தீ முக்கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீ முக்கோணம்

தீ முக்கோணம் அல்லது எரிதல் முக்கோணம் (Fire triangle) என்பது பெரும்பான்மையாக தீ வளர அவசியமான உட்பொருள்களை புரிந்துகொள்ள உதவும் எளிய முன்மாதிரி வடிவம்.
தீ முக்கோணம் என்பது தீ எரிவதற்கு தேவையான வெப்பம், எரிபொருள், ஆக்சிசன் ஆகிய முக்கிய மூன்று மூலகங்கள் பற்றி விளக்குகிறது. இந்த மூலகங்கள் மூன்றும் சரியான விகிதத்தில் கலக்கும்போது தீ உண்டாகிறது. இந்த மூன்றில் ஒன்றை அதிலிருந்து விலக்கும்போது தீ பரவுவதை தடுக்க முடியும். உதாரணமாக தீ பாதுகாப்புப் போர்வை மூலம் ஆக்சிசன் உள் செல்வதைத் தடுத்து தீ பரவுவதைத் தடுக்க முடியும்.

தீ நான்முகி[தொகு]

தீ நான்முகி

தீ நான்முகத்திண்மத்தில், தீ முக்கோணத்தில் ஏற்கனவே உள்ள மூன்று மூலகங்களுடன் இரசாயன சங்கிலி வேதிவினை என்ற மற்றொரு கூறும் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. தீ பற்ற ஆரம்பித்த உடன் வெப்பம் உமிழ் வேதிவினை தீயை பரப்ப உதவுகிறது. நுரை தீக்கு தேவையான ஆக்சிசனை தடுத்து சங்கிலி வேதிவினை நடைபெறாமல் செய்யும். தண்ணீர் தீக்கு தேவையான எரிபொருளை தடைசெய்யும். ஹேலோன் நேரடியாக மூலக்கூறுகளுக்கு இடையே செயல்பட்டு சங்கிலி வேதிவினையைத் தடுக்கும்.
எரிதலின்போது, இரசாயன சங்கிலி வேதிவினை, தீக்கு மேலும் வெப்ப ஆற்றலைக் கூட்டுக்கிறது . முக்கியமாக இலித்தியம், மக்னீசியம், தைட்டானியம், போன்ற உலோகங்களில் (டி வகுப்பு தீ என அழைக்கப்படும்) தீ எரியும் போது, அது இன்னும் முக்கியமான ஆற்றலை வெளியிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த உலோகங்கள், தண்ணீர் மற்றும் ஆக்சிஜனுடன் வேகமாக வினைப்பட்டு அதிக ஆற்றலை வெளியிடும். அதனால் இந்தவகை தீயில் தண்ணீரை ஊற்றுவதால் தீ மேலும் வலுப்பெறம், சில நேரங்களில் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. தைட்டானியம் போன்ற சில உலோகங்களில் கார்பன் டை ஆக்சைடு தீயணைப்பானைப் பயன்படுத்துவது பயனற்றது. எனவே உலர் மணலை இவ்வகைத் தீயில் பயன்படுத்துவதால் இரசாயன சங்கிலி வேதிவினையைத் தடுக்க முடியும்.
கூடிய விரைவில் நான்முகத்திண்மத்திலுள்ள ஏதாவது ஒரு மூலத்தை தீயிலிருந்து நீக்கும் போது தீயை அணைப்பது எளிதாகிறது.

ஆக்சிகரணி[தொகு]

ஆக்சிகரணி(oxidizer) , வேதிவினையில் மற்றொரு வினைபொருள் ஆகும். பொதுவாக வளிமண்டல காற்று குறிப்பாக ஆக்சிசன் வினைபொருளாக தீயில் செயல்படுகிறது. ஆக்சிசன் தீ உட்கொள்வதை தடுக்கும் போது தீ அணைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, தீ பற்ற வைக்கும் போது துருத்தி (குழாய் போன்ற அமைப்பு) மூலம் காற்றை ஊதும் போது தீ அந்த காற்றிலுந்து ஆக்சிசனை எடுத்து வேகமாக வளரும். ஆனால் ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கும் போது அதன் மீது ஒரு கண்ணாடிக் குவளைக் கொண்டு மூடும் போது அந்த தீ அணைக்கப்படும்.
தீ பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நெருப்பைத் தூண்டுவதன் மூலம் உருவாகிறது.அதற்கு பல உதாரணங்கள் உண்டு அவை உராய்வு, தீக்குச்சி, சூடான மின் கம்பி, ஒரு தீப்பொறி போன்றவை ஆகும். மேலும் மின்சாரம், கதிர்வீச்சு மற்றும் அதிக அழுத்தம், வெப்பம் அதிகரித்தலுக்கு காரணமாக அமையும். வெப்பம் அதிகரிக்கும் போது தீப்பிடிக்க வாய்ப்பு அதிகம். ஒரு தீப்பொறி மிகப் பெரிய தீயாக மாற வேதிவினை உதவுகிறது. எந்த வெப்ப நிலையில் ஒரு திரவம், தீப்பிடிப்பதற்கான ஆவியை தன்னில் உருவாக்குகிறதோ அந்த நிலை அந்த திரவத்தின் பளிச்சீட்டுநிலை(flash point) எனப்படும்.

