அகோடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகோடா
வலைத்தள வகைமுன்பதிவு
வணிக நோக்கம்ஆம்
வெளியீடு1998
தற்போதைய நிலைஇயங்குகிறது


அகோடா (Agoda) என்பது சொகுசு விடுதிகளை முன்பதிவு செய்யும் வலைத்தளம் ஆகும். இது குறிப்பாக ஆசியப் பிராந்தியத்தில் செயல்படுகிறது.[1] இதன் தலமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. மேலும் தனது நடவடிக்கைகளை பாங்காக், கோலாலம்பூர், டோக்யோ, சிட்னி, ஹாங்காங் ஆகிய இடங்களில் கொண்டுள்ளது. மேலும் இதன் கிளை நிறுவனங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்நிறுவனம் 1990களில் புக்கிட் நகரத்தில் தொடங்கப்பட்டது. இது முதலில் ப்ளானட் ஹாலிடே (PlanetHoliday) எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இணையதள தேடுதல் பொறிகளில் பயணம் தொடர்பான தகவல்கள் மற்றும் சொகுசு விடுதிகளின் தகவல்களைக் கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டு ப்ரிசிசன் ரிசர்வேசன்ஸ் (PrecisionReservations) என்ற நிறுவனம் இதனுடன் இணைந்தது. 2005 -ல் இதன் பெயர் அகோடா என மாற்றப்பட்டது. இது சிங்கபூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.

இயங்கும் முறை[தொகு]

அகோடா இணையத்தளம் மிகக்குறைந்த விலையில் சொகுசு விடுதி அறைகளை ஏற்பாடு செய்கிறது. இந்த வலைத்தளத்தில் 5,000,000 வாடிக்கையாளர் கருத்துகள் பதிவாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் கருத்துகள் எந்தவித திருத்தமும் செய்யப்படாது. வாடிக்கையாளர் சேவை 24 மணிநேரமும் வருடம் முழுவதும் இயங்குகின்றன. மொத்தம் 17 மொழிகளின் சேவையைத் தருகிறது. மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாகவும் வாடிக்கையாளர்களுக்கு வேண்டியத் தகவல்களைத் தருகிறது. இதன் கைபேசி வடிவ பயன்பாட்டுப் பொறி (mobile apps) ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு வடிவிலும் கிடைக்கிறது.

விருது[தொகு]

டிரவல்மோல் வெப் விருது (Travelmole Web Awards Asia) எனும் விருதை 2008 மற்றும் 2012 ஆண்டுகளில் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Agoda Survey Reveals People Prioritizing Added Perks But Less Likely to Splurge on Stays as It". ryt9.com (in தாய்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோடா&oldid=3600410" இலிருந்து மீள்விக்கப்பட்டது