தனியுடைமை மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூடிய மூலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மூடிய மூலம் அல்லது தனியுடைமை மென்பொருள் (Proprietary software) என்பது கணினி மென்பொருளுக்கு வழங்கப்படும் ஒரு வகை உரிமம் ஆகும். இதன் படி காப்புரிமை பெற்றவரை தவிர வேறு எவரும் மென்பொருளின் மூலத்தை மாற்றவோ, அடுத்தவருக்கு அனுமதியின்றி பகிரவோ, மறுவிநியோகம் செய்யவோ முடியாது.

இதில் மென்பொருளை உருவாக்குபவரே காப்புரிமை பெற்றவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரு நிறுவனத்திற்காக பணிபுரிவர், பணிபுரியும் நிறுவனத்திற்காக உருவாக்கும் மென்பொருளின் காப்புரிமை நிறுவனத்திற்கே.

மென்பொருளுக்கு விலை வந்த நிகழ்வு[தொகு]

1960 களின் முற்பகுதி வரை பெருங்கணினிகள் அளவு மற்றும் விலை ஆகிய இரண்டிலுமே அதிகமாவே இருந்தன. அவற்றை இயக்க குளிர்சாதன வசதி கொண்ட பெரும் அறைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் கணினிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்துவதை விட வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் பழக்கமே அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்தது.

கணினியை தயாரிக்கும் நிறுவனமே மென்பொருளையும் இலவசமாக வழங்கியது. எனவே பெரும் செலவு செய்து பெருங்கணினியை வாங்குபவர் மென்பொருளுக்கு தனியாக பணம் செலுத்த தேவை இல்லை. ஆனால் 1969 ல் ஐ.பீ.எம் மென்பொருள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நம்பிக்கையின்மை வழக்கு அச்சுறுத்தல் காரணமாக, பெருங்கணினி மற்றும் அதன் மென்பொருளுக்கு தனித்தனியாக விலை வைத்து அறிவித்தது. அத்தோடு மென்பொருளுக்கான நிரலையும் வெளிப்படையாக அறிவிக்க மறுத்தது. இதுவே மூடிய மூலம் அல்லது தனியுடைமை மென்பொருளுக்கான தொடக்கமாக கருதப்படுகிறது.[1]

ரிச்சர்டு மேத்யூ ஸ்டால்மேன் (Richard Matthew Stallman) இதற்கு எதிராக போராடி வருபவர்.இவர் திறந்த மூல (Open Source) கணினி மென்பொருள் திட்டங்கள் உருவாக வழிவகுத்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2.1 In 1960s". Archived from the original on 2015-09-13. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியுடைமை_மென்பொருள்&oldid=3557543" இலிருந்து மீள்விக்கப்பட்டது