சிரிய வேதி ஆயுத அழிப்பு ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரியா தன்னிடமுள்ள வேதி ஆயுதங்களையும் வேதி ஆயுத உற்பத்தி வசதிகளையும் அழிப்பதற்கான பொறுப்புகளையும் அதற்கான ஒரு காலக்கோட்டையும் முன்னிறுத்தும் சிரிய வேதி ஆயுத அழிப்பு ஒப்பந்தம் (agreement to eliminate Syria's chemical weapons) செப்டம்பர் 2013இல் பல அமைப்புகள் மூலம் நிறைவேறியது. செப்டம்பர் 27, 2013 அன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ஒருமனதாக பாதுகாப்பு அவை சட்டத்திருத்தம் 2118 என்பதை நிறைவேற்றியது. இத்திருத்தம் ஏற்கனவே வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பினால் (OPCW) எடுக்கப்பட்ட சில முடிவுகளையும் உள்ளடக்கியிருந்தது. இந்த பாதுகாப்பு அவை திருத்தம் ஏற்கனவே நடந்த பல உடன்பாடுகளின் விளைவாக செப்டம்பர் 14, 2013 அன்று உருவான "சிரிய வேதி ஆயுதங்களை அழிப்பதற்கான கட்டமைப்புகள்" (Framework for Elimination of Syrian Chemical Weapons) என்ற ஒரு உடன்படிக்கையை உருசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்படுத்தியது. அதன்படி சிரிய வேதி ஆயுதங்களை 2014ஆம் ஆண்டின் இடைப்பகுதிக்குள் அழித்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.[1][2][3]


மேற்கோள்கள்[தொகு]

  1. "China Welcomes Russia-U.S. Framework Agreement on Syria: Wang". Bloomberg. 22 September 2013. http://www.bloomberg.com/news/2013-09-15/china-welcomes-russia-u-s-framework-agreement-on-syria-wang.html. பார்த்த நாள்: 15 September 2013. "China welcomes a framework agreement signed by Russia and the U.S." 
  2. Spokesperson (September 14, 2013).Framework for Elimination of Syrian Chemical Weapons. state.gov. Retrieved September 14, 2013.
  3. Gordon, Michael R. (September 14, 2013).U.S. and Russia Reach Deal to Destroy Syria’s Chemical Arms. The New York Times. Retrieved September 14, 2013.