிறிய வரி என்ற விதத்தில் வரையப்படுகின்றன. 2H பென்சில்.

பலபக்கத் தோற்றங்களும் வெளிப்பாடுகளும்[தொகு]

முதல் கோணத் தோற்றத்தில் பாகம் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு உருவப்படம்
தோற்றம் மூன்றாம் கோண (வலது) வகையைச் சார்ந்ததா அல்லது முதல் கோண (இடது) வகையைச் சார்ந்ததா என்பதைக் குறிப்பிடுவதற்கான குறியீடுகள்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொறியியல் வரைபடத்தின் சம அளவுத் தோற்றத்தைக் காட்டும் வரைபடம்.

பெரும்பாலான நிகழ்வுகளில் அனைத்து தேவையான சிறப்புக் கூறுகளையும் காட்டுவதற்கு ஒருபக்கத் தோற்றம் போதுமானதாக இல்லை. அதனால் பல்வேறு தோற்றங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தோற்றங்களின் வகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கி இருக்கின்றன:

வரித்தோற்றம்[தொகு]

வரித்தோற்றம் என்பது ஒரு பொருளை முன்புறம், வலது, இடது, மேல், கீழ் அல்லது பின்புறம் ஆகிய தோற்றங்களில் காண்பிக்கக் கூடியது ஆகும். மேலும் இவை பொதுவாக ஒவ்வொன்றும் முதல்-கோணமாகவோ அல்லது மூன்றாவது-கோணத் தோற்றமாகவோ உள்ள விதிகள் தொடர்புடைய அமைப்பைக் கொண்டிருக்கின்றன.

  • முதல் கோணத் தோற்றம் ISO தரநிலையாக இருக்கிறது. மேலும் அது முதன்மையாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்படுகிறது. 3D பொருள் 2D "தாள்" வெளியில் காட்டப்படுகிறது. நாம் அப்பொருளை எக்ஸ்-கதிர்களால் பார்த்தால் முன்புறத் தோற்றத்துக்கு கீழ் மேற்புறத் தோற்றம் இருக்கும். வலது பக்கத் தோற்றம் முன்புறத் தோற்றத்தின் இடது புறத்தில் இருக்கும்.
  • மூன்றாம் கோணத் தோற்றம் அமெரிக்கா மற்றும் கனடாவில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. அங்கு இது BS 8888:2006 இன் படி இயல்பிருப்பு தோற்ற அமைப்பாக இருக்கிறது. இதில் இடது பக்கத் தோற்றம் இடது புறத்திலும் மேற்புறத் தோற்றம் மேற்புறத்திலும் இருக்கும்.

இந்த அனைத்து தோற்றங்களும் கட்டாயமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் பயன்படுத்தப்படும் தோற்ற வெளிப்பாடு சார்ந்து நிர்ணயம் செய்யப்படும் புறப்பரப்புக்கான முன்புற, பின்புற, மேல் மற்றும் கீழ்ப்புறத் தோற்றங்கள் மாறுபடுகின்றன.

துணைத்தோற்றம்[தொகு]

துணைத்தோற்றம் என்பது ஆறு அடிப்படைத் தோற்றங்கள் அல்லாமல் வேறு ஏதேனும் ஒரு தோற்றத்தை ஒரு தளத்தில் வெளிப்படுத்தக் கூடிய வரித்தோற்றம் ஆகும்.[1] இந்தத் தோற்றமானது பொதுவாக சில இடங்களில் சாய்தளத்தைக் கொண்டிருக்கும் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. துணைத்தோற்றத்தைப் பயன்படுத்தி அந்த சாய்தளத்தை (மற்றும் குறிப்பிடத்தக்க தனிக்கூறுகளை) அவற்றின் உண்மையான அளவு மற்றும் வடிவத்தில் வெளிப்படுத்தலாம். பொறியியல் வரைபடத்தின் ஏதேனும் ஒரு தனிக்கூறின் உண்மையான அளவு மற்றும் வடிவம் ஆகியவற்றை லைன் ஆஃப் சைட் (LOS) ஆனது குறிப்பிடப்படும் தளத்துக்கு செங்குத்தாக இருக்கும்போது மட்டுமே அறிய முடியும்.

