இந்திய மேன்மைக் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Indian Super Cup
தோற்றம்1997
மண்டலம் இந்தியா
அணிகளின் எண்ணிக்கை2
தற்போதைய வாகையாளர்East Bengal

இந்திய மேன்மைக் கோப்பை (Indian Super Cup அல்லது நிதியாதரவு காரணங்களுக்காக ஓஎன்ஜிசி இந்திய மேன்மைக் கோப்பை) என்பது இந்தியாவில் ஒவ்வோராண்டும் நடைபெறும் கழகக் கால்பந்துப் போட்டியாகும். இது ஐ-கூட்டிணைவு வெற்றியாளர்களுக்கும் கூட்டமைப்புக் கோப்பை வெற்றியாளர்களுக்கும் இடையே நடத்தப்படுகிறது. ஒருவேளை ஐ-கூட்டிணைவு வாகையர்களே கூட்டமைப்புக் கோப்பையையும் வென்றிருந்தால் ஐ-கூட்டிணைவில் இரண்டாம் இடம் பெற்றோர் விளையாடுவர். வாகையருக்கு ஒரு கேடயம் பரிசுக் கோப்பையாக வழங்கப்படும். அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பதக்கமும் பரிசளிக்கப்படும்.[1]

இப்போட்டியின் தற்போதைய வாகையர் கிங்ஃபிஷர் ஈஸ்ட் பெங்கால் அணியினராவர். அவர்கள் இறுதியாட்டத்தில் சால்கோஆகார் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 9-8 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மேன்மைக்_கோப்பை&oldid=1369713" இலிருந்து மீள்விக்கப்பட்டது