திருப்புகழ் (அருணகிரிநாதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நகம், தாள நூட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது.

தொகுப்பும், பதிப்பும்[தொகு]

1800களின் நடுவில் சென்னை மாகாணத்தில் பிறந்து மாவட்ட நீதிபதியாக இருந்தவர் வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை. ஒரு சமயம் சிதம்பரத்துக்கு அவர் பயணித்துக் கொண்டிருதபோது, அருணகிரிநாதரின் திருப்புழை பயணிகள் பாடுவதைக் கேட்டு மயங்கினார்.[1] அதன் பிறகு திருப்புகழ் பாடல்களை தொகுக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அதற்காக 1871 இல் தென்னிந்தியா முழுவதும் பயணித்து சுவடிகள் உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து, அருணகிரிநாதரின் பாடல்களை இரு தொகுதிகளாக வெளியிட்டார்.[1] அவை 1894 இல் முதற் பதிப்பும், 1901 இல் இரண்டாம் பதிப்புமாக வெளியாயின.[1]

வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையின் மறைவுக்குப் பிறகு அவரது பணிகளை முன்னெடுத்த அவரின் மகன் வ. சு. செங்கல்வராய பிள்ளை திருப்புகழுக்கு முழுமையாக உரை எழுதி ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் வெளியிடும் பணியை மேற்கொண்டார். 1950 முதல் 1958 வரையிலான ஏழாண்டு காலம் இப்பணியில் முழுமையாக ஈடுபட்டு நூல்களை வெளியிட்டார்.[1]

புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "நூல் வெளி: எங்கும் புகழ் மணக்கும் திருப்புகழ்!". Hindu Tamil Thisai. 2023-06-10. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.