அஷ்டமுடி ஏரி

ஆள்கூறுகள்: 8°59′N 76°36′E / 8.983°N 76.600°E / 8.983; 76.600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஷ்டமுடி ஏரி
அமைவிடம்கொல்லம், கேரளா
ஆள்கூறுகள்8°59′N 76°36′E / 8.983°N 76.600°E / 8.983; 76.600
வகைEndorheic
உப்புநீர்
வடிநிலப் பரப்பு1,700 km2 (660 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச ஆழம்6.4 m (21 அடி)
நீர்க் கனவளவு76,000,000,000 km3 (1.8×1010 cu mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்10 m (33 அடி)
உறைவு19 ஆகஸ்டு 2002


அஷ்டமுடி ஏரி (Ashtamudi Lake) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இரண்டாவது ஆழமான மற்றும் பெரிய ஏரியாகும். அஷ்டமுடி என்பதற்கு எட்டு மகுடம் என்று மலையாளம் மொழியில் பொருள். (அஷ்டம்=எட்டு , முடி= மகுடம்) . இந்த ஏரியை மேலே இருந்து பார்த்தால் பல்வேறு கிளைகளுடன் எட்டு மகுடங்களைக் கொண்டுள்ளது போல் தோற்றமளிக்கும். மேலும் இது கேரளாவின் கழிமுகங்களின் (காயல்) நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.[1][2][3][4] இக்கழிமுகத்தின் இருபுறங்களிலும் தென்னை மற்றும் பனை மரங்கள் உள்ளன. இவற்றினூடே கிராமங்கள் அமைந்துள்ளன. கொல்லம் படகுச் சங்கம் மூலம் இயக்கப்படும் படகுகள் பொதுமக்களின் சவாரிக்காக இக்கழிமுகத்தில் இயக்கப்படுகிறது. இதைத்தவிர சொகுசுப் படகுகளும் இயக்கப்படுகின்றன. இச் சொகுசுப் படகில் பயணம் 8 மணி நேரங்கள் ஆகும். இச்சொகுசுப் படகானது காயல்கள், மற்றும் கிராமங்களின் வழியாகச் செல்லுவதால் அக்கழிமுகத்தின் சுற்றுப்புறங்களை முழுவதும் ரசிக்க முடியும்.

வர்த்தகம்[தொகு]

இந்த ஏரி இப்பகுதி மக்களின் முக்கிய வருவாய்த் தலமாக அமைந்துள்ளது. மீன்பிடித்தல் மற்றும் தென்னை நார்க் கயிறு தயாரித்தல் ஆகியவை இந்த ஏரியைச் சார்ந்து நடக்கும் தொழில்களாகும்.

சுற்றுலா[தொகு]

இந்த ஏரியில் படகுச் சவாரி முக்கிய சுற்றுலா ஆகும். மேலும் சொகுசுப் படகுகளும் முக்கிய சுற்றுலாவாக அமைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hotelskerala.com/ashtamudi/facilities.htm பரணிடப்பட்டது 2008-06-02 at the வந்தவழி இயந்திரம் Back water Retreat Ashtamudi
  2. http://www.wwfindia.org/about_wwf/what_we_do/freshwater_wetlands/our_work/ramsar_sites/ashtamudi_lake.cfm பரணிடப்பட்டது 2007-12-17 at the வந்தவழி இயந்திரம் Ashtamudi Lake
  3. http://www.kerenvis.nic.in/water/Ramsar%20cites.pdf
  4. "The List of Wetlands of International Importance" (PDF). The Secretariat of the Convention on Wetlands (Ramsar, Iran, 1971) Rue Mauverney 28, CH-1196 Gland, Switzerland. Archived (PDF) from the original on 2008-01-02. பார்க்கப்பட்ட நாள் 2008-01-07.

புகைப்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டமுடி_ஏரி&oldid=3542315" இலிருந்து மீள்விக்கப்பட்டது