தீயை அணைத்தல்[தொகு]

போதுமான வெப்பம் இல்லாமல் ஒரு தீ உருவாக மற்றும் தொடர்ந்து எரியத் தொடங்காது. எனவே அதிக வெப்பம் உருவாவதைத் தடுக்கும்போது தீ உருவாவதைத் தடுக்கலாம். பெரும்பான்மையாக தண்ணீர் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது. வாயு மற்றும் சில பொடிகளின் மூலம் வெப்பத்தைக் குறைப்பதை அறிமுகம் செய்துள்ளனர்.
மின்சாரத்தை அனைத்து வைப்பதன் மூலமும் மின்சாரத்தால் உருவாகும் வெப்பம் மற்றும் தீயைத் தடுக்க முடியும்.
எரிபொருள் மேலும் தீயுடன் சேர்வதை தடுப்பதன் மூலம் தீ பரவுவதைத் தடுக்கலாம். .பொதுவாக காட்டில் ஏற்படும் தீக்கு எரிபொருள் முக்கியமான ஒன்று.
போதுமான அளவு ஆக்சிசன் இல்லாமல் தீ உருவாகவே முடியாது. எனவே ஆக்சிசன் தீயில் சேருவதைத் தடுக்க தீ பாதுகாப்புப் போர்வை அல்லது கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பான் பயன்படுத்தப்படுகிறது.

தீயணைக்கும் பணியில் நீரின் பங்கு[தொகு]

நீர், தீ அணைப்பில் இரண்டு முக்கிய பணிகளை செய்கிறது. முதலாவது தீயினால் உருவாகும் வெப்ப மற்றும் இதர கதிர்வீச்சுக்களை தடுக்கும், இரண்டாவது நீர் தீயுடன் எரிபொருள் சேர்வதைத் தடுத்து தீயை குறைக்கும். வாயுக்களில் தீ எரியும் போது எரிவதற்குத் தேவையான வாயுவை, நீராவி துளிகளை அதிலிடுவதன் மூலம் தீ தடுக்கப்படும். தீ அணைப்பில் இது வாயு குளிரூட்டல் என அழைக்கப்படுகிறது.
சில நேரங்களில் தீயை அணைக்க பயன்படுத்தும் பொருள், தீக்கு மேலும் ஆற்றலை தந்து தீயை வலுவாக்கவும். தீப்பிடித்த பொருளை வெடிக்கவைக்கவும் மற்றும் தீயுடன் சேர்ந்து மேலும் தீயா விளைவுகளைத் தர வாய்ப்புள்ளது.எனவே தண்ணீரை அணைத்து தீக்கும் பயன்படுத்தக் கூடாது.
தீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்த கூடாத இடங்கள் பின்வருமாறு

  • மின்சாரம் பாயும் இடங்கள் – நீர், மின்சாரத்தை கடத்தும் என்பதால் மின்சாரம் பாயும் இடங்களில் நீரை பயன்படுத்தக் கூடாது.
  • நீரகக்கரிமத் தீகளில் – நீரகக்கரிமத்தின் அடர்த்தி தண்ணீரை விட குறைவு என்பதால் தீ தண்னீரில் மிதந்து வேறு இடத்தில் பரவ வாய்ப்புள்ளது.
  • உலோகங்களில் தீ – உலோகங்களில் தீ பற்றி எரியும் போது நீரை உபயோகம் செய்வதன் மூலம் நீர் அந்த உலோகத்துடன் மேலும் வேதிவினை புரிந்து தீக்கு மேலும் ஆற்றலை கொடுக்கும்.

மேலே குறிப்பிட்ட இடங்களில் தீயை அணைக்க நீருடன் சில சர்ப்பிகளை (additives) சேர்த்து பயன்படுத்தலாம் அவை பின்வருமாரு:

  • வெப்பத்தை உட்கவரும் நீரை விட அதிக அடர்த்தி உடைய நீர் சர்ப்பிகள்.
  • நீரில் நுரையை உருவாக்கும் சர்ப்பிகளை பயன்படுத்தும் போது நுரை நீரைவிட குறைவான அடர்த்தி என்பதால் அது நீரில் மிதந்து தீயை அணைக்கும்.
  • நீர் சர்ப்பிகள் பொதுவாக சில சிறப்பு வகையான தீயை அணைக்கவே பயன்படுத்துவார்கள்( வகுப்பு A மற்றும் வகுப்பு B இணைந்த தீக்கு மற்றும் வகுப்பு A மற்றும் வகுப்பு B மற்றும் F)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_முக்கோணம்&oldid=2746310" இலிருந்து மீள்விக்கப்பட்டது