உபுண்டு (இயக்குதளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபுண்டு
Ubuntu logo

உபுண்டு 12.04 LTS (Precise Pangolin)
நிறுவனம்/
விருத்தியாளர்
கனோனிக்கல் நிறுவனம் / உபுண்டு பவுண்டேசன்
இயங்குதளக் குடும்பம் லினக்ஸ்
மூலநிரல் வடிவம் திறந்த மூலநிரல்
முதல் வெளியீடு 20 அக்டோபர் 2004; 19 ஆண்டுகள் முன்னர் (2004-10-20)
பிந்தைய நிலையான பதிப்பு 18.04 Bionic Beaver / 26 ஏப்ரல் 2018; 5 ஆண்டுகள் முன்னர் (2018-04-26)
பிந்தைய நிலையற்றப் பதிப்பு 17.10 Artful Aardvark / 26 அக்டோபா், 2017
கிடைக்கும் மொழிகள் பன்மொழி (Multilingual) 55 க்கும் மேற்பட்ட மொழிகள்
மேம்பாட்டு முறை APT
Package manager dpkg, Snappy
Supported platforms I386, IA-32, AMD64; ARMhf (ARMv7 + VFPv3-D16), ARM64; Power, ppc64le; s390x
கேர்னர்ல் வகை Monolithic kernel, Linux
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் குநோம்
அனுமதி குனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL)
தற்போதைய நிலை தற்போதைய (Current)
இணையத்தளம் www.ubuntu.com

உபுண்டு (/ʊˈbʊnt/ uu-BUUN-too)[1][2] (Ubuntu) என்பது, குனூ/லினக்சு இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். இது டெபியனை அடிப்படையாகக் கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற, திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்றுமுழுதாக இலவசமாகக் கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களைப் பணம் எதுவும் செலுத்தாமல் அஞ்சல் மூலம் பெறக்கூடியதாக இருந்தது. உபுண்டு என்ற ஆப்பிரிக்கச் சொல்லிற்கான பொருள், மானிட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்சு" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.[3]

வெளியீடுகள்[தொகு]

அலைபேசி(Nexus S) உபுண்டு
உபுண்டு தொலைக்காட்சிப் பெட்டி

உபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை கொண்டவையாக அமைகின்றன. இதில் டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டபடி இதன் தற்போதைய பதிப்பான கட்ஸி கிப்பன், 18 அக்டோபர், 2007 அன்று வெளியிடப்பட்டுள்ளது. . இதில் முற்றிலும் தளையறு மென்பொருட்களைக் கொண்ட ஒரு வழங்கலும் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீடுகள் தமக்கென தனித்தனியான பெயர்களையும், பதிப்பு இலக்கத்தையும் கொண்டிருக்கும். பதிப்பு இலக்கமானது வெளியீட்டின் ஆண்டினையும் மாதத்தையும் குறிப்பதாக அமையும். எடுத்துக்காட்டாக உபுண்டு 4.10 ஆனது 2004 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் வெளிவந்ததாகும்.

