ரமோன் மக்சேசே விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மக்சேசே பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரமோன் மக்சேசே விருது
விளக்கம்அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, தாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை, அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல் மற்றும் வளரும் தலைமை ஆகிய துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.
நாடுபிலிப்பைன்ஸ்
வழங்குபவர்ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை
முதலில் வழங்கப்பட்டது1958
இணையதளம்http://www.rmaf.org.ph
ரமன் மக்சேசே

ரமோன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் (RBF) பொறுப்பாளர்களால் ஏப்ரல் 1957இல் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை காட்டாக வளரும் நாடுகளில் பரப்பவும் இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது.[1][2][3]

ஒவ்வொரு ஆண்டும் ரமோன் மக்சேசே விருது நிறுவனம் ஆசியாவில் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசு வழங்கி வருகிறது. ஆறு வகைகளில் இப்பரிசு வழங்கப்படுகிறது:

  • அரசுப்பணி
  • பொது சேவை
  • சமூக தலைமை
  • தாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை
  • அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல்
  • வளரும் தலைமை

"வளரும் தலைமை" என்ற வகை 2000ஆம் ஆண்டு ஆறாவது பகுப்பாக தொடங்கப்பட்டது. இப்பரிசு "தங்கள் சுற்றுப்புறத்தில் சமூக மாற்றங்களை ஏற்படுத்த சிறப்பாக பணியாற்றிய, ஆனால் வெளியே அதிகம் அறியப்படாத, நாற்பது வயதிற்கு குறைவான தனிநபர்களுக்கு" வழங்கப்படுகிறது.

2008 வரை வழங்கப்பட்டுள்ள 254 விருதுகளில், 49 இந்தியர்களுக்கும், 39 பிலிப்பைன் நாட்டவருக்கும், 23 ஜப்பானியருக்கும் மற்றவை ஆசியாவின் பிற நாட்டினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

பரிசு பெற்ற இந்தியர்கள்[தொகு]

ரமோன் மக்சேசே விருது பெற்ற இந்தியர்கள்:[4]

1958 வினோபா பாவே
1959 சிந்தாமணி துவாரகநாத் தேஷ்முக்
1961 அமிதாப் சௌத்திரி
1962 அன்னை தெரேசா
1963 வர்கீஸ் குரியன்
1963 தாரா கரோடி
1963 திரிபுவன்தாஸ் படேல்
1964 வெல்த்தி பிசர்
1965 ஜெயபிரகாஷ் நாராயண்
1966 கமலாதேவி சட்டோபாத்தியாயா
1967 சத்யஜித் ராய்
1969 ஏ. டி. ஆரியரத்தினா, இலங்கை
1971 எம். எஸ். சுவாமிநாதன், தமிழ்நாடு
1974 எம். எஸ். சுப்புலட்சுமி, தமிழ்நாடு
1975 பூப்ளி ஜார்ஜ் வர்கிஸ்
1976 ஹென்னிங் ஹால்க் லார்சன்
1977 இலா பட்
1979 மாபெலே அரோலே
1981 கௌர் கிசோர் கோஷ்
1981 பிரமோத் கரண் சேத்தி
1982 காந்தி பிரசாத் பட்
1982 மணிபாய் தேசாய்
1982 அருண் சோரி
1984 ஆர். கே. லட்சுமண்
1985 முரளிதர் தேவதாஸ் ஆப்தே
1989 லெட்சுமி சந்த் ஜெயின்
1991 கே. வி. சுப்பண்ணா
1992 ரவி சங்கர்
1993 பன்னூ ஜெகாங்கீர் கோயாஜி
1994 கிரண் பேடி
1996 பாண்டுரங்க அதவாலே
1996 டி. என். சேஷன்
1997 மகாசுவேதா தேவி
2000 ஜாக்கின் அற்புதம்
2000 அருணா ராய்
2001 ராஜேந்திர சிங்
2002 சந்தீப் பாண்டே
2003 ஜேம்ஸ் மைக்கேல் லிங்டே
2003 சாந்தா சிங்கா
2004 லெட்சுமி நாராயணன் ராம்தாஸ்
2005 வி. சாந்தா
2006 அரவிந்த் கெஜ்ரிவால்
2007 பாலகும்மி சாய்நாத்
2008 மந்தாகினி ஆம்தே
2009 தீப் ஜோஷி
2011 நீலிமா மிஸ்ரா
2011 ஆரிசு ஆண்டே
2012 குழந்தை பிரான்சிசு
2015 சஞ்சய் சதுர்வேதி
2016 டி. எம். கிருஷ்ணா, தமிழ்நாடு[5]
2016 பெஜவாடா வில்சன், கர்நாடகா[5]
2023 இரவி கண்ணன், தமிழ்நாடு[6]

குறிப்புகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமோன்_மக்சேசே_விருது&oldid=3936043" இலிருந்து மீள்விக்கப்பட்டது