பசலி ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாஸ்லி ஆண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரு பசலி (உருது: فسلى, அரபு: فصلى) ஆண்டு என்பது ஆங்கில வருடத்தில் ஜூலை 1 ஆரம்பித்து ஜூன் 30 அன்று முடியும். இந்த ஒரு வருடத்தில் இரண்டு விவசாய பருவ காலங்கள் இருக்கும் - ஒன்று கரீப் பருவம் (Kharif) எனப்படும் குறுவை சாகுபடி மற்றொன்று ராபி (Rabi) எனப்படும் சம்பா சாகுபடி. இந்த இரண்டு விவசாயக் காலங்களிலும் என்னென்ன பொருட்கள், எந்த அளவில் உற்பத்தி செயப்பட்டன என்பதை அறிந்து அவற்றின் அடிப்படையில் அந்த வருட நிலவரி வசூலிக்கப்படும்.[1]

வரலாறு[தொகு]

முகலாயர் ஆட்சியில் நிலவரி வசூலிக்கும் காலத்திற்கு பசலி எனப்படும். இது பாரசீக மொழிச் சொல்லாகும்.[2] இதற்கு தமிழில் அறுவடைக்காலம் எனப்படும். அறுவடை முடைந்த பிறகு வசூலிக்கப்படும் நிலவரியை பசலி என்ற ஆண்டுக்கணக்கில் வசூலிப்பர்.

தழிழ்நாட்டில் பெயர் மாற்றம்[தொகு]

தமிழ்நாட்டில் பசலி ஆண்டு என்ற சொல் தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறைகள் மட்டுமே பயன்படுத்துகிறது. தமிழ் வளர்ச்சி துறையானது தனது சுற்றறிக்கையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வருவாய் துறைகள் இனி பசலி என்பதற்குப் பதிலாக வருவாய் ஆண்டு மற்றும் நிலவரி ஆண்டு எனக் குறிப்பிடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.[3]

ஜமாபந்தி[தொகு]

பசலி ஆண்டின் முடிவில் அதாவது சூன் மாதத்தில் தமிழ்நாட்டின் அனைத்து வருவாய் வட்டங்களிலும் நடைபெறும் ஜமாபந்தி எனும் வருவாய்த் துறை குறை தீர்ப்பாயம் கூட்டத்தில் நிலவரி கணக்கு, சிட்டா, பட்டா, அடங்கல் போன்ற கணக்குகளை தணிக்கை செய்து சரிபார்ப்பர். பொதுமக்கள் அவ்வமயம் தங்களது நிலப்பிரச்சனைக்களை கூறி சரிசெய்து கொள்ளலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பசலி ஆண்டு - என்றால் என்ன?". தி இந்து. 25 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2013.
  2. வருவாய்த்துறையில் தொடரும் பிற மொழிச் சொற்கள்
  3. 'பசலி ஆண்டு' பெயர் மாற்றம்
  4. [1428 Fasli Year (2018-2019) Jamabandhi Schedule

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசலி_ஆண்டு&oldid=3779645" இலிருந்து மீள்விக்கப்பட்டது