ஈராறு கால்கொண்டெழும் புரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈராறு கால்கொண்டெழும் புரவி ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுதி. 2012ல் சொல்புதிது பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. இது நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது[1].

உள்ளடக்கம்[தொகு]

ஈராறு கால்கொண்டெழும் புரவி என்பது காலத்தைப்பற்றி திருமூலர் எழுதிய வரி. இத்தொகுப்பில் உள்ள ஒரு குறுநாவலின் தலைப்பு அது. மெய்ஞானத்துக்கான பயணத்தில் அறிவுக்கும் நுண்ணுணர்வுக்குமான போராட்டத்தை அங்கதச்சுவையுடன் சொல்லும் கதை இது. திருமூலர் பாடல்களும் சித்தர் பாடல்களும் பகடியாகவும் நுண்ணியபொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன

இத்தொகுதியில் மன்மதன், அலை அறிந்தது, பழையமுகம் போன்ற கதைகள் உள்ளன. அதர்வம், களம் ஆகிய இருகதைகள் மகாபாரதப் பின்னணி கொண்டவை.

மேற்கோள்கள்[தொகு]