சுனில் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனில்
பிறப்புசுனில் வர்மா இந்துக்கூரி
28 பெப்ரவரி 1974 (1974-02-28) (அகவை 50)
பீமாவரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996-தற்போது வரை

சுனில் வர்மா (தெலுங்கு: సునీల్ వర్మ), ஒரு தெலுங்கு நகைச்சுவை நடிகர். இவர் அந்தால ராமுடு (2006), திரைப்படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்தார், பிறகு 2010-ம் ஆண்டு இயக்குநர் எஸ். எஸ். ராஜமெளலியின் மரியாத ராமன்னா (2010) திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இவர் தன்னுரைய நகைச்சுவை நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இவர் இயக்குநர் வீரபத்திரன் திரைப்படமான பூல ரங்கடு (2012) படத்திற்காக சிக்ஸ் பேக் ஏற்றியிருக்கிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

1974-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் திகதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பீமாவரத்தில் பிறந்தார், இவருடைய ஐந்தாவது அகவையில் தன்னுடைய தந்தையை பறிகொடுத்தார், தன்னுடைய தாயின் பராமரிப்பில் வளர்ந்தார்.

இவர் நடிகர், சிரஞ்சீவியின் தீவிர ரசிகர், தன்னுடைய பள்ளி பருவத்தில் சிறந்த நடனக்கலைஞராக வர வேண்டுமென்று எண்ணினார். இவர், வட்டார நடன் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றார். இவருடைய ஆசிரியரின் அறிவுரையின்படி, கலைத்துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார். அதன்பிறகு, மேடை நாடகத்தில் நடிக்கத்தொடங்கினார். இவருடைய தோற்றத்தின் காரணமாக, இவருக்கும் வரும் வாய்ப்புகள் குறையத்தொடங்கியது.

1995-ம் ஆண்டு, இவர் திரைத்துறையில் நடனக்கலைஞராக நுழைந்தார். ஐதராபாத்தில் உள்ள ஒரு நடனப்பள்ளியிலும் இணைந்தார். இவருக்கு வில்லனாக நடிக்க அவா இருந்தபோதும், நகைச்சுவை நடிகராக நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. இவர் இயக்குநர் திரிவிக்ரமின் நெருங்கிய நண்பராவார்.

திரை வாழ்க்கை[தொகு]

சுனிலின் திரை வாழ்க்கை ஆரம்ப காலத்தில் மிகவும் சிக்கலாக அமைந்தது. இவர் நடித்த செகன்ட் ஹேன்ட் பாதியில் நிறுத்தப்பட்டது.

ப்ரேம கதா மற்றும் சுயம்வரம் ஆகியவையே இவருடைய திரை வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியிட்டது. சிறு நவ்வுட்டோ மற்றும் நுவ்வே காவாலிஆகிய படங்களில் முதலில் நடித்தார். இவற்றுல், நுவ்வே காவாலி திரைப்படம் முதலில் வெளியானது.[1]

2006-ம் ஆண்டு, ஆர்த்தி அகர்வாலுடம் இணைந்து, அந்தால ராமுடு திரைப்படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்தார் பிறகு எஸ். எஸ். ராஜமெளலி இயக்கத்தில், சலோனியுடன் இணைந்து மரியாத ராமன்னா திரைப்படத்திலும் கதையின் நாயகனாக நடித்தார். மரியாத ராமன்னா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுனில் தெலுங்கு திரைத்துறையில் ஒரு கதாநாயகனாக வலம் வரத் தொடங்கினார். இவர் ராம் கோபால் வர்மாவுடன், கதா ஸ்கிரீன்ப்ளே தர்ஷக்தவம் அப்பலராஜு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பிப்ரவரி 18, 2012-ம் ஆண்டு வெளியானது.

சுனில் நடிப்பில் வெளியான பூல ரங்கடு திரைப்படம் உலகம் முழுவதிலும் 450 - திரையரங்கில் வெளியானது, நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது, ராமு வெட்ஸ் சீதா திரைப்பத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பூல ரங்கடு திரைப்படத்திற்குப் பிறகு, பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், சுனிலுடம் படம் செய்ய முன்வந்துள்ளனர். சுனில் நகைச்சுவையாளராக இருந்த போது, சுமார் 15 லட்சங்கள் சம்பளமாக பெற்றவர், தற்போது, 3 கோடி வரையிலும் உயர்த்தியுள்ளார்.

