குறிப்பெயர் (ஆங்கிலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில இலக்கணத்தில் பெயர்களைக் குறிப்பிட்டுக் காட்டும் சொற்கள் உண்டு. அவற்றைத் தமிழில் குறிப்பெயர் எனலாம். இந்தக் குறியீட்டு மொழியியல் நெறி பிறமொழிகளிலும் உண்டு. ஆங்கித்தில் இதனை language Article அல்லது Grammar Article என்பர்.

ஒரு, ஓர், சில, பல, எல்லாம், இல்லாமை, முழுமை போன்ற சொற்கூறுகளைக் கொண்டு பெயரைக் குறிப்பிட்டுக் காட்டுவர். அந்த இந்த, உந்த என வரும் சொற்களைத் தமிழ் சுட்டெழுத்துச் சொல் எனக் குறிப்பிடுகிறது. அதுபோல எந்த, யார் என்னும் சொற்களையும் வினா-எழுத்துச் சொல் எனக் குறிப்பிடுகிறது.

குறிப்பெயர்கள் பெயர்ச்சொல்லுடன் ஒன்றி அதை மேலும் தெளிவாக விவரிக்கும் ஒரு சொல். அது சில நேரங்களில் பெயர்ச்சொல்லின் எண்ணையும் கொள்ளளவையும் கூட உணர்த்திவரும். எ-கா: the, a, an, some போன்றவை. குறிப்பிடும் பெயரின் உறுதித் தன்மை அல்லது இன்மையை உணர்த்தும் வழக்கம் உண்டு. பிற இடங்களில் சூழற்பொருள் கொண்டு புரிந்து கொள்ளப்படும் என்பர். [1]

ஆங்கிலத்தில் குறிப்பெயர்களை நான்கு வகையாக்கிக் காட்டுவர்.

  • நிச்சயக் குறிப்பெயர் (Definite Article)
  • நிச்சயமற்ற குறிப்பெயர் (Indefinite Article)
  • பலவற்றுள் ஒன்றன் குறிப்பெயர் (Partitive Article)
  • இன்மைக் குறிப்பெயர் (Zero Article)

மேலும் காண்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Annamalai, E.; Steever, S.B. (1998). "Modern Tamil". in Steever, Sanford B.. The Dravidian Languages. London: Routledge. பக். 100–128. ISBN 0415100232.  at p. 109.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிப்பெயர்_(ஆங்கிலம்)&oldid=3900234" இலிருந்து மீள்விக்கப்பட்டது