இணையவழி விளம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையவழி விளம்பரம் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பெரிய வணிகம் ஆகும். அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டு இணைய வழியிலான விளம்பர வருமான தொலைக்காட்சியிலிருந்து வரும் விளம்பர வருமானத்தினை முறியடித்தது.[1] 2012 ஆம் ஆண்டு இணையவழி விளம்பரத்திற்கான மொத்த வருமானம் 36.57 பில்லியன் டாலர்கள், இது 2011 ஆம் ஆண்டினை விட 15.2% அதிகம் (2011 ஆம் ஆண்டு இணையவழி விளம்பரத்திற்கான மொத்த வருமானம் 31.74 பில்லியன் டாலர்கள்).[2]இதேபோல் 2013 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரலாறு காணாத உயர்வினை இந்த விளம்பரச்சேவை அடைந்தது. இது முந்தைய ஆண்டின் அதே காலத்தின் வருமானத்தினை விட 18% அதிகம். இதனால் இந்த விளம்பரச்சேவை அனைத்து தொழிற்பகுதிகளிலும் அசுர வளர்ச்சி கண்டது.[1]

வரலாறு[தொகு]

இ-மெயில்:[தொகு]

இணையத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஆன்லைன் விளம்பரப்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. முதன் முதலில் இணையவழி விளம்பரம் இ-மெயில் மூலமே பிரபலப்படுத்தப்பட்டன. மே 3,1978 ல் DEC ன் விளம்பரதாரர் காரே தேஃர்க் மேற்கு அமெரிக்க பயனர்களுக்கு புது வகையான DEC கணினி பற்றிய விளம்பரத்தினை அனுப்பினார். [3][4] இதன் பின்பு இ-மெயில் விளம்பரப்படுத்துதல் அதிகமானது, மேலும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் விளம்பரங்கள் “ஸ்பேம்” எனப்படும் தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டது.

முதன்முதலாக அதிக அளவிலான ஸ்பேம் செய்திகள், ஜனவரி 18, 1994 ல் ஆன்டிரூவ் யுனிவர்சிட்டியின் கணினி நிர்வாகியால் மதம் சார்ந்த செய்திகளாக அனைவருக்கும் அனுப்பப்பட்டது. [5] இதன் வரிசையில் லாரன்ஸ் காண்டர் மற்றும் மார்தா சியூகல் அவர்களின் சட்டம் சம்பந்தப்பட்ட சேவைகளை "Green Card Lottery – Final One?” [6] என்ற தலைப்பில் வெளியிட்டனர். இவ்வாறு ஸ்பேம்-ன் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றது.

காட்சி விளம்பரங்கள்:[தொகு]

ஆன்லைனில் பேனர்கள் மூலம் விளம்பரங்களை காட்சிகளாக காட்டுவது 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. இதன் மூலம் அந்தந்த வலைப் பக்கங்களில் சொந்தக்காரர்களும் ஒரு சிறிய வருமானத்தினை பெற முடிந்தது. வலைப்பதிவுகளில் அடிப்பாகத்தில் விளம்பரங்களை காட்டுவதன் மூலம் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதில் ஆர்வம் அதிகமானது. [7] கிளிக் செய்யும் வகையிலான விளம்பரங்கள் முதன் முதலில் குளோபல் நெட்வொர்க் நேவிகாட்டர் நிறுவனத்தினால் 1993 ல் சிலிக்கான் வேல்லி லா ஃபிர்ம்-யிடம் விற்கப்பட்டது.

தேடல் விளம்பரங்கள்:[தொகு]

தேடக்கூடிய வார்த்தைகளை வைத்து விளம்பரங்களை காட்டும் தேடல் விளம்பர முறை 1998 ல் GoTo.com ஆல் (GoTo.com 2001 ல் Overture என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பின் 2003 ல் யாகூ நிறுவனத்தால் வாங்கப்பட்டது) உருவாக்கப்பட்டது. அதன்பின் 2000 ஆம் ஆண்டில் கூகுள் “ஆட்வேர்ட்ஸ்” எனப்படும் தேடல் விளம்பரங்களுக்கான ஒரு புதிய முறையினை அறிமுகம் செய்ததது. மேலும் விளம்பரப்படுத்துபவர்களின் தேவைக்கேற்ற விலை மற்றும் இதர விருப்பங்கள் அடிப்படையில் அமைந்த தரநிர்ணயத்தில் விளம்பரங்களை வழங்குவதை 2002 ல் கூகுள் அறிமுகம் செய்ததது.

விநியோக முறைகள்[தொகு]

காட்சி விளம்பரங்கள்:[தொகு]

காட்சி விளம்பரங்கள், விளம்பர செய்தியினை சொற்கள், நிழற்படங்கள் மற்றும் அனிமேஷன் & வீடியோவாக காட்டுவதன் மூலம் அதன் விளம்பர செய்தியினை தெரியப்படுத்துகின்றன.

வெப் பேனர் விளம்பரங்கள்:[தொகு]

வெப் பேனர் விளம்பரங்கள் அல்லது பேனர் விளம்பரங்கள் வலைப்பக்கங்களில் கிராஃபிக்ஸ் மூலம் காண்பிக்கப்படுகின்றன. இதேபோல் ஃப்ரேம் விளம்பரங்கள், பாப் அஃப்ஸ் & பாப் அண்டர்ஸ், மிதவை விளம்பரங்கள், விரிவான விளம்பரங்கள், தேடுதலுக்கு பொருத்தமான விளம்பரங்கள் எனப் பலவகையான விளம்பரங்கள் வலைப்பக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

சமூக வலைதள மார்க்கெட்டிங்க்[தொகு]

தொழில் ரீதியாக தனது பொருட்களை பற்றியும் தனது விற்பனை மற்றும் சலுகைகளைப் பற்றியும் தொடர்ந்து பதிவுகளைக் கொடுத்து விளம்பரப்படுத்துவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவார்கள். இது சமூக வலைதள மார்க்கெட்டிங்க் என அழைக்கப்படுகிறது.

இழப்பீடு முறைகள்[தொகு]

  • CPM (Cost Per Mille) - விளம்பரதாரர்கள் ஆயிரம் தடவை விளம்பரங்களை அவர்களின் வலைப்பதிவுகளில் காட்டுவதற்காக வெளியீட்டர்களுக்கு வருமானத்தினை கொடுக்கும் முறை CPM (Cost Per Mille) என அழைக்கப்படுகிறது.
  • CPC (cost per click) - விளம்பரதாரர்கள், வாடிக்கையாளர்கள் தங்களது வலைப்பக்கத்திற்கு வரவேண்டும் என நினைக்கும் பட்சத்தில் அவர்கள் இத்தகைய விளம்பரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இதில் அவர்களது விளம்பரங்களில் ஏற்படும் கிளிக்குகளுக்கு தகுந்தாற்போல் பணம் வெளியீட்டாளருக்கு வழங்கப்படும்.
  • CPV (cost per view) - வீடியோ போன்ற விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் இவை விளம்பரப்படுத்துகின்றன. ஒரு தடவை பார்த்தால் கூட இந்த விளம்பரங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

நிர்ணயிக்கப்பட்ட விலை:[தொகு]

விளம்பரதாரர்கள் வெளியீட்டாளர்களுக்கு விளம்பரங்களை வலைப்பக்கங்களில் காட்டுவதற்காக ஒரு நிரந்தர தொகையினை வழங்குவர்.[8]

பயன்கள்:[தொகு]

சாதாரண விளம்பரப்படுத்துதலைவிட ஆன்லைன் விளம்பரப்படுத்துதலின் மூலம் குறைந்த விலை, அதிவேகம், அதிகளாவிலான பயனர்கள், மேம்பட்ட வடிவமைப்பு என பல வகைகளில் விளம்பரங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல முடியும்.

குறிப்புகள்:[தொகு]

  1. 1.0 1.1 "ஐஏபி இணையவழி விளம்பர வருமான அறிக்கை: 2012 முழு ஆண்டு முடிவுகள்" (PDF). பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூபர்ஸ் இன்டர்னெட் அட்வரடைசிங்க் பியூரோ – ஏப்ரல் 2013 (பார்க்கப்பட்டது ஜூன் 12, 2013).
  2. "ஐஏபி இணையவழி விளம்பர வருமான அறிக்கை: 2013 ஆறு மாதகால முடிவுகள்" (PDF). பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூபர்ஸ் இன்டர்னெட் அட்வரடைசிங்க் பியூரோ – அக்டோபர் 2013. (பார்க்கப்பட்டது மார்ச் 4, 2014).
  3. "ரெஃப்லெக்ஷன் ஆன் த 25த் அன்னிவர்சரி ஸ்பேம்". (பார்க்கப்பட்டது ஜூன் 14,2013). {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: numeric names: authors list (link)
  4. "அட் 30, ஸ்பேம் கோயிங்க் நோவேர் சூன்". (பார்க்கப்பட்டது ஜூன் 14, 2013). {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  5. "டெம்பிளேடன் பிராட் "ஒரிஜின் ஆஃப் த டெர்ம் "ஸ்பேம்". டு மீன் நெட் அபுயூஸ்” (பார்க்கப்பட்டது ஜூன் 14,2013). {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  6. "எலெக்ட்ரானிக் பில்போர்ட்ஸ் ஆன் த டிஜிட்டல் சூப்பர்ஹை : ஏ ரிப்போர்ட் ஆஃப் த வொர்கிங்க் குரூப் ஆன் இன்டெர்னெட் அட்வர்டைஸிங்க்". 28 செப்டம்பர் 1994 (பார்க்கப்பட்டது ஜூன் 14,2013). Archived from the original on 2013-06-15. பார்க்கப்பட்ட நாள் 2014-05-31. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  7. "ஹிஸ்டரி ஆஃப் ஆன்லைன் டிஸ்பிளே அட்வர்டைஸிங்க்". வான்டேஜ் லோக்கல்.(பார்க்கப்பட்டது ஜூன் 14,2013). Archived from the original on 2014-06-15. பார்க்கப்பட்ட நாள் 2014-05-31. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  8. "ஆன்லைன் விளம்பரம்". Supramind.com. Archived from the original on 2014-07-02. பார்க்கப்பட்ட நாள் 2014-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையவழி_விளம்பரம்&oldid=3543503" இலிருந்து மீள்விக்கப்பட்டது