உதுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதுமான்(ரலி)
அமீர் உல் முஃமினீன்
ராசிதுன் கலிபகம் உச்சம், 655.
காலம்11 நவம்பர் 644–17 ஜூலை 656
பட்டங்கள்துன் நூரைன்
பிறப்புc. 579
பிறந்த இடம்தாயிஃப், அரேபியா
(தற்போது, சவூதி அரேபியா)
இறப்பு17 July 656
இறந்த இடம்மதீனா, அராபியத் தீபகற்பம்
(தற்போது, சவூதி அரேபியா)
முன் ஆட்சிசெய்தவர்உமர்(ரலி)
பின் ஆட்சிசெய்தவர்அலி(ரலி)
Wivesருகையா[1]
உம்மு குல்தூம்[1]

உதுமான் / உத்மான் / உஸ்மான் தமிழில் அரபு (عثمان بن عفان) முஹம்மது நபியின் மருமகனும், முஸ்லிம்களின் மூன்றாவது கலீபாவும் பிரசித்திப்பெற்ற நபித்தோழர்களில் ஒருவரும் ஆவார்.

இவர் கிபி 644 முதல் கிபி 656 வரை ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் ஈரான், வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா மற்றும் சைப்பிரசு ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இசுலாமிய இராணுவத்தில் கடற்படை உருவாக்கப்பட்டது. மேலும் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.

உதுமான்(ரலி) மிகப்பெரும் செல்வந்தராக விளங்கினாலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்ச சுபாவமும் கொண்டவரான இவர் பொதுவாக தனக்கு வேண்டப்பட்ட மற்றும் உறவினர்களை ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவரது ஆட்சியில் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு எதிரான கிளர்ச்சிப் படை எகிப்து மற்றும் கூஃபா (ஈராக்) ஆகிய பகுதிகளில் உருவானது. இவர்களால் உதுமான் கிபி 656 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 [1], பிரித்தானிக்கா
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதுமான்&oldid=3041752" இலிருந்து மீள்விக்கப்பட்டது