வரிசை பதிப்பு வெளியிடப்பட்ட திகதி Code name ஆதரவு காலம்
1 4.10 20 அக்டோபர், 2004 Warty Warthog 30 ஏப்ரல், 2006 உடன் ஆதரவு முடிவடைந்துள்ளது
2 5.04 8 ஏப்ரல், 2005 Hoary Hedgehog 31 அக்டோபர், 2006 உடன் ஆதரவு முடிவடைந்துள்ளது
3 5.10 13 அக்டோபர், 2005 Breezy Badger[4][5] 13 ஏப்ரல், 2007 வரை
4 6.06 1 ஜூன், 2006 Dapper Drake[6][7] மேசைக் கணினிகளுக்கு ஜூன் 2009, வழங்கிகளுக்கு 2011
5 6.10 26 அக்டோபர், 2006 Edgy Eft[8][9] ஏப்ரல் 2008
6 7.04 19 ஏப்ரல், 2007 Feisty Fawn[10] அக்டோபர் 2008
7 7.10 18 அக்டோபர், 2007 Gutsy Gibbon[11] ஏப்ரல் 2009
8 8.04 24 ஏப்ரல், 2008 Hardy Heron[12] மே 2013
9 8.10 30 அக்டோபர், 2008 Intrepid Ibex[13] ஏப்ரல் 2010
10 9.04 23 ஏப்ரல், 2009 Jaunty Jackalope அக்டோபர் 2010
11 9.10 29 அக்டோபர், 2009 Karmic Koala ஏப்ரல் 2011
12 10.04 29 ஏப்ரல், 2010 Lucid Lynx மேசைக் கணினிகளுக்கு ஏப்ரல் 2013, வழங்கிகளுக்கு ஏப்ரல் 2015
13 10.10 10 அக்டோபர், 2010 Maverick Meerkat ஏப்ரல் 2012
14 11.04 28 ஏப்ரல், 2011 Natty Narwhal அக்டோபர் 28, 2012
15 11.10 13 அக்டோபர், 2011 Oneiric Ocelot மே 2013
16 12.04 26 ஏப்ரல், 2012 Precise Pangolin[14] ஏப்ரல் 2017
17 12.10 18 அக்டோபர், 2012 Quantal Quetzal[15] ஏப்ரல் 2014
18 13.04 25 ஏப்ரல், 2013 Raring Ringtail[16] சனவரி 2014
19 13.10 17 அக்டோபர், 2013 Saucy Salamander சூலை 2014
20 14.04 17 ஏப்ரல், 2014 Trusty Tahr 17 ஏப்ரல் 2019 [17]
21 14.10 23 அக்டோபர் 2014 Utopic Unicorn 9 மாதங்கள் [18]
22 15.04 23 ஏப்ரல் 2015 Vivid Vervet பிப்ரவரி 2016
23 15.10 22 அக்டோபர் 2015 Wily Werewolf சூலை 2016
24 16.04 21 ஏப்ரல் 2016 Xenial Xerus ஏப்ரல் 2021
25 17.04 13 ஏப்ரல் 2017 Zesty Zapus சனவரி 2018
26 17.10 19 அக்டோபா் 2017 Artful Aardvark சூலை 2018
27 18.04 26 ஏப்ரல் 2018 Bionic Beaver ஏப்ரல் 2023
28 18.10 08 அக்டோபா் 2018 Cosmic Cuttlefish ஜூலை 2019
29 19.04 18 ஏப்ரல் 2019 Disco Dingo ஜனவரி 2020
30 19.10 17 அக்டோபர் 2019 Eoan Ermine ஜூலை 2020
31 20.04 23 ஏப்ரல் 2020 Focal Fossa ஏப்ரல் 2025
32 21.04 22 ஏப்ரல் 2021 Hirsute Hippo ஜனவரி 2022
33 21.10 14 அக்டோபா்2021 Impish Indri ஜூலை 2022
34 22.04 21 ஏப்ரல் 2022 Jammy Jellyfish ஏப்ரல் 2027

இவ்வழங்கலை கொண்டு அன்றாட கணினி பாவனைகள் அனைத்தையும் செய்யமுடியும். அத்தோடு வழங்கியாகவும் இதனை பயன்படுத்த முடியும். மேசைக்கணினிகளைப் போலவே மடிக்கணினிகளுக்கும் இது சிறப்பான ஆதரவை வழங்குகிறது.

மார்க் ஷட்டில்வர்த் (Mark Shuttleworth) என்பவருடைய கனோனிக்கல் நிறுவனம் (Canonical Ltd) எனும் நிறுவனம்[19] உபுண்டுவுக்கு அனுசரணை வழங்குகிறது.

தன்மைகள்[தொகு]

உபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்
  • நிறுவிக்கொண்டவுடனேயே பயன்படுத்தக்கூடியதாக, தேவையான சாதாரண மென்பொருட்கள் அனைத்தையும் இறுவட்டு கொண்டிருக்கிறது.
  • நிர்வாகி அனுமதி, sudo மூலம் பயனருக்கு வழங்கப்படுகிறது.
  • தமிழ் உள்ளிட ஏராளமான மொழிகளில் இடைமுகப்பை மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி.
  • தமிழ் உள்ளீட்டுக்கென GTKIM.
  • utf -8 குறிமுறைக்கான ஆதரவு.
  • பொதி முகாமைக்கு deb பொதி வடிவம் பயன்படுத்தப்படுகிறது.
  • synaptic மூலம் வேண்டிய மென்பொருட் பொதிகளை இணையத்திலிருந்து நேரடியாக நிறுவிக்கொள்ளக்கூடிய வசதி. (தளைகள் தன்னியக்கமாக கையாளப்படும்)
  • புதிய வெளியீடு வந்தவுடன் நிறுவப்பட்ட இயங்குதளத்தை இணையத்தினூடாக இலவசமாகவும், எளிமையாகவும், புதிய வெளியீட்டுக்கு மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி.

மென்பொருள் பொதி முகாமைத்துவமும் அனுசரணையும்[தொகு]

உபுண்டு 12.04வில், குபுண்டுவை
நிறுவும் போது, நாம் தெரிவு செய்ய வேண்டிய
கேடிஇ திரைமேலாளர்கள்

உபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது. அவையாவன,

  • Main (முதன்மை)
  • Restricted (கட்டுப்படுத்திய)
  • Universe (பிரபஞ்சம்)
  • Multiverse (அகிலம்)

Main[தொகு]

இதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம் பாதுகாப்பு பொருத்துக்களும், இற்றைப்படுத்தல்களும் வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன.

