நற்கருணை சிமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பித்தளையால் ஆன நற்கருணை சிமிழ்

நற்கருணை சிமிழ் (ஆங்கில மொழி: Pyx) என்பது ஒரு சிறிய வட்டவடிவான கொள்கலன் ஆகும். இது கத்தோலிக்கம், பழைய கத்தோலிக்கம் மற்றும் ஆங்கிலிக்கம் ஆகிய சபைகளில் அருள்பொழிவு செய்யப்பட்ட நற்கருணையினை நோயாளிகளுக்கோ அல்லது இறக்கும் தருவாயில் இருப்பவருக்கோ எடுத்து செல்ல பயன்படும் ஒரு பாத்திரம் ஆகும். இது பொதுவாக உள்ளங்கை அளவானதாகவும், குறைந்த எடை உடையதாகவும் இருக்கும். இதனைப்பயன்படுத்த எடுத்து செல்லும் போது இதனை ஒரு சிறிய பையில் இட்டு குருவின் கழுத்தில் கயிறினால் தொங்கவிடுவர். தவறுதலாக நற்கருணையினை தொலைக்காமல் இருக்க இவ்வாறு செய்யப்படுகின்றது. நற்கருணை பேழையிலிருந்து இது அளவிலும் பயன்பாட்டிலும் வேறுபட்டதாகும்.

இது ஆங்கிலத்தில் Pyx என அழைக்கப்படுகின்றது. இதன் மூலச்சொல்லான pyxis என்னும் இலத்தீன் சொல் கிரேக்க சொல்லான πυξίςஇல் இருந்து ஒலிபெயர்க்கப்பட்டது. பாக்ஸ் மர கொள்கலன் என்பது இதன் பொருள்.

வரலாறு[தொகு]

நற்கருணைக்கான புறா வடிவ கலன்

பண்டைய காலத்தின் பிற்பகுதியில் கிழக்கில் நற்கருணையினை புறா வடிவ கலனில் தொங்கவிடும் வழக்கில் இருந்து இக்கலம் உருவானது என்பர். இது பிரான்சு நாட்டில் வழக்கில் இருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Catholic History (March 1997), "Dove. Symbol of the Holy Ghost", The Seraph, vol. XVII No. 7, பார்க்கப்பட்ட நாள் 2007-08-01
"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்கருணை_சிமிழ்&oldid=2223167" இலிருந்து மீள்விக்கப்பட்டது