நிகழ்பட வரைவியல் அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் நிகழ்பட வரைகலை அணி இணைப்பி.

நிகழ்பட வரைவியல் அணி (Video Graphics Array, VGA) சிறப்பாக ஐபிஎம் தனிக்கணினி/2 (IBM PS/2)வகைக் கணினிகளில் காட்சிச் சாதனமாக பயன்படுத்தப்பட்ட வன்பொருளைக் குறித்தாலும்,[1] அதன் பரவலான பயன்பாட்டினால் அலைமருவி கணினி காட்சி சீர்தரமான 15-ஊசி D-மீச்சிறு நிகழ்பட வரைகலை அணி இணைப்பியையோ அல்லது 640×480 கணித்திரை பிரிதிறனையோ குறிக்கலாயிற்று. இந்தக் கணித்திரை பிரிதிறன் 1990களிலிருந்தே தனிக்கணினிகளில் அக்கற்றப்பட்டு மாற்றாக்கப்பட்டபோதும் நகர்பேசிகளில் இது பரவலான பிரிதிறனாக விளங்குகிறது.

இந்த அணி ஐபிஎம்மால் விரிவான வரைவியல் அணி(XGA)யால் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது; இருப்பினும் ஐபிம் ஒத்த கணினிகளைத் தயாரிப்பாளர்களால் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்ட பல்வேறு இணைப்பிகள் ஒட்டுமொத்தமாக சூப்பர் விஜிஏ என அழைக்கப்படலாயின.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ken Polsson. "Chronology of IBM Personal Computers". Archived from the original on 2013-06-27. பார்க்கப்பட்ட நாள் 2010-11-18.

மேலும் அறிய[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
VGA
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்பட_வரைவியல்_அணி&oldid=3560664" இலிருந்து மீள்விக்கப்பட்டது