Restricted[தொகு]

இதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர் இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத வன்பொருள் இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால் உபுண்டு அணியினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம்.

Universe[தொகு]

இப்பிரிவினுள் பெருமளவான மென்பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம் எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை கிடையாது.

Multiverse[தொகு]

இதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் பொது மக்கள் உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை.

மேகக் கணினி கூட்டம் (Cloud computing)[தொகு]

உபுண்டு சர்வர் பதிப்பு மேகக் கணினி கூட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. (உபுண்டு 11.04 பதிப்பும் அதற்கு மேலும்)

உபுண்டு வழங்கலின் வடிவங்கள்[தொகு]

பல்வேறு தேவைகளையும் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு இவ்வழங்கல் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது.

இயக்கும் முறையை அடிப்படையாகக்கொண்ட வடிவங்கள்[தொகு]

  • நிறுவக்கூடிய வட்டு - இந்த இறுவட்டினை நீங்கள் கணினியில் நிறுவி பின் வழங்கலை (க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை) பயன்படுத்தலாம்.
  • நிகழ்வட்டு - இதனை கணினியில் நிறுவிக்கொள்ளாமல், வன்தட்டில் எந்த விதமான மாற்றங்களையும் உருவாக்காமல், இறுவட்டிலிருந்தே பயன்படுத்திப்பார்க்கலாம். இயங்குதளத்தை கணினியில் நிறுவமுடியாதவர்கள், இதனை பயன்படுத்தலாம்.

வன்பொருள் கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட வடிவங்கள்[தொகு]

கணினியில் பொருத்தப்பட்டுள்ள முறைவழியாக்கியின் (processor) கட்டமைப்பின் வகைகளை பொறுத்து இவை வெளிவருகின்றன.

  • x86 (PC) வடிவம் (32 இருமம்)
  • PPC (ஆப்பிள் கணினிகள்)
  • 64 bit (64பிட் கட்டமைப்புக்குரியது)

உபுண்டுவின் அளவுகள்[தொகு]

சகோதர செயற்றிட்டங்கள்[தொகு]

  • கேயுபுண்டு (kubuntu) - இது கே டீ ஈ(KDE) பணிச்சூழலை கொண்டுள்ளது. கே டீ ஈ இனை விரும்பும் பயனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
  • எடியுபுண்டு (edubuntu) - இது கற்றல் தொடர்பான தேவைகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட வடிவமாகும்.
  • சுபுண்டு (xubuntu) - இது எக்ஸ் எப் சீ ஈ (xfce) பணிச்சூழலை கொண்டுள்ளது. எக்ஸ் எப் சீ ஈ இனை விரும்பும் பயனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nelson Mandela.The Ubuntu Experience (Nelson Mandela Interview)[Motion picture].
  2. "About Ubuntu. The Ubuntu Story". Canonical Ltd. பார்க்கப்பட்ட நாள் 21 August 2012.
  3. "About the Name". Official Ubuntu Documentation. Canonical. Archived from the original on 23 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. "Ubuntu 5.10 announcement". பார்க்கப்பட்ட நாள் 2006-10-11.
  5. "Ubuntu 5.10 release notes". பார்க்கப்பட்ட நாள் 2006-12-21.
  6. "Ubuntu 6.06 LTS announcement". Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் 2006-12-21.
  7. "Ubuntu 6.06 LTS release notes". பார்க்கப்பட்ட நாள் 2006-12-21.
  8. "Ubuntu 6.10 announcement". Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் 2006-10-26.
  9. "Ubuntu 6.10 release notes". Archived from the original on 2008-07-06. பார்க்கப்பட்ட நாள் 2006-12-21.
  10. "Ubuntu 7.04 announcement". பார்க்கப்பட்ட நாள் 2007-02-06.
  11. "Ubuntu 7.10 announcement". பார்க்கப்பட்ட நாள் 2007-02-06.
  12. "Ubuntu 8.04 announcement". பார்க்கப்பட்ட நாள் 2008-04-15.
  13. "Next Ubuntu release to be called Intrepid Ibex, due in October". பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.
  14. "Ubuntu 12.04 announcement". Archived from the original on 2016-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-01-11.
  15. "Ubuntu 12.10 announcement". பார்க்கப்பட்ட நாள் 2012-04-23.
  16. "Ubuntu 13.04 announcement". அக்டோபர் 17, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 18, 2012.
  17. https://wiki.ubuntu.com/Releases
  18. https://wiki.ubuntu.com/UtopicUnicorn/ReleaseNotes
  19. "Canonical and Ubuntu". Canonical Ltd. பார்க்கப்பட்ட நாள் 26 October 2012.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபுண்டு_(இயக்குதளம்)&oldid=3576155" இலிருந்து மீள்விக்கப்பட்டது