சம அளவு வீழல்[தொகு]

சம அளவு வீழல் என்பது சமமாக இருக்கும் பொருட்களின் ஒவ்வொரு அச்சுக்களுக்கும் இடையிலான அளவீடுகளின் கோணங்களில் இருந்து பொருட்களைக் காண்பிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சம அளவு வீழல் என்பது வரித்தோற்றத்தில் இருந்து ஆரம்பிப்பதுடன் தோராயமாக ± 35.264° [= ஆர்க்சைன்(டேன்(30°))] கிடைமட்ட அச்சின் சுழற்சியைத் தொடர்ந்து ± 45° செங்குத்து அச்சு கொண்ட பொருளின் சுழற்சியை ஒத்திருக்கிறது. "சம அளவு" என்ற வார்த்தை "இதே அளவீட்டுக்கான" கிரேக்க வார்த்தையில் இருந்து வருகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று அந்த வரைபடத்தை சம அளவு வரைபடமாக உருவாக்கும். இதில் ஈர்க்கக் கூடிய ஒன்று 60 டிகிரி கோணத்தை திசைகாட்டி மற்றும் நேர்விளிம்பு ஆகியவற்றுடன் மட்டுமே உருவாக்க முடியும்.

சம அளவு வீழல் என்பது நடு அச்சு வீழல்களின் வகை ஆகும். நடு அச்சு வீழல்களின் மற்ற இரண்டு வகைகள் பின்வருமாறு:

சாய் வீழ்வு[தொகு]

ஒரு சாய் வீழ்வு என்பது முப்பரிமாணப் பொருட்களின் படம் சார்ந்த இரு பரிமாண உருவப்படங்கள் உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் எளிய வகை வரைபடத் தோற்றமாக இருக்கிறது:

  • இது உருவப்படங்களை குறுக்கிடும் இணை கதிர்கள் (ஒளிப்படக் காட்டிகள்) மூலமாக வெளிப்படுத்துகிறது
  • வரைபடப் புறப்பரப்புடன் முப்பரிமாண மூலப் பொருளில் இருந்து (தோற்றத் திட்டம்).

சாய்வீழ்வு மற்றும் வரித்தோற்றம் ஆகிய இரண்டிலும் மூலப் பொருளின் இணை வரிகள் வெளிப்படுத்தப்படும் உருவப்படத்தின் இணை வரிகளை உருவாக்குகின்றன.

இயலுறுத் தோற்றம்[தொகு]

இயலுறுத் தோற்றம் என்பது கண்களால் பார்க்கக் கூடிய உருவப்படமாக சமதளப் புறப்பரப்பின் மீது தோராயமாக வரையப்பட்டதாக இருக்கிறது. இயலுறுத் தோற்றத்தில் படங்களை வரைவதற்கான இரண்டு முக்கிய பண்பருக்கள் பின்வருமாறு:

  • படங்கள் சிறியதாக இருந்தால் அவற்றின் நோக்குபவரிடம் இருந்து தொலைவு அதிகரிக்கும்
  • ஃபோர்ஷார்டென்ட்: லைன் ஆஃப் சைட்டின் நெடுகில் உள்ள பொருளின் பரிமாணத்தின் அளவு லைன் ஆஃப் சைட்டின் குறுக்கே உள்ள பரிமாணத்தின் அளவைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும்.

அளவு[தொகு]

திட்டங்கள் பொதுவாக "அளவு வரைபடங்கள்" ஆக இருக்கின்றன. அதாவது திட்டங்கள் இடம் அல்லது பொருளின் உண்மையான அளவுக்குத் தொடர்புடைய குறிப்பிட்ட விகிதத்தில் வரையப்படுகின்றன. ஒரு தொகுப்பில் உள்ள மாறுபட்ட வரைபடங்களுக்கு பல்வேறு விதமான அளவுகள் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக ஒரு தளத் திட்டமானது 1:50 (1:48 அல்லது 1/4"=1'-0") என்ற அளவில் வரையப்படலாம். அதே சமயம் அதன் விளக்கமான தோற்றம் 1:25 (1:24 அல்லது 1/2"=1'-0") என்ற அளவில் வரையப்படலாம். மனைத் திட்டங்கள் பொதுவாக 1:200 அல்லது 1:100 இல் வரையப்படலாம்.

