அருப்புக்கோட்டை

ஆள்கூறுகள்: 9°30′50″N 78°06′01″E / 9.5139°N 78.1002°E / 9.5139; 78.1002
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருப்புக்கோட்டை
—  முதல் நிலை நகராட்சி  —
அருப்புக்கோட்டை
இருப்பிடம்: அருப்புக்கோட்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°30′50″N 78°06′01″E / 9.5139°N 78.1002°E / 9.5139; 78.1002
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
வட்டம் அருப்புக்கோட்டை வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி அருப்புக்கோட்டை
சட்டமன்ற உறுப்பினர்

சாத்தூர் ராமச்சந்திரன் (திமுக)

மக்கள் தொகை 1,36,047 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


123 மீட்டர்கள் (404 அடி)

குறியீடுகள்


அருப்புக்கோட்டை (Aruppukkottai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°31′N 78°06′E / 9.52°N 78.1°E / 9.52; 78.1 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 97 மீட்டர் (318 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊர் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை(45-பி)யில், மதுரையில் இருந்து 48 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

அருப்புக்கோட்டையின் பழைய பெயர் செங்காட்டு இருக்கை இடத்துவழி என்பதாகும்.

விஜயநகரப் பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை அரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகோட்டை என்னும் சொல்லின் மருவுச் சொல் எனவும் கூறப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,558 ஆண்கள், 44,164 பெண்கள் ஆவார்கள். அருப்புக்கோட்டை மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். அருப்புக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 89.97% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85%, பெண்களின் கல்வியறிவு 85.18% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. அருப்புக்கோட்டை மக்கள் தொகையில் 7,654 (8.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். அருப்புக்கோட்டையில் 23,803 வீடுகள் உள்ளன.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.47% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 6.42% கிருஸ்துவர்கள் 2.02%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அருப்புக்கோட்டை மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.04%, பழங்குடியினர் 0.16% ஆக உள்ளனர்.[5]

தொழில்[தொகு]

நெசவு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், விவசாயம், பெரும்பான்மை நகர மக்களாலும் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம மக்களாலும் செய்யப்படுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரம் கிராம மக்களுக்கு இது கல்வி மற்றும் சந்தைக்கான மைய இடமாக விளங்குகிறது. இந்நகரைச் சுற்றிலும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட தனியார் நூற்பு ஆலைகள் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

சாலை போக்குவரத்து[தொகு]

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம்

அருப்புக்கோட்டையானது மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் இராமநாதபுரத்தை இணைக்கும் மையமாக செயல்படுகிறது.

திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான வழியான தேசிய நெடுஞ்சாலை 45-பி, அருப்புக்கோட்டை வழியாக செல்கிறது.

இரயில் போக்குவரத்து[தொகு]

அருப்புக்கோட்டை இரயில் நிலையம்

அருப்புக்கோட்டை தொடருந்து நிலையமானது மானாமதுரை மற்றும் விருதுநகர் ஆகியவற்றுடன் இணைக்கும் அகல ரயில் பாதையாக உள்ளது. இது தென் மாவட்டங்களை, டெல்டா மாவட்டங்களுடன் இணைப்பதற்கான ஒரு முக்கிய தொடருந்துப் பாதையாகும். மேலும் இது விருதுநகர் - அருப்புக்கோட்டை - மானாமதுரை - காரைக்குடி - திருச்சி வழியாக சென்னைக்கு செல்ல மாற்று வழியாகவும் உள்ளது.

வானூர்தி நிலையம்[தொகு]

இங்கிருந்து 44 கி.மீ தொலைவில் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

இறை வழிபாட்டு தலங்கள்[தொகு]

இந்து கோவில்கள்[தொகு]

  1. அருள்மிகு முத்தாளம்மன் திருக்கோவில் பாலையம்பட்டி
  2. அருள்மிகு சொக்கநாத சுவாமி உடனுறை மீனாட்சியம்மன் திருக்கோவில்
  3. அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோவில் பாலையம்பட்டி
  4. அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்
  5. அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் (புளியம்பட்டி)
  6. அமுதலிங்கேஸ்வரர் திருக்கோவில்
  7. சிவன் கோவில்
  8. சௌடேஸ்வரி அம்மன் கோவில்
  9. அருள்மிகு மாரியம்மன் கோவில் (அம்மன் கோவில் தெரு)
  10. வாழவந்தம்மன் கோவில்
  11. மலையரசன் கோவில்
  12. பட்டாபி ராமர் கோவில்
  13. சிவன் விநாகர் கோவில் (புளியம்பட்டி)
  14. மாகாளி அம்மன் கோவில் (காந்தி மைதானம்)
  15. விநாயகர் கோவில்
  16. வடிவேல் முருகன் கோவில்
  17. உச்சினி மாகாளியம்மன் கோவில்
  18. முத்தையா கோவில்
  19. காமாட்சி அம்மன் கோவில் (குமரன் புது தெரு)
  20. வண்டி மலர்ச்சி அம்மன் கோவில் (குமரன் புது தெரு)

