சீலாந்து

ஆள்கூறுகள்: 51°34′N 3°45′E / 51.567°N 3.750°E / 51.567; 3.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீலாந்து
Zeeland

Zealand
நெதர்லாந்தின் மாகாணம்
சீலாந்து Zeeland-இன் கொடி
கொடி
சீலாந்து Zeeland-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: இலத்தீன்: Luctor et emergo,
டச்சு: Ik worstel en kom boven
("நான் போராடி வெளிவருகிறேன்")
பண்: "Zeeuws volkslied"
நெதர்லாந்தின் சீலாந்தின் அமைவிடம்
நெதர்லாந்தின் சீலாந்தின் அமைவிடம்
Location of சீலாந்து Zeeland
ஆள்கூறுகள்: 51°34′N 3°45′E / 51.567°N 3.750°E / 51.567; 3.750
நாடுநெதர்லாந்து
தலைநகர்மிடெல்புர்க்
பெரிய நகரம்தெர்நியூசென்
அரசு
 • அரச ஆணையர்கான் போல்மன் (சனநாயகவாதிகள் 66)
 • நகரசபைசீலாந்து மாநிலங்கள்
பரப்பளவு (2017)[1]
 • மொத்தம்2,934 km2 (1,133 sq mi)
 • நிலம்1,783 km2 (688 sq mi)
 • நீர்1,151 km2 (444 sq mi)
பரப்பளவு தரவரிசை8-ஆவது
மக்கள்தொகை (1 நவம்பர் 2019)[2]
 • மொத்தம்3,83,689
 • தரவரிசை12-ஆவது
 • அடர்த்தி216/km2 (560/sq mi)
 • அடர்த்தி தரவரிசை10-ஆவது
இனங்கள்Zeeuw
மொத்த பிராந்திய தயாரிப்பு[3]
 • மொத்தம்€15.874 பில்.
 • தலைக்கு€41,600
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+01:00)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+02:00)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுNL-ZE
மமேசு (2018)0.906[4]
very high · 10th
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

சீலாந்து (Zeeland, இடச்சு: [ˈzeːlɑnt] (கேட்க); வரலாற்று ஆங்கிலப் புறப்பெயர்: Zealand) என்பது நெதர்லாந்தின் மேற்கு மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும். இம்மாகாணம் நெதர்லாந்தின் தென்மேற்கே அமைந்துள்ளது, இதன் எல்லைகளாக கிழக்கே வடக்கு பிராபர்ன்ட், வடக்கே தெற்கு ஒல்லாந்து, தெற்கு மற்றும் மேற்கே பெல்சியம் நாடும் உள்ளன. இது பல தீவுகளையும் மூவலந்தீவுகளையும் (எனவே இதன் பெயர், "சீலாந்து", கடல்நாடு என்று பொருள்படும்), கிழக்கு மற்றும் மேற்கு மேற்கு பிளாண்டர்சு மாகாணங்களின் எல்லையில் ஒரு துண்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் தலைநகர் மிடல்புர்க், 2019 நவம்பரில் 48,544 மக்கள்தொகையாக இருந்தது.[5] சீலாந்தின் மிகப்பெரிய மாநகரம் தெர்நியூசென் (மக்கள்தொகை 54,589). சீலாந்தில் இரண்டு துறைமுகங்கள் உள்ளன. விளிசிங்கன், தெர்நியூசென் ஆகியன. சீலாந்தின் பரப்பளவு 2,934 சதுரகிமீ ஆகும், இதில் 1,151 சதுரகிமீ நீர்ப்பகுதி ஆகும். மொத்த மக்கள்தொகை 383,689.[2]

சீலாந்தின் பெரும்பாலான பகுதிகள் கடல்மட்டத்திற்குக் கீழே உள்ளன. 1953 இல் ஏற்பட்ட வடகடல் வெள்ளப்பெருக்கே கடைசியாக இங்கு ஏற்பட்ட வெள்ள்ம் ஆகும். சுற்றுலா ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கையாகும். கோடையில், அதன் கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக செருமனிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமாக அமைகிறது. சில பகுதிகளில், அதிகமான கோடை காலத்தில் மக்கள்தொகை இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். சீலாந்தின் சின்னம் தண்ணீரில் இருந்து பாதியாக வெளிப்பட்ட சிங்கத்தைக் காட்டுகிறது, மேலும் luctor et emergo (இலத்தீன் மொழியில் "நான் போராடி வெளிவருகிறேன்") என்பதாகும்.[6] நியூசிலாந்து நாடு டச்சு ஆய்வாளர் ஏபெல் தாசுமனால் பார்க்கப்பட்டதால், சீலாந்தின் பெயரால் அது பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oppervlakte".
  2. 2.0 2.1 "CBS Statline". opendata.cbs.nl.
  3. "EU regions by GDP, Eurostat". பார்க்கப்பட்ட நாள் 18 September 2023.
  4. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  5. "CBS Statline". opendata.cbs.nl.
  6. DeWaard, Dirk Marc (1983). Luctor et Emergo: The impact of the Second World War on Zeeland (M.A. thesis) Wilfrid Laurier University

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சீலாந்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலாந்து&oldid=3823750" இலிருந்து மீள்விக்கப்பட்டது