வெள்ளை நைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல நைலும் வெள்ளை நைலும்

வெள்ளை நைல் ஆப்பிரிக்காவின் சூடான், உகாண்டா மற்றும் எகிப்து நாடுகளில் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறும் நீல நைல் ஆறுமே நைல் ஆற்றின் முக்கியமான கிளை ஆறுகள் ஆகும்.

வெள்ளை நைல் ஆறு விக்டோரியா ஏரியில் உற்பத்தியாகிறது. அங்கு இது விக்டோரியா நைல் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இது முதலில் வடக்காகவும் பின்னர் மேற்கு நோக்கியும் உகாண்டா, கியோகா ஏரி, ஆல்பர்ட் ஏரி ஆகியவற்றின் வழியாகப் பாய்கிறது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளிவரும் பாது இது ஆல்பர்ட் நைல் எனவும் இது சூடான் நாட்டுக்குள் பாயும் போது மலை நைல் எனவும் அழைக்கப்படுகிறது.

பின்னர் இது சூடான் சமவெளிகளில் பாய்ந்து இறுதியில் கார்த்தௌம் என்னும் இடத்தில் நீல நைல் ஆற்றுடன் இணைந்து நைல் ஆறாக உருவெடுக்கிறது. விக்டோரியா ஏரியில் இருந்து கார்த்தௌம் வரை இவ்வாற்றின் நீளம் தோராயமாக 3700 கிலோமீட்டர்கள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_நைல்&oldid=2985959" இலிருந்து மீள்விக்கப்பட்டது