விருதுகள்[தொகு]

நந்தி விருதுகள்
  • சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருது - நுவ்வு நேனு (2001)
  • சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருது - அந்துருடு (2005)
  • சிறப்பு நடுவர் விருது - மரியாத ராமன்னா (2010)
பிலிம்பேர் விருதுகள்
  • சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு) - பேடாபாபு (2004)

திரைப்படங்கள்[தொகு]

வருடம் பெயர் கதாப்பாத்திரம்
2000 பாப்பே நா ப்ராணம்
2001 தோழி வலப்பு
1999 சுயம்வரம்
2000 நுவ்வே காவாலி
2002 சொந்தம்
2001 பேமிலி சர்க்கஸ்
2001 மனசந்த நுவ்வே
2001 நுவ்வு நாக்கு நச்சாவு பந்தி
2000 சிறு நவ்வுட்டோ
2002 நுவ்வு லேக்க நேனு லேனு
2002 கலுசுக்கோவலனி
2001 நுவ்வு நேனு
2002 சந்தோசம் (2002)
2002 நுவ்வே நுவ்வே பாண்டு
2002 இந்த்ரா
2002 மன்மதடு பங்க் சீனு
2003 தாகூர் பூஸ்ட்
2003 நீ மனசு நாக்கு தெலுசு கபில்
2003 சிம்மாச்சலம்
2003 நின்னே இஷ்டப்பட்டானு
2004 வர்ஷம்
2004 ஆர்யா பஞ்சிங்க் பலாக்நாமா
2004 தொங்கா தொங்கடி
2004 கொடுக்கு
2004 நானி விஜய் குமார்
2004 லக்ஷ்மி நரசிம்மா
2004 மல்லீஸ்வரி பத்து
2004 நேனுன்னானு
2004 மாஸ்
2005 அந்துருடு
2005 நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா
2005 அத்தடு
2005 பாலு ஏ.பி.சி.டி.ஈ.எப்.ஜி
2005 ஜெய் சிரஞ்சீவா தனுஷ்கோடி
2006 ராக்கி
2006 ஸ்டாலின்
2006 அந்தால ராமுடு ராமு
2006 பெளர்ணமி
2006 சிறீ ராமதாசு
2006 பொமரில்லு சட்டி
2006 லக்ஷ்மி
2007 தீ கத்தி
2007 யோகி
2007 ஆட்டா
2007 நவ வசந்தம்
2007 துபாய் சீனு
2007 ஆடவாரி மாட்டலாக்கு அர்த்தலு வேறுலு
2008 புஜ்ஜிகாடு
2008 நேனு மீக்கு தெலுசா
2008 ஜல்சா
2008 கதாநாயக்கடு கட்டிங் கந்தா ராவ்
2008 கந்த்ரி ரஜ்னி ஹாசன்
2008 சிந்தாக்காயல ரவி பென்டுர்த்தி பாபு
2008 பலே தொங்கலு
2008 கிருஷ்ணா
2008 ரெடி ஜானகி
2008 பருகு
2008 கிங் சரத்
2009 அ ஆ இ ஈ
2009 ரெச்சிப்போ
2009 சலீம்
2009 ஏக் நிரஞ்சன்
2009 ஆ ஒக்கடு
2009 ஜோஷ்
2009 மஹதீரா
2009 மஷ்கா
2009 துரோனா
2009 ஓய்! அபிஷேக்
2011 உடத்த உடத்த ஊச்
2010 ஓம் சாந்தி
2010 பிந்தாஸ்
2010 ப்ரவாராக்யுடு
2010 சம்போ சிவ சம்போ
2010 மரியாத ராமன்னா ராமு
2010 கலேஜா
2011 கதா ஸ்கிரீன்ப்ளே தர்ஷக்தவம் அப்பலராஜு அப்பலராஜு
2011 மிரப்பக்காய் சாருகேஷா
2011 தொங்கலா முத்தா
2012 பூல ரங்கடு ரங்கா
2012 ஊ கொடத்தாரா? உளிக்கி படத்தாரா?
2012 ப்பந்தி
2012 ராதா கிருஷ்ணுடு

குறிப்புகள்[தொகு]

  1. Sunil - Telugu Cinema interview (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_வர்மா&oldid=3713530" இலிருந்து மீள்விக்கப்பட்டது