பைலின் புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடுமையான பைலின் சூறாவளிப் புயல்
Extremely severe cyclonic storm (இ.வா.து. அளவு)
Category 5 (சபிர்-சிம்ப்சன் அளவு)
அக்டோபர் 11 இல் பைலின் புயல்
தொடக்கம்அக்டோபர் 4, 2013 (2013-10-04)
மறைவுஅக்டோபர் 14, 2013 (2013-10-14)
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 215 கிமீ/ம (130 mph)
1-நிமிட நீடிப்பு: 260 கிமீ/ம (160 mph)
தாழ் அமுக்கம்940 hPa (பார்); 27.76 inHg
(அண். 918 hPa - கூட்டுக் கண்காணிப்பு மையத்தின் கணிப்பு)
இறப்புகள்36 பேர் நேரடியாக
பாதிப்புப் பகுதிகள்தாய்லாந்து, மியான்மர், இந்தியா
2013 பசிபிக் சூறாவளிக் காலம்
2013 வட இந்திய சூறாவளிக் காலம்
-இன் ஒரு பகுதி

இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள அந்தமான் கடலில் கடுமையான சூறாவளி புயல் பைலின் புயல் (Phailin) அச்சுறுத்தி வருகிறது. இது ஒரு கடுமையான சூறாவளி புயல் ஆகும். அக்டோபர் 8ல் உருவான இது2013 ல் அந்தமான் கடல் பகுதியில் தோன்றிய சாதாரண புயல் 9 ம் தேதி ஆக்ரோசமாக வழுப்பெற்று மேற்கு நோக்கி இந்தியாவின் பகுதிகளான ஆந்திரா, ஒரிசா பகுதியை கடக்க உள்ளது.[1]இந்திய வானிலை ஆய்வு துறை(India Meteorological Department) IMD இது அக்டோபர் 12 அன்று இரவு இந்திய கிழக்கு கடற்கரை கடக்கும்போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவித்துள்ளது.[2] பைலின்(Phailin) என்றால் தாய்லாந்து மொழியில் ஊதா ரத்தினம் என்று பொருள்.[3]

வளிமண்டலவியல் வரலாறு[தொகு]

அக்டோபர் 4, 2013 ஜப்பான் நாட்டின் வானிலை ஆய்வு மையம் (ஹோ சி மின் நகரம்) 400 கிமீ (250 மைல்) தாய்லாந்து வளைகுடாவில் காற்று வெட்டு ஒரு வெப்பமண்டலம் உறுவாகியுள்ளதை அறிவித்தது. அக்டோபர் 6ல் மலாய் தீபகற்பத்தில் சிறிது நகர்ந்து பசிபிக் கடல் பகுதியில் மேற்கு நோக்கி நகர்வதை கணினி மூலம் அறிந்தார்கள்.[4]

நிலை(12.10.2013)[தொகு]

பைலின் புயல் கலிங்கப்பட்டிணத்திற்கு தென்கிழக்கில் 530 கி.மீ. தொலைவிலும், பாரதீப்பிலிருந்து தென்கிழக்கே 520 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.[5] ஒடிசா மாநிலம் கோபால்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே 12.10.2013 அன்று மாலை 6 மணியளவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் 205 முதல் 220 கி.மீ வேகத்தில் காற்று வீசும், மற்றும் 1.5 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.[6][7] 14 ஆண்டுகளில் இந்தியாவைத் தாக்கும் கடுமையான புயல் இது ஆகும் என்று ஹவாய் தீவுகளில் பேர்ல் துறைமுகத்திலமைந்துள்ள அமெரிக்கக் கடற்படையின் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தை ஒரு புயல் தாக்கிய போது, 9000 பேர் வரை மரணம் அடைந்தார்கள்.[8] ஒடிசா மாநிலத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்து விட்டதாக மாநில அரசு தெரிவித்தது.[9]

முடிவு[தொகு]

12.10.2013 சனிக்கிழமை மாலை, கரையை கடந்த புயலின் கோர தாண்டவத்தால் ஒடிசா மாநிலத்தில் 23 பேர் உயிரிழந்தனர். கோபால்பூர் மாவட்டம், கஞ்சம் மாவட்டம், பாலாசூர் மாவட்டம், ஜகதீஸ்சிங்பூர் மாவட்டம், குர்தா குர்தா மாவட்டம், மற்றும் பட்ரக் மாவட்டம் போன்ற ஒரிசா மாநில மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் இலட்சக்கணக்கான குடிசைகள் சேதமடைந்து, 1.26 கோடி மக்கள் வீடுகளை இழந்தனர்.[10].அதி வேகப் புயல் காற்றல் , மரங்களில் குஞ்சுகளுடன் தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாய்திறந்த நிலையிலுள்ள சைபீரியன் வகைக் கொக்குகள் இறந்துபோயின.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. on high alert as Phailin gains strength
  2. பைலின் புயல்: ஒடிசா, ஆந்திரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
  3. names cyclone threatening Andhra Pradesh coast as Phailin
  4. is Cyclonic Storm Phailin ?[தொடர்பிழந்த இணைப்பு]
  5. disrupts normal life in Srikakulam
  6. ஒடிசாவை நெருங்கும் புயல்; லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்
  7. புயலுக்கு 17 பேர் பலி: 5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்
  8. இந்தியாவை தாக்கும் கடுமையான புயல்: அமெரிக்கா எச்சரிக்கை
  9. மாநிலத்தில் பைலின் புயல் தாக்குதலில் 26 லட்சம் மரங்கள் சாய்ந்தன
  10. புயலுக்கு 23 பேர் பலி: 5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்
  11. "பைலின் புயலின் சீற்றம் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைபீரியன் கொக்குகள் பலி". தீக்கதிர்: p. 3. 16 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலின்_புயல்&oldid=3648385" இலிருந்து மீள்விக்கப்பட்டது