பரிமாணங்களைக் காண்பித்தல்[தொகு]

சிறப்புக் கூறுகளின் தேவைப்படும் அளவானது பரிமாணங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. தூரங்கள் பொதுவாக நேரோட்டம் மற்றும் ஆயத்தொலைவு ஆகிய இரண்டு தரப்படுத்தப்பட்ட வடிவங்களில் ஒன்றில் குறிப்பிடப்படலாம்.

  • நேரோட்ட பரிமாணங்களுடன் இரண்டு இணை வரிகள் "விரிவாக்க வரிகள்" என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டு சிறப்புக் கூறுகளுக்கு இடையில் உள்ள தூரத்தின் இடைவெளி ஆகும். இவை ஒவ்வொரு தனிக்கூறிலும் காணப்படுகின்றன. விரிவாக்க வரிகளுக்கு செங்குத்தாக இருக்கும் வரி "பரிணாம வரி" என்று அழைக்கப்படுகிறது. இதன் இறுதி முனைகளில் அம்புக் குறி இடப்படும். இவை விரிவாக்க வரிகளுக்கு இடையில் காணப்படும் மற்றும் அவைகளுக்கு இடையில் முடிவுறும். தூரமானது பரிமாண வரியின் மையப்புள்ளியில் வரிக்கு அருகிலோ அல்லது வரிக்கு இடையில் இடைவெளி விடப்பட்டோ எண்ணால் குறிப்பிடப்படும்.
  • ஆயத்தொலைவு பரிமாணங்களுடன் ஒரு கிடைமட்ட மற்றும் ஒரு செங்குத்து விரிவாக்க வரியானது முழுமையான தோற்றத்திற்கான துவக்கத்தை நிறுவுகிறது. துவக்கமானது இந்த விரிவாக்க வரிகளின் இறுதியில் பூஜ்ஜியம் இடம்பெறுவதன் மூலமாக அடையாளம் காணப்படுகிறது. மற்ற சிறப்புக் கூறுகளுக்கு x மற்றும் y அச்சுக்களுக்கு நெடுகிலும் உள்ள தூரமானது அவற்றின் இறுதியில் எண்ணால் குறிப்பிடப்படுவதுடன் மற்ற விரிவாக்கப் பகுதிகளைப் பயன்படுத்தி குறிப்பிடப்படுகிறது.

வட்ட தனிக்கூறுகளின் அளவுகள் விட்ட அல்லது ஆரப்பரிமாணங்களைப் பயன்படுத்தி குறிப்பிடப்படுகின்றன. ஆரப்பரிமாணங்கள் R" ஐத் தொடர்ந்து ஆரத்தின் மதிப்பு எனப் பயன்படுத்தப்படுகிறது. விட்டப் பரிமாணங்கள விட்டக் குறியீடு என அழைக்கப்படும் ஒரு வட்டம் அதனுடன் முன்னோக்கி-சார்பு மூலைவிட்ட வரி கொண்ட குறியீட்டைத் தொடர்ந்து விட்டத்தின் மதிப்பு எனப் பயன்படுத்தப்படுகிறது. லீடர் என அழைக்கப்படும் வட்டத் தனிக்கூறினைக் குறிப்பிடும் அம்புத்தலையுடன் கூ்டிய ஆரம் சார்ந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வரியானது ஆர மற்றும் விட்டப் பரிமாணங்களை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகையான பரிமாணங்களும் பொதுவாக பின்வரும் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றன: பெயரளவு மதிப்பு, இது தனிக்கூறின் "சிறந்த" அளவாக இருக்கிறது. மற்றும் பொறுத்தல் , பெயரளவைக் காட்டிலும் அதிகமாகும் மற்றும் குறையும் மதிப்பினை இது குறிப்பிடுவது ஆகும்.

