ஜூலியா மார்கன் மகளிர் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜூலியன் மார்கன் மகளிர் பள்ளி, கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்தில் அமைந்துள்ள பெண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிக்கூடம் ஆகும். இது ஜூலியா மார்கன் என்னும் பெண் கட்டட வல்லுநரின் பெயரால் அமைக்கப்பட்ட பள்ளிக்கூடம் ஆகும். ஜூலியா மார்கனே கலிபோர்னியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வல்லுநர் ஆவார்.

இந்தப்பள்ளியின் கட்டடத்தை ஜூலியா மார்கனே வடிவமைத்து கட்டப்பட்டதாகும். இது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு கட்டடமாக ஓக்லாந்தில் திகழ்கிறது. இது 1924 ஆம் ஆண்டு கட்டப்பட்டப்போது த மிங் குவாங் ஹோம் ஃபார் சைனீஸ் கேர்ல்ஸ் என்ற அனாதை இல்லமாகவும், பள்ளியாகவும் இயங்கியதாகும்.