மசூதிகள்[தொகு]

  1. வாழவந்தபுரம் ஜூம்மா பள்ளிவாசல்
  2. நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல்

தேவாலயங்கள்[தொகு]

  1. சி.எஸ்.ஐ இம்மானுவேல் தேவாலயம்
  2. சி.எஸ்.ஐ கிறிஸ்து தேவாலயம், புளியம்பட்டி
  3. சி.எஸ்.ஐ தேவாலயம், பாளையம்பட்டி
  4. சி.எஸ்.ஜ நல்ல சமாரியன் சிற்றாலயம், புதிய பேருந்து நிலையம்
  5. ரோமன் கத்தோலிக் தேவாலயம்
  6. ஏ.ஜி. தேவாலயம்
  7. பெந்தகோஸ்து தேவாலயம்
  8. மாராநாதா திருச்சபை

கல்வி நிலையங்கள்[தொகு]

பள்ளிகள்[தொகு]

  1. வெள்ளைக்கோட்டை செங்குந்தர் தொடக்கப்பள்ளி, அருப்புக்கோட்டை
  2. வெள்ளைக்கோட்டை செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை
  3. பொட்டல்பட்டி செங்குந்தர் தொடக்கப்பள்ளி, அருப்புக்கோட்டை
  4. பொட்டல்பட்டி செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை
  5. CSI பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  6. CSI போர்டிங் நடுநிலைப்பள்ளி
  7. CSI தொடக்கப்பள்ளி,பந்தல்குடி சாலை.
  8. CSI தொடக்கப்பள்ளி, புளியம்பட்டி
  9. B.P.V.சாலா உயர்நிலைப்பள்ளி பாலையம்பட்டி
  10. எஸ். பி. கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  11. எஸ். பி. கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  12. எஸ். பி. கே. தொடக்கப்பள்ளி
  13. எஸ். பி. கே. தியாகராஜன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  14. எஸ். பி. கே. ஜூனியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
  15. எஸ். பி. கே. இண்டர்நேசனல் பள்ளி(CBSE)
  16. இந்து நாடார் நடுநிலைப்பள்ளி
  17. சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி
  18. சாலியர் மகாஜன நடுநிலைப்பள்ளி,திருநகரம்
  19. சாலியர் மகாஜன நடுநிலைப்பள்ளி, வேலாயுதபுரம்
  20. சாலியர் மகாஜன தொடக்கப்பள்ளி, புளியம்பட்டி
  21. சாலியர் மகாஜன தொடக்கப்பள்ளி
  22. சாலியர் மகாஜன தொடக்கப்பள்ளி,, வேலாயுதபுரம்
  23. APTSMPS மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  24. தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி
  25. தேவாங்கர் நடுநிலைப்பள்ளி
  26. தேவாங்கர் தொடக்கப்பள்ளி, புளியம்பட்டி
  27. தேவாங்கர் தொடக்கப்பள்ளி, சொக்கலிங்கபுரம்
  28. விஷ்வாஸ் நர்ஷரி மற்றும் பிரைமரி பள்ளி
  29. ஶ்ரீ விஷ்வாஸ் வித்யாலயா
  30. அல் அமீன் மேல்நிலைப்பள்ளி
  31. காந்தி வித்தியாலயம் மேல்நிலைப்பள்ளி
  32. சந்திரா நேஷனல் பள்ளி
  33. சந்திரா குழந்தைகள் பள்ளி
  34. ஶ்ரீ சௌடாம்பிகா நர்ஷரி மற்றும் பிரைமரி பள்ளி
  35. ஶ்ரீ சௌடாம்பிகா காண்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  36. ஶ்ரீ சௌடாம்பிகா இண்டர்நேசனல் மேல்நிலைப்பள்ளி
  37. நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  38. நோபிள் பப்ளிக் இண்டர்நேசனல் மேல்நிலைப்பள்ளி

௧ல்லூரிகள்[தொகு]

  1. தேவாங்கர் கலைக்கல்லூரி
  2. எஸ். பி. கே. கலைக்கல்லூரி
  3. சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி
  4. சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி
  5. சௌடாம்பிகா கேட்டரிங் கல்லூரி
  6. நோபல் பெண்கள் கலைக்கல்லூரி
  7. ரமனாஸ் பெண்கள் கலைக்கல்லூரி

அரசு கல்வி நிறுவனங்கள்[தொகு]

  1. மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி
  2. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
  3. அரசு தொழிற்பயிற்சி நிறுவனம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Aruppukkottai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2006.
  5. Aruppukkottai Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருப்புக்கோட்டை&oldid=3842069" இலிருந்து மீள்விக்கப்பட்டது