வரைபடங்களின் அளவுகள்[தொகு]

வரைபடங்களின் அளவுகள ISO (உலகத் தரநிலை) அல்லது அமெரிக்க வழக்கம் ஆகிய இரண்டு மாறுபட்ட தரநிலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. பின்வரும் அட்டவணையைக் காண்க:

ISO தாள் அளவுகள்
ISO A வரைபட அளவுகள் (மிமீ)
A4 210 X 297
A3 297 X 420
A2 420 X 594
A1 594 X 841
A0 841 X 1189
அமெரிக்க வழக்க வரைபட அளவுகள்
A 8.5" X 11"
B 11" X 17"
C 17" X 22"
D 22" X 34"
E 34" X 44"
மற்ற அமெரிக்க வரைபட அளவுகள்
D1 24" X 36"
E1 30" X 42"

மெட்ரிக் வரைபட அளவுகள் சர்வதேச காகித அளவுகளுக்கு பொருந்துபவையாக இருக்கின்றன. இது இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் படியெடுத்தல் மிகவும் மலிவாக மாறிய போது தொடர்ந்த மேம்பாடுகள் உருவாகின. பொறியியல் வரைபடங்கள் அளவில் இரட்டிப்பாக (அல்லது பாதியாக) இருக்கலாம். மேலும் தாளில் எந்த விரயமும் இல்லாமல் அடுத்த பெரிய (அல்லது முறையே சிறிய) அளவுகளைப் பயன்படுத்தலாம்.

மேலும் மெட்ரிக் தொழில்நுட்பப் பேனாக்கள் குறிப்பிட்ட அளவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதனால் கூடுதல் விவரங்கள் அல்லது டிராஃப்டிங் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் பேனாவின் அகலத்தைத் தோராயமாக 2 இன் இருபடி மூலத்தின் காரணிகளில் மாற்றம் செய்வதன் மூலம் செய்யலாம். பேனாக்களின் முழுத்தொகுப்பும் பின்வரும் அளவுகளில் முள் அளவுகளைக் கொண்டிருக்கின்றன: 0.13, 0.18, 0.25, 0.35, 0.5, 0.7, 1.0, 1.5 மற்றும் 2.0 மிமீ. எனினும் சர்வதேச ‎தரநிர்ணய நிறுவனம் (ISO) 0.25 (வெள்ளை), 0.35 (மஞ்சள்), 0.5 (பழுப்பு), 0.7 (நீலம்) ஆகிய நான்கு பேனா முள் அளவுகளுடன் அவற்றுக்கான நிறக்குறியீட்டினையும் பரிந்துரைக்கிறது. இந்த முட்கள் பல்வேறு உரை எழுத்துரு உயரங்கள் மற்றும ISO தாள் அளவுகள் தொடர்புடைய வரிகளை உருவாக்குகின்றன.

அனைத்து ISO தாள் அளவுகளும் 2 இன் இருபடி மூலத்துக்கு 1 என்ற ஒரே உருவ விகிதத்தைக் கொண்டிருக்கின்றன. இதனால் குறிப்பிட்ட அளவுக்கு வடிவமைக்கப்பட்ட ஒரு ஆவணத்தை மற்றொரு அளவுக்குப் பெரிதாக்கலாம் அல்லது சிறியதாக்கலாம். மேலும் அது துல்லியமாக பொருந்தும். இவ்வாறு எளிதாக அளவுகளை மாற்றம் செய்ய முடிவதன் காரணமாக வரைபடத்தினை நகலெடுக்கும் போதோ அல்லது அச்சிடும் போதோ மாறுபட்ட அளவுகளுள்ள தாள்களில் குறிப்பாக அதே வரிசைகளில் உள்ள காக்கித அளவுகளில் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். எ.கா. A3 அளவில் வரையப்பட்ட ஒரு வரைபடத்தை A2 அளவிற்குப் பெரிதாக்கலாம் அல்லது A4 அளவிற்குச் சிறிதாக்கலாம்.

அமெரிக்க வழக்க "A-அளவு" "லெட்டர்" அளவுக்குப் பொருந்து. மேலும் "B-அளவு" "லெட்ஜர்" அல்லது "டேப்லாய்ட்" அளவுக்குப் பொருந்தும். ஒரு காலத்தில் பிரித்தானிய தாள் அளவுகள் எண்ணெழுத்துக்களாக இருப்பதற்கு மாறாக பெயர்களில் இருந்தன.

அமெரிக்க தேசிய தரநிலைகள் நிறுவனத்தின் (ANSI) Y14.2, Y14.3 மற்றும் Y14.5 ஆகிய தரநிலைகள் அமெரிக்காவில் பொதுவாகப் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.

தொழில்நுட்ப எழுத்துமுறை[தொகு]

தொழில்நுட்ப எழுத்துமுறை என்பது எழுத்துக்கள், எண்கள் மற்றும் மற்ற எழுத்துருக்களை தொழில்நுட்ப வரைபடத்தில் உருவாக்கும் செயல்பாடு ஆகும். இது ஒரு பொருளை விவரிப்பதற்கு அல்லது அதன் விளக்கமான விவரக்கூற்றுகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. திருத்தம் மற்றும் சீர்மைப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் வடிவங்கள் தரப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் எழுத்துமுறைத் திறன் சாதாரணமாக எழுதும் திறனுடன் ஓரளவு தொடர்புடையதாக இருக்கின்றது. பொறியியல் வரைபடங்களில் குறுகிய ஸ்ட்ரோக்குகளின் வரிசைகள் மூலமாக உருவாக்கப்பட்ட Gothic sans-serif ஸ்கிரிப்ட் பயன்படுத்தப்படுகிறது. சிறிய எழுத்துக்கள் பெரும்பாலான வரைபட இயந்திரங்களில் அரிதானதாக இருக்கின்றன.

பொறியியல் வரைபடத்தின் எடுத்துக்காட்டு[தொகு]

இயந்திரவியல் வரைபடத்துக்கான எடுத்துக்காட்டு

இங்கு பொறியியல் வரைபடத்தின் எடுத்துக்காட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது (மேலே கண்ட அதே பொருளின் சம அளவுத் தோற்றம்). மாறுபட்ட வரி வகைகள் தெளிவுக்காக நிறமிடப்பட்டிருக்கின்றன.

  • கருப்பு = பொருள் வரி மற்றும் ஹாட்சிங்
  • சிகப்பு = மறை வரி
  • நீலம் = திறத்தல் அல்லது தாளின் மைய வரி
  • மெஜந்தா = மாயத்தோற்ற வரி அல்லது வெட்டுத் தளக்கோடு

பகுதி சார் தோற்றங்கள் மேற்கண்ட எடுத்துக்காட்டில் குறிப்பிட்டுள்ளது போன்று அம்புக்குறிகளின் திசைகளின் மூலம் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. Bertoline, Gary R. Introduction to Graphics Communications for Engineers (4th Ed.). New York, NY. 2009

கூடுதல் வாசிப்பு[தொகு]

  • Basant Agrawal and C M Agrawal (2008). Engineering Drawing . Tata McGraw Hill, New Delhi. [1]
  • Paige Davis, Karen Renee Juneau (2000). Engineering Drawing
  • David A. Madsen, Karen Schertz, (2001) Engineering Drawing & Design‎ . Delmar Thomson Learning. [2]
  • Cecil Howard Jensen, Jay D. Helsel, Donald D. Voisinet Computer-aided பொறியியல் வரைபடம் using AutoCAD .
  • Warren Jacob Luzadder (1959). Fundamentals of Engineering Drawing for technical students and professional .
  • M.A. Parker, F. Pickup (1990) Engineering Drawing with Worked Examples‎ .
  • Colin H. Simmons, Dennis E. Maguire Manual of Engineering Drawing . Elsevier.
  • Cecil Howard Jensen (2001). Interpreting Engineering Drawings‎ .

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Construction drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறியியல்_வரைபடம்&oldid=3925469" இலிருந்து மீள்விக்